From Wikipedia, the free encyclopedia
பாரதிய கிரந்தி தளம் (பா. கி. த.) என்பது இந்தியாவில் உத்தரப் பிரதேச முதல்வர் சரண் சிங்கால் உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியாகும். அக்டோபர் 1967 இல் லக்னோவில் நடந்த கூட்டத்தில் கட்சி நிறுவப்பட்டது.[1] 1977 பொதுத் தேர்தலுக்குப் பிறகு, பாரதிய கிரந்தி தளத்தின் பின் வந்த கட்சியான பாரதிய லோக் தளம் ஜனதா கட்சியில் இணைக்கப்பட்டது.[2]
பாரதிய கிரந்தி தளம் | |
---|---|
நிறுவனர் | சரண் சிங் |
தொடக்கம் | அக்டோபர் 1967 |
பின்னர் | பாரதிய லோக் தளம் |
நிறங்கள் | பச்சை |
தேர்தல் சின்னம் | |
இந்தியா அரசியல் |
1967 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி ஹுமாயூன் கபீர் அனைத்து காங்கிரஸ் அல்லாத முதலமைச்சர்கள் மற்றும் பிற முக்கிய தலைவர்களின் கூட்டத்தை தில்லியில் ஏற்பாடு செய்தபோது பா. கி. த. உருவாவதற்கான விதைகள் விதைக்கப்பட்டன.[3] நவம்பர் 1967 இல் பா. கி. த. வின் இந்தூர் அமர்வில், கட்சியின் முதல் தலைவராக மகாமாயா பிரசாத் சின்கா தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.