புணர்ச்சி விகாரம்
கெடுதல் புணர்ச்சி எடுத்துக்காட்டு From Wikipedia, the free encyclopedia
Remove ads
விகாரம் என்பது இயல்பு மாற்றம்.
மொழியில் இரண்டு சொற்கள் ஒன்று சேர்தலைப் புணர்ச்சி என்கின்றனர். நிலைமொழி, வருமொழி எனப் புணரும் சொற்களுக்குப் பெயர் சூட்டியுள்ளனர். இவை புணரும்போது எந்த வகையான மாற்றமும் இன்றி இணையுமானால் அதனை இயல்பு அல்லது இயல்புப் புணர்ச்சி என்கின்றனர்.[1] முதலில் நிற்கும் நிலைமொழியிலோ, இறுதியில் அதனோடு வந்து சேரும் வருமொழியிலோ மாற்றம் நிகழ்ந்தால் அதனை விகாரப் புணர்ச்சி என்றோ, புணர்ச்சி விகாரம் என்றோ கூறுகின்றனர். இது இருவகை மொழியிலும் மொழியின் முதலிலோ, இடையிலோ, கடையிலோ நிகழும்.[2]
Remove ads
உதாரணம்
தோன்றல் | நன்றென்னா | நன்றென்னா | வருமொழி முதலில் மெய் தோன்றிற்று |
திரிதல் | அல் திணை | அஃறிணை | வருமொழி முதலிலும், நிலைமொழி ஈற்றிலும் உள்ள மெய்கள் திரிந்தன |
கெடுதல் | நிலம் வலயம் | நில வலயம் | நிலைமொழி ஈற்றிலுள்ள [ம்] கெட்டது |
திரிதலும், கெடுதலும் | ஆறு பத்து | அறுபது | 'ஆறு' என்னும் நிலைமொழியில் உள்ள முதலெழுத்தின் நீட்சிதெ திரிபும், 'பத்து' என்னும் வருமொழியில் உள்ள [த்] என்னும் இடையொற்றுக் கேடும் நிகழ்ந்துள்ளன |
தோன்றல், திரிதல், கெடுதல் மூன்றும் | பனை காய் | பனங்காய் | நிலைமொழி 'பனை' என்பதில் உள்ள [ஐ] கெட்டது. 'அம்' என்னும் சாரியை தோன்றிற்று. 'அம்' சாரியை வருமொழிக்கு ஏற்ப 'அங்' எனக் கெட்டது. |
மொழியின் மூவிடத்தும் கெடல் | ஒன்பது பத்து | தொண்ணூறு | நிலைமொழியும், வருமொழியும், முதல், இடை, கடை என்னும் மூவிடத்தும் கெட்டன.[3] |
உயிர் முன் உயிர் (உயிரோடு உயிர்)
உயிர் முன் உயிர் வரின் அங்கு நிலைமொழியும் வருமொழியும் இணையாது. உயிரும் மெய்யும் இணைவதே தமிழ் இலக்கண மரபு. ஆகையால் அதனைத் தமிழ்மரபுக்கு ஏற்றபடி மாற்றும் வகையில் வ்,ய் __ஆகிய மெய் எழுத்துகளில் ஏதேனும் ஒன்று அத்தகு சொற்களுக்கு இடையில் தோன்றும். இத்தகு முறைக்கு உடம்படுமெய் என்று பெயர்.
அ முதல் ஊ வரை
எ முதல் ஔ வரை
வருமொழியின் முதலெழுத்து வல்லினம்
வருமொழியின் முதலெழுத்து மெல்லினம்
வருமொழியின் முதலெழுத்து இடையினம்
Remove ads
வேறுபாடு
அடிக்குறிப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads