பிக் பேஷ் லீக்
From Wikipedia, the free encyclopedia
பிக் பாஷ் லீக் (கே.எஃப்.சி பிக் பாஷ் லீக் என்று அலுவல் முறையில் அழைக்கப்படுகிறது ; பெரும்பாலும் பிபிஎல் அல்லது பிக் பாஷ் என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது) என்பது ஆத்திரேலிய தொழில்முறை இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடர் ஆகும்[3].
![]() | |
நாடு(கள்) | ஆத்திரேலியா |
---|---|
நிர்வாகி(கள்) | ஆத்திரேலியா துடுப்பாட்ட வாரியம் |
வடிவம் | இருபது 20 |
முதல் பதிப்பு | 2011-12 |
கடைசிப் பதிப்பு | 2021-22 |
போட்டித் தொடர் வடிவம் | குழுநிலை மற்றும் தகுதிநிலைச் சுற்றுகள் |
மொத்த அணிகள் | 8 அணிகள் |
தற்போதைய வாகையாளர் | பெர்த் ஸ்கோசேர்ஸ் |
அதிகமுறை வெற்றிகள் | பெர்த் ஸ்கோசேர்ஸ் (4 முறை வெற்றியாளர்) |
அதிகபட்ச ஓட்டங்கள் | கிறிஸ் லின் (3,005)[1] |
அதிகபட்ச வீழ்த்தல்கள் | சீன் அபோர்ட் (125)[2] |
வலைத்தளம் | www |
இதற்கு முன்னால் ஆத்திரேலியாவில் விளையாடப்பட்ட தொழில்முறை இருபது20 தொடரான "கே.எப்.சி இருபது20 பிக் பாஷ்" தொடருக்கு மாற்றாக இத்தொடர் ஆத்திரேலிய துடுப்பாட்ட வாரியத்தால் 2011 இல் நிறுவப்பட்டது. மேலும் ,இத்தொடர் முன்னர் பங்கேற்ற ஆறு மாநில அணிகளுக்குப் பதிலாக எட்டு நகரங்கள் அடிப்படையிலான அணிகளைக் கொண்டது.
இத்தொடருக்கு, துரித உணவு விற்பனை நிறுவனமான கே.எஃப்.சி தொடக்கத்தில் இருந்து நிதியுதவி அளித்து வருகிறது .பிபிஎல் 11 (2021/22) தொடரின் இறுதிப்போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணியை 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெர்த் ஸ்கோசேர்ஸ் அணி வாகை சூடியது.
பிபிஎல் போட்டிகள் ஆத்திரேலியாவில் கோடைக்காலத்தில் (டிசம்பர், ஜனவரி, மற்றும் பிப்ரவரி மாதங்கள்) விளையாடப்படுகிறது.
போட்டியில் பங்கேற்ற எட்டு அணிகளில் ஆறு அணிகள் ஒரு முறையாவது பட்டத்தை வென்றுள்ளன. பெர்த் ஸ்கோசேர்ஸ் அணி இத்தொடரின் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணியாகும். சிட்னி சிக்சர்ஸ் அணி மூன்று முறை பட்டத்தை வென்றுள்ளது. அடிலெயிட் ஸ்ரைக்கர்ஸ், மெல்போர்ன் ரெனிகேட்ஸ், பிரிஸ்பேன் ஹீட் மற்றும் சிட்னி தண்டர் ஆகிய நான்கு அணிகள் பட்டத்தை தலா ஒருமுறை வென்ற மற்ற நான்கு அணிகள் ஆகும்.