பேப்பரா காட்டுயிர் உய்விடம்
கேரளத்திலுள்ள காட்டுயிர் உய்விடம் From Wikipedia, the free encyclopedia
கேரளத்திலுள்ள காட்டுயிர் உய்விடம் From Wikipedia, the free encyclopedia
பேப்பாரா வனவிலங்கு சரணாலயம் (Peppara Wildlife Sanctuary) என்பது இந்தியாவின், கேரளத்தின், திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள ஒரு வனவிலங்கு சரணாலயமாகும் . இது கரமண ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ளது. இந்த சரணாலயத்திற்குள் மிக உயரமான மலையாக செம்முஞ்சிமோட்டைக் கொண்டுள்ளது. திருவனந்தபுரம் நகரம் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு குடிநீர் பகிர்மானத்தை அதிகரிக்க கட்டபட்ட பேப்பரா அணையின் பெயர் இந்த சரணாலயத்துக்கு இடப்பட்டது. இப்பகுதியின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, இது 1983 இல் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இதன் நில அமைப்பானது 100 மீ முதல் 1717 மீ வரை உயரம் மாறுபடுகிறது. இந்த சரணாலயமானது வெப்பமண்டல ஈரமான பசுமையான காடுகள் மற்றும் மிரிஸ்டிகா சதுப்பு நிலங்கள் கொண்டதாக 75 கிமீ 2 பரப்பளவோடு உள்ளது.[1] பேப்பரா வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகில் உள்ள தொடருந்து நிலையம் 44 கிலோமீட்டர்கள் (27 mi) தொலைவிலுள்ள திருவனந்தபுரம் தொடருந்து நிலையமாகும். இருகில் உள்ள வானூர்தி நிலையம் 49 கிலோமீட்டர்கள் (30 mi) தொலைவில் உள்ள திருவனந்தபுரம் வானூர்தி நிலையமாகும்.
பேப்பரா காட்டுயிர் உய்விடம் | |
---|---|
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி) | |
பேப்பரா அணையில் இருந்து சரணாலயத்தின் தோற்றம் | |
அமைவிடம் | இந்தியா, கேரளம், திருவனந்தபுரம் மாவட்டம் |
அருகாமை நகரம் | திருவனந்தபுரம் 44 கிலோமீட்டர்கள் (27 mi) |
ஆள்கூறுகள் | 8°38′50″N 77°10′0″E |
நிறுவப்பட்டது | 1983 |
நிருவாக அமைப்பு | சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம், கேரள வனத்துறை |
www |
பேப்பாரா வனவிலங்கு சரணாலயம் திருவனந்தபுரம்- பொன்முடி சாலையில் திருவனந்தபுரத்தின் வடகிழக்கில் சுமார் 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது
இதன் மலைப்பாங்கான பகுதிகளின் உயரமானது 100 மீட்டர்கள் (330 அடி) முதல் 1,717 மீட்டர்கள் (5,633 அடி) வரை மாறுபடுகின்றது. சரணாலயத்தின் முக்கிய சிகரங்கள் செம்முஞ்சிமொட்டை (1717 மீ), ஆதிருமலை (1594 மீ), ஆறுமுகம்குன்னு (1457 மீ), கோவில்தேரிமலை (1313 மீ), நச்சியாடிகுன்னு (957 மீ) என்பவையாகும். இப்பகுதியின் ஆண்டு சராசரி மழை 2,500 மில்லிமீட்டர்கள் (98 அங்) ஆகும். இங்கு பாயும் முதன்மை ஆறுகள் கரமனா ஆறு, அதன் துணை ஆறுகளுமாகும்.
இங்குள்ள வன வகைகளில் மேற்கு கடற்கரை வெப்பமண்டல பசுமைமாறா காடுகள், தெற்கு மலையக வெப்பமண்டல பசுமைமாறா காடுகள், மேற்கு கடற்கரை அரை பசுமைமாறா காடுகள், தெற்கு ஈரமான கலப்பு இலையுதிர் காடுகள், மைரிஸ்டிகா சதுப்புநிலக் காடுகள், துணை மொன்டேன் மலை பள்ளத்தாக்கு சதுப்பு காடுகள் போன்றவை அடங்கும்.
இங்கு காணப்படும் பொதுவான மரம் இனங்களாக தெர்மினலியா பானிகுலாட்டா, டி. பெல்லெரிக்கா, வேங்கை மரம், பலாக்கியம் எலிப்டிகம், நாகமரம், ஹோப்பியா பர்விஃப்ளோரா, கோங்கு, நாவல் மரம், லாகர்ஸ்ட்ரோமியா மைக்ரோகார்பா, அல்பீசியா புரோசெரா, ஏழிலைப்பாலை, முதலியன உள்ளளன.
இந்த சரணாலயத்தில் பலவகையான பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, நீர்நிலவாழ்வனவைகள் உள்ளன. இங்கு 43 வகையான பாலூட்டிகள், 233 வகையான பறவைகள், 46 வகையான ஊர்வன, 13 வகையான நீர்நிலவாழ்வன, 27 வகையான மீன்கள் சரணாலயத்தில் உள்ளதாக பதிவாகியுள்ளன. புலி, சிறுத்தை, தேன் கரடி, யானை, கடமான், குல்லாய் குரங்கு, நீலகிரி மந்தி, நீலகிரி வரையாடு ஆகிய பொதுவான பாலூட்டிகள் உள்ளன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.