பெர்தானா தாவரவியல் பூங்கா
From Wikipedia, the free encyclopedia
பெர்தானா தாவரவியல் பூங்கா; (மலாய்: Taman Botani Perdana; ஆங்கிலம்: Perdana Botanical Gardens; சீனம்: 湖滨公园) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரில் அமைந்து உள்ள ஒரு தாவரவியல் பூங்காவாகும். மலேசியாவின் முதல் பெரிய அளவிலான பொழுதுபோக்குப் பூங்கா எனவும் அறியப் படுகிறது.
பெர்தானா தாவரவியல் பூங்கா Perdana Botanical Gardens Taman Botani Perdana | |
---|---|
கோலாலம்பூர் ஏரி பூங்கா | |
வகை | பூங்கா |
அமைவிடம் | கோலாலம்பூர், கூட்டாட்சிப் பகுதி, மலேசியா |
பரப்பு | 91.6 எக்டேர் (226 ஏக்கர்) |
உருவாக்கப்பட்டது | 1888 |
Operated by | கோலாலம்பூர் மாநகராட்சி |
நிலை | அனைத்து நாட்களிலும் திறந்து இருக்கும் |
இந்தப் பூங்கா பொதுவாக பெர்தானா ஏரி பூங்கா (Perdana Lake Gardens); அல்லது ஏரிப் பூங்கா (Lake Gardens); மற்றும் பொது பூங்கா (Public Gardens) எனவும் அழைக்கப் படுகிறது. இதன் பரப்பளவு 91.6 ஹெக்டர் ஆகும். இது நகரின் மையத்தில், 1888 இல் நிறுவப்பட்டது.[1]
குடியேற்றக் காலத்தின் போது கோலாலம்பூர் நகரத்தின் சுவாரசியமான மற்றும் பொழுதுபோக்குப் புகலிடமாக இந்தப் பூங்கா அமைக்கப்பட்டது. இங்கு பெரிய அளவிலான செதுக்கப்பட்ட மரங்கள் மற்றும் அழகுபடுத்தப்பட்ட தோட்டங்கள் உள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.