மகேந்திரசிங் சர்வையா
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
மகேந்திரசிங் சர்வையா (Mahendrasinh Sarvaiya) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இவரது தந்தையின் பெயர் பராக்ரம்சிங் என்பதாகும். பனிரெண்டாம் வகுப்பு வரை படித்துள்ள இவர் குசராத்து மாநிலத்திலுள்ள பாலிதானா சட்டமன்றத் தொகுதியில் இருந்து அதன் 12 ஆவது சட்டமன்றத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.[1] குசராத்து மாநிலத்தின் பாரதிய சனதா கட்சியின் துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். குசராத்து வீட்டு வசதி வாரியத்தின் தலைவராகவும், பாரதிய சனதா கட்சியின் பவநகர் மாவட்டத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.[2]
விரைவான உண்மைகள் மகேந்திரசிங் சர்வையாMahendrasinh Sarvaiya, குசராத்து சட்டமன்ற உறுப்பினர் ...
மகேந்திரசிங் சர்வையா Mahendrasinh Sarvaiya | |
---|---|
குசராத்து சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2007–2012 | |
முதலமைச்சர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | மன்சுக் எல். மாண்டவியா |
தொகுதி | பாலிதானா |
குசராத்து வீட்டுவசதி வாரியத் தலைவர் | |
பதவியில் 2017–2020 | |
குசராத்து பாரதிய சனதா கட்சி துணைத் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2021 | |
மாநிலத் தலைவர். | சி. ஆர் பாட்டீல் |
மூடு