பொக்காரா வானூர்தி நிலையம்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
பொக்காரா வானூர்தி நிலையம் (Pokhara Airport)(ஐஏடிஏ: PKR, ஐசிஏஓ: VNPK) என்பது நேபாளத்தில் உள்ள பொக்காராவிற்கு விமானச் சேவை செய்யும் உள்நாட்டு வானூர்தி நிலையம் ஆகும். பொக்ரா வானூர்தி நிலையம் படிப்படியாக நேபாளத்தின் மூன்றாவது பன்னாட்டு வானூர்தி 2023-ல் தகுதி உயர்த்தப்பட உள்ளது.[4] சனவரி 1, 2023 அன்று பெரும்பாலான செயல்பாடுகள் புதிய விமான நிலையத்திற்கு மாற்றப்பட்டாலும், ஜோம்சோமுக்கான குறுகிய வானூர்தி செயல்பாடுகள் இன்னும் இந்த விமான நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.[5]
பொக்காரா வானூர்தி நிலையம் Pokhara Airport पोखरा विमानस्थल | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பொக்காரா வானூர்தி நிலையம் 2022-l | |||||||||||
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
உரிமையாளர் | நேபாள அரசு | ||||||||||
இயக்குனர் | நேபாள விமானப் போக்குவரத்து முகமை | ||||||||||
சேவை புரிவது | பொக்காரா, நேபாளம் | ||||||||||
கவனம் செலுத்தும் நகரம் |
| ||||||||||
உயரம் AMSL | 2,712 ft / 827 m | ||||||||||
ஆள்கூறுகள் | |||||||||||
நிலப்படம் | |||||||||||
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Nepal Gandaki Province" does not exist. | |||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
| |||||||||||
பொக்காரா வானூர்தி நிலையம் நேபாளத்தின் பொது விமானப் போக்குவரத்து ஆணையத்தால் 4 சூலை 1958-ல் நிறுவப்பட்டது. 2010கள் வரை, இது காத்மாண்டு மற்றும் ஜோம்சோமுக்கு வழக்கமான சேவையினை வழங்கியது. மனாங்கிற்கு பருவகால சேவைகளை செய்தது. 2011ஆம் ஆண்டில், நேபாளி தனியார் விமான நிறுவனமான புத்தா ஏர், பொக்ராவிலிருந்து இந்தியாவின் இலக்னோவில் உள்ள சவுத்ரி சரண் சிங் பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்குப் பன்னாட்டு விமானங்களைத் தொடங்கியது.[6] மேலும் எதிர்காலத்தில் புதுதில்லியின் இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கும் விமானச் சேவைத் திட்டத்தை அறிவித்தது.[7] இருப்பினும் இந்த பன்னாட்டுச் சேவைகள் விரைவில் நிறுத்தப்பட்டன.
2010களின் பிற்பகுதியில், பல்வேறு மாகாணங்களுக்கான விமானங்களைக் கையாளும் நேபாளத்தின் இரண்டாவது உள்நாட்டு மையமாக பொக்காரா வானூர்தி நிலையம் விளங்கியது.[8]
2023ஆம் ஆண்டில், வானூர்தி நிலையம் படிப்படியாகப் பன்னாட்டு வானூர்தி நிலையமாக மாற்றப்படும்.
விமான நிலையத்தின் விமான நிறுத்துமிடம் ஒப்பீட்டளவில் சிறியது மற்றும் ஒரே நேரத்தில் எட்டு உந்தியுடன் கூடிய விமானங்களை மட்டுமே கையாள முடியும். பொக்காரா விமான நிலையம், மூடுபனி போன்ற பிரச்சனைகளின் போது காத்மாண்டு வானூர்தி நிலையத்திலிருந்து மாற்றிவிடபப்டும் முக்கிய விமானங்களைக் கையாளும் வகையில் செயல்படுகிறது. குறுகிய ஓடுபாதை மற்றும் நெரிசலான நிறுத்துமிடம் காரணமாக, விமானங்கள் பெரும்பாலும் குறுகிய ஓடுபாதைகளுடன் கூடிய மூன்றாவது விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்படும் நிலையும் உள்ளது.[9]
பல இலகுரக விமான நிறுவனங்கள் பொக்காரா விமான நிலையத்திலிருந்து பொழுதுபோக்கு மற்றும் பார்வையிடும் விமானச் சேவைகளை வழங்குகின்றன. [11]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.