![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/ff/Pervez_Musharraf_-_World_Economic_Forum_Annual_Meeting_Davos_2008_numb2.jpg/640px-Pervez_Musharraf_-_World_Economic_Forum_Annual_Meeting_Davos_2008_numb2.jpg&w=640&q=50)
பெர்வேஸ் முஷாரஃப்
From Wikipedia, the free encyclopedia
பெர்வேஸ் முஷாரஃப் (Pervez Musharraf; 11 ஆகத்து 1943 – 5 பெப்ரவரி 2023) பாகிஸ்தானின் முன்னாள் இராணுவத் தளபதியும் அதிபரும் ஆவார். இவர் 1999 ஆம் ஆண்டில் பிரதமர் நவாஸ் செரிபின் ஆட்சியைக் கலைத்து இராணுவ சதிப்புரட்சி மூலம் நாட்டின் அதிபரானார். பதவியேற்றவுடன் இராணுவப் பதவியைக் கைவிடுவதாக அறிவித்த போதும் அதனைச் செய்ய மறுத்தார். இனிவரும் தேர்தலில் வெற்றி பெற்றால் இராணுவத் தளபதிப் பொறுப்பில் இருந்து விலகுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இவர் அமெரிக்கச் சார்புக் கொள்கையைக் கையாண்டு வருகின்றார்.[1]
பெர்வேசு முசாரப் Pervez Musharraf | |
---|---|
پرویز مشرف (உருது) | |
![]() முசாரப் தாவோசு, உலக பொருளாதார மன்றத்தில் (2008) | |
10-வது பாக்கித்தான் அரசுத்தலைவர் | |
பதவியில் 20 சூன் 2001 – 18 ஆகத்து 2008 | |
பிரதமர் | சபாருல்லா கான் சமாலி சவுத்ரி உசைன் சௌக்காத் அசீசு மியான் சூம்ரோ (பதில்) யூசஃப் ரசா கிலானி |
முன்னையவர் | முகமது ரபீக் தாரர் |
பின்னவர் | மியான் சூம்ரோ (பதில்) |
பாக்கித்தானின் தலைமை நிறைவேற்று அதிகாரி | |
பதவியில் 12 அக்டோபர் 1999 – 21 நவம்பர் 2002 | |
குடியரசுத் தலைவர் | முகமது ரபீக் தாரர் |
முன்னையவர் | நவாஸ் ஷெரீப் (பிரதமர்) |
பின்னவர் | சபாருல்லா சமாலி (பிரதமர்) |
பாதுகாப்பு அமைச்சர் | |
பதவியில் 12 அக்டோபர் 1999 – 23 அக்டோபர் 2002 | |
முன்னையவர் | நவாஸ் ஷெரீப் |
பின்னவர் | ராவ் இக்பால் |
தலைவர், படை அதிகாரிகள் குழு | |
பதவியில் 8 அக்டோபர் 1998 – 7 அக்டோபர் 2001 | |
முன்னையவர் | ஜெகாங்கீர் கரமாத் |
பின்னவர் | அசீசு கான் |
தலைவர், இராணுவ அதிகாரிகள் | |
பதவியில் 6 அக்டோபர் 1998 – 28 நவம்பர் 2007 | |
முன்னையவர் | செகாங்கீர் கரமாத் |
பின்னவர் | அசுபக் கயானி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பெர்வேஸ் முஷாரஃப் 11 ஆகத்து 1943 (1943-08-11) (அகவை 80) தில்லி, பிரித்தானிய இந்தியா (இன்றைய இந்தியா) |
இறப்பு | 5 பெப்ரவரி 2023(2023-02-05) (அகவை 79) துபாய், ஐக்கிய அரபு அமீரகம் |
தேசியம் | பாக்கித்தானியர் |
அரசியல் கட்சி | அனைத்துப் பாக்கித்தான் முசுலிம் முன்னணி |
பிற அரசியல் தொடர்புகள் | பாக்கித்தான் முசுலிம் முன்னணி (Q) |
துணைவர் | சேபா முசாரப் |
பிள்ளைகள் | அய்லா (மகள்) பிலால் (மகன்) |
முன்னாள் கல்லூரி | போர்மன் கிறித்துவக் கல்லூரி பாக்கித்தான் இராணுவ கல்வி நிலையம் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் ரோயல் பாதுகாப்புக் கல்லூரி |
விருதுகள் | ![]() ![]() ![]() ![]() |
Military service | |
பற்றிணைப்பு | ![]() |
கிளை/சேவை | ![]() |
சேவை ஆண்டுகள் | 1961–2007 |
தரம் | ![]() ![]() |
அலகு | பீரங்கிப்படை |
கட்டளை | I கோர்ப்சு சிறப்பு சேவைகள் பிரிவு டிஜி, இராணுவ நடவடிக்கைகள் 40-வது இராணுவப் பிரிவு, ஒக்காரா |
போர்கள்/யுத்தங்கள் | இந்தியா-பாகிஸ்தான் போர், 1965 1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர் சியாச்சின் பிணக்கு கார்கில் போர் ஆப்கான் உள்நாட்டுப் போர் (1996–2001)]] 1999 பாக்கித்தான் இராணுவப் புரட்சி 2001-2002 இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதற்றம் |
2007 மார்ச் மாதம் நாட்டின் உயர்நீதிமன்ற நீதிபதியைப் பதவி விலக்கியதில் இருந்து மக்கள் மத்தியில் இவரது செல்வாக்குக் குறையத் தொடங்கியது. மேலும் 2007 ஜூலை மாதம் இவரது கட்டளைப்படி இஸ்லாமாபாத்தின் செம்மசூதியை ஒரு வாரம் வரையில் முற்றுகையிட்டிருந்த பாகிஸ்தானிய இராணுவம் உள்நுழைந்து அதில் தங்கியிருந்த அல்-கைடா ஆதரவுத் தீவிரவாதிகளைக் கொன்றது.[1]
2008இல் ஆகஸ்ட் 18ஆம் தேதி, இவர் பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.