பால்பா மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
பால்பா மாவட்டம் (Palpa District) (நேபாளி: पाल्पा जिल्लाகேட்கⓘ, தெற்காசியாவின் நேபாள நாட்டின், மேற்கு வளர்ச்சி பிராந்தியத்தில், மாநில எண் 5-இல் அமைந்துள்ளது. இது நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் தான்சேன் நகரம் ஆகும்.
லும்பினி மண்டலத்தில் உள்ள பால்பா மாவட்டத்தின் பரப்பளவு 1,373 சதுர கிலோ மீட்டர் ஆகும். 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்ட மக்கள் தொகை 2,61,180 ஆகும்.[1]