From Wikipedia, the free encyclopedia
பூந்தி சமஸ்தானம் பூந்தி இராச்சியம் (Bundi State) இந்தியாவின் கிழக்கில் உள்ள இராஜஸ்தான் மாநிலத்தின் பழைய பூந்தி மாவட்டத்தின் நிலப்பரப்பளவைக் கொண்டது. இந்த இராச்சியத்தை ஹட இராசபுத்திரர் குலம் ஆட்சி செய்தது.[1] இதன் தலைநகரமாக பூந்தி நகரம் இருந்தது. பூந்தி இராச்சியத்தின் பரப்ப்ப்ளவு 5,750 சதுர மைல் ஆகும். இதன் மக்கள் தொகை 2,16,722 ஆகும். 1947=இல் இந்திய விடுதலைக்குப் பின்னர் பூந்தி இராச்சியம் அரசியல்சட்ட முடியாட்சியாக 6 ஏப்ரல் 1949 வரை இருந்தது. பின்னர் சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி 7 ஏப்ரல் 1949 அன்று இந்திய விடுதலைக்குப் பின்னர் பான்ஸ்வாரா சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்கப்பட்டது
Bundi State बूँदी रियासत | |||||||
---|---|---|---|---|---|---|---|
1342–1949 | |||||||
குறிக்கோள்: "தர்மம் வெல்லும்;அதர்மம் தோற்கும்" Let religion prevail, iniquity perish | |||||||
சமயம் | இந்து சமயம் | ||||||
வரலாறு | |||||||
• தொடக்கம் | 1342 | ||||||
1949 | |||||||
பரப்பு | |||||||
• மொத்தம் | 5,750 km2 (2,220 sq mi) | ||||||
மக்கள் தொகை | |||||||
• 1931 | 216,722 | ||||||
| |||||||
தற்போதைய பகுதிகள் | பூந்தி மாவட்டம், இராஜஸ்தான், இந்தியா | ||||||
இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: "Bundi". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. |
கிபி 1242-இல் பூந்தி பகுதியை ஜெய்த்திய மீனா இன குலத்தினர் ஆண்டு வந்தனர். இதனை 1342-இல் இராவ் தேவன் என்ற சௌகான் இராஜபுத்திர குலத் தலைவர் கைப்பற்றி ஆண்டார். 1632-இல் ராவ் இராஜா சத்தர் சல் பூந்தி இராச்சிய மன்னரானார். இவர் அவுரங்கசீப் படைகளுடன் வீரமாக போரிட்டு இறந்தார்.[2][3] சத்தர் சல் சிங்கின் மகன் இராவ் பாவோ சிங் (1658–1678) பூந்தி இராச்சிய மன்னரானார். 1707-ஆம் ஆண்டில் முகலாயப் பேரரசர் முதலாம் பகதூர் ஷா, பூந்தி இராச்சிய மன்னர் பூத் சிங்கிற்கு மகாராஜா எனும் பட்டம் வழங்கினார்.[4]
1804-இல் மராத்தியப் பேரரசின் கீழ் இருந்த ஓல்கர்களுக்கு எதிராக படையெடுத்த பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனிக்கு ஆதரவாக பூந்தி மன்னர் இராஜா பிஷண் சிங் (1773–1821) படையுதவி செய்தார். 1895-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியா கொண்டு வந்த இந்தியத் துணைப்படைத் திட்டத்தின் கீழ் பான்ஸ்வாரா இராச்சியம், பிரித்தானிய இந்தியா அரசுக்கு ஆண்டுதோறும் திறை செலுத்தும் சமஸ்தானமானது. [5][6][7] இது பிரித்தானிய இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் இந்தியப் பகுதியில் இருந்த 565 சமஸ்தானங்களில் ஒன்றாகும்.
1947=இல் இந்திய விடுதலைக்குப் பின்னர் பூந்தி இராச்சியம் அரசியல்சட்ட முடியாட்சியாக 6 ஏப்ரல் 1949 வரை இருந்தது. பின்னர் சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி 7 ஏப்ரல் 1949 அன்று இந்திய விடுதலைக்குப் பின்னர் பான்ஸ்வாரா சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.[8]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.