![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c1/Mosque_City_of_Bagerhat_montage.png/640px-Mosque_City_of_Bagerhat_montage.png&w=640&q=50)
பேகர்காட்டின் பள்ளி வாசல் நகரம்
வங்காள்தேசத்தில் அமைச்ந்துள்ள வரலாற்று நினைவுச் சின்னங்கள் / From Wikipedia, the free encyclopedia
பேகர்காட் நகரின் பள்ளிவாசல்கள் (Mosque City of Bagerhat) (வரலாற்று ரீதியாக கலீபதாபாத் என்றும் அழைக்கப்படுகிறது) வங்காளதேசத்தின் பேகர்காட் மாவட்டத்திலுள்ள ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் உலக பாரம்பரிய தளமாகும். இதில் 360 பள்ளிவாசல்கள், பொதுக் கட்டிடங்கள், கல்லறைகள், பாலங்கள், சாலைகள், தண்ணீர் தொட்டிகள் மற்றும் சுட்ட செங்கலால் கட்டப்பட்ட பிற பொது கட்டிடங்கள் உள்ளன. 15 ஆம் நூற்றாண்டில் வங்காள சுல்தானகத்தின் ஆட்சியின்போது பள்ளிவாசல்கள் கட்டப்பட்டன, இதில் அறுபது தூண் பள்ளிவாசல் மிகப்பெரியது. மற்றவைகளில் சிங்கார் பள்ளிவாசல், ஒன்பது தூண் பாள்ளிவாசல், கான் ஜகானின் கல்லறை, பீபி பெக்னி பள்ளிவாசல் மற்றும் ரோன்விஜய்பூர் பள்ளிவாசல் ஆகியவை அடங்கும். வங்காள சுல்தான் மக்மூத் சா என்பவரால் சுந்தரவனக் காடுகளின் ஆளுநராக நியமிக்கப்பட்ட உலுக் கான் ஜஹான் என்பவரால் கட்டப்பட்டது. இது "இந்திய துணைக் கண்டம் முழுவதிலும் ஈர்க்கக்கூடிய முஸ்லிம் நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும்" என்று விவரிக்கப்பட்டுள்ளது.
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம் | |
---|---|
![]() மேலிருந்து கடிகார திசையிலிருந்து: அறுபது தூண் பள்ளிவாசல், ஒன்பது தூண பள்ளிவாசல், சுனா கோளா பள்ளிவாசல், ரோன்விஜய்பூர் பள்ளிவாசல், பீபி பெக்னி பள்ளிவாசல் மற்றும் சிங்கார் பள்ளிவாசல் | |
அமைவிடம் | வங்காளதேசம் |
கட்டளை விதி | பண்பாட்டுக் களம்: (iv) |
உசாத்துணை | 321 |
பதிவு | 1985 (9-ஆம் அமர்வு) |
ஆள்கூறுகள் | 22°39′39.5″N 89°45′30.8″E |