![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f0/BeruasMuseum.jpg/640px-BeruasMuseum.jpg&w=640&q=50)
புருவாஸ்
மலேசியா, பேராக் மாநிலத்தில், மஞ்சோங் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு சிறுநகரம். / From Wikipedia, the free encyclopedia
புருவாஸ் அல்லது பெருவாஸ், (மலாய்: Beruas; ஆங்கிலம்: Beruas; சீனம்: 木威) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில், மஞ்சோங் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம். ஈப்போ மாநகரத்தில் இருந்து 73 கி.மீ.; தைப்பிங் பெருநகரத்தில் இருந்து 53 கி.மீ.; தொலைவில் அமைந்து உள்ளது. இந்த நகரத்திற்கு அருகாமையில் உள்ள நகரங்கள் பந்தாய் ரெமிஸ்; பாரிட்.
![]() புருவாஸ் அருங்காட்சியகம் | |
![]() | |
ஆள்கூறுகள்: 4°30′0″N 100°47′0″E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
உருவாக்கம் | கி.பி. 500 |
பரப்பளவு | |
• மொத்தம் | 192.8 km2 (74.4 sq mi) |
மக்கள்தொகை (2015) | |
• மொத்தம் | 9,691 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
இணையதளம் | http://www.mpm.gov.my/ |
1970-ஆம் ஆண்டில் பந்தாய் ரெமிஸ் முதன்மைச் சாலைக்கு ஜாலான் கங்கா நெகரா என பெயர் வைக்கப்பட்டு இருந்தது. ஒரு காலக் கட்டத்தில் டிண்டிங் ஆறு லூமுட்டில் இருந்து புருவாஸ் வரை நீண்டு இருந்தது. அந்த ஆற்றின் சுவடுகளை இன்றும் இங்கு காணலாம்.
புருவாஸ் பட்டணத்திற்கு 2 கி.மீ. தொலைவில் கம்போங் கோத்தா (Kg. Kota) எனும் கிராமப்பகுதி உள்ளது. அங்குள்ள பெயர்ப் பலகையில், 2007-ஆம் ஆண்டு வரையில் மாக்காம் ராஜா சோழன் (Makam Raja Cholan) என்று இருந்தது. தற்பொழுது மாக்காம் ராஜா புருவாஸ் (Makam Raja Beruas II) என்று மாற்றப்பட்டு உள்ளது.[1]