![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a1/Mongol_invasions_of_Japan_1274%252C_1281.jpg/640px-Mongol_invasions_of_Japan_1274%252C_1281.jpg&w=640&q=50)
மங்கோலியர்களின் ஜப்பானியப் படையெடுப்புகள்
From Wikipedia, the free encyclopedia
மங்கோலியர்களின் ஜப்பானியப் படையெடுப்புகளானவை (元寇, Genkō?) 1274 மற்றும் 1281 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றன. கொரியியோ என்று அழைக்கப்பட்ட ஒரு கொரிய ராச்சியத்தை கப்பம் கட்டுமாறு அடிபணிய வைத்த பிறகு குப்லாய் கான் ஜப்பானிய தீவுகளை வெல்வதற்காக ராணுவ முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் இத்திட்டம் இறுதியில் தோல்வியில் முடிந்தது. இந்த படையெடுப்பு முயற்சிகள் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. ஏனெனில் மங்கோலிய விரிவாக்கத்திற்கு இவை ஒரு எல்லையை வகுத்தன. ஜப்பானிய வரலாற்றில் தேச முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இது கருதப்படுகிறது. பல்வேறு புனைகதைகளில் இந்த படையெடுப்புகள் பற்றிக் கூறப்பட்டுள்ளது. கமிகசே ("தெய்வீகக் காற்று") என்ற சொல் பரவலாக பயன்படுத்தப்பட்ட ஆரம்ப கால நிகழ்வுகள் இவையாகும். மங்கோலிய கப்பல்கள் எதிர்கொண்ட 2 சூறாவளிகளை ஜப்பானியர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர்.
மங்கோலியர்களின் ஜப்பானியப் படையெடுப்பு | |||||||
---|---|---|---|---|---|---|---|
மங்கோலியர்களின் கிழக்கு ஆசியப் படையெடுப்பு மற்றும் குப்லாய்கானின் படையெடுப்புகள் பகுதி | |||||||
![]() 1274 மற்றும் 1281 இல் மங்கோலியர்களின் ஜப்பானியப் படையெடுப்புகள் |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
யப்பான் | மங்கோலியப் பேரரசு
|
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() மிச்சியசு ஷிரோயிஷி ![]() ![]() ஹிடா நகமோட்டோ மிட்சுயி யசுனகா ![]() ![]() சஷி ஹுசாஷி சஷி நவோ சஷி டோடோ சஷி இசமு இஷிஜி கனே இஷிஜி ஜிரோ ![]() | மங்கோலியர்கள் : குப்லாய் கான் கோல்டோன் லியு புகெங் அடகை கோங் தகு அலா தெமுர் பன் வென்கு லி டிங் கொரியா : அரசர் ஓன்ஜோங் அரசர் சுங்னியோல் கிம் பங்-கியோங் |
||||||
பலம் | |||||||
1274: 2,000-6,000[1] 1281: 40,000 (?) ரோகுஹரா தன்டையின் வலுவூட்டல் படைகள்: 60,000 (அந்நேரத்தில் வந்து சேரவில்லை) | 1274: 28,000-30,000[2][3] 1281: 100,000 and மற்றும் 40,000[4] மேலும் 3,500 மற்றும் 900 கப்பல்கள் (முறையே) |
||||||
இழப்புகள் | |||||||
1274/1281: குறைந்த அளவு[சான்று தேவை] | 1274: 13,500[5] 1281: 100,000[6] 20,000–30,000 பேர் பிடிக்கப்பட்டனர்[7] |
சீனாவுக்கு வெளியில் வெடி மருந்தானது உபயோகப்படுத்தப்பட்ட ஆரம்பகால நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப முன்னேற்றமாக இந்தப் போரின் போது வெடிக்கக்கூடிய, கைகள் மூலம் எரியக்கூடிய வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டன.[8]