புவித் திணிவு
From Wikipedia, the free encyclopedia
புவித் திணிவு (Earth mass, ME அல்லது M🜨, இங்கு U+1F728 🜨 புவியின் வழக்கமான வானியல் சின்னம் ஆகும்.), என்பது புவியினது திணிவை ஒத்த ஒரு அலகு. 1 M🜨 = 5.9722 × 1024 கிகி[2]. பொதுவாக பாறைகளைக் கொண்ட கோள்களின் திணிவுகள் புவித்திணிவின் சார்பாகக் கொடுக்கப்படுகின்றன.
புவித் திணிவு Earth mass | |
---|---|
![]() "எனக்குப் போதுமான நீளமான நெம்புகோலையும் அதனை வைக்க ஒரு பொறுதியையும் கொடுங்கள், நான் பூமியை நகர்த்துவேன்" என்ற ஆர்க்கிமிடீசின் சிலேடையின் 19 ஆம் நூற்றாண்டு ஓவிய விளக்கம்.[1] | |
பொது தகவல் | |
அலகு முறைமை | வானியல் |
அலகு பயன்படும் இடம் | திணிவு |
குறியீடு | M🜨 |
அலகு மாற்றங்கள் | |
1 M🜨 இல் ... | ... சமன் ... |
SI அடிப்படை அலகு | (5.9722±0.0006)×1024 kg |
அமெரிக்க வழக்கு | ≈ 1.3166×1025 இறாத்தல் |

சூரியக் குடும்பத்தில் உள்ள புதன், வெள்ளி, பூமி, மற்றும் செவ்வாய் ஆகிய நான்கு கோள்களினதும் திணிவுகள் முறையே 0.055, 0.815, 1.000, 0.107 புவித்திணிவுகள் ஆகும்.
ஒரு புவித்திணிவு என்பது:
- 81.3 சந்திரனின் திணிவு (ML)
- 0.003 15 வியாழனின் திணிவு (MJ) (வியாழன் = 317.83 x புவித்திணிவு)[3]
- 0.0105 சனியின் திணிவு (சனி = 95.16 x புவித்திணிவு)[4]
- 0.0583 நெப்டியூன் திணிவு (நெப்டியூன் = 17.147 x புவித்திணிவு)[5]
- 0.000 003 003 சூரியத் திணிவு (M⊙)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.