பாடாங் ரெங்காஸ் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
பாடாங் ரெங்காஸ் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Padang Rengas Railway Station மலாய்: Stesen Keretapi Padang Rengas); சீனம்: 巴东仁加斯火车站) என்பது தீபகற்ப மலேசியா, பேராக், கோலாகங்சார் மாவட்டம், பாடாங் ரெங்காஸ் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் பாடாங் ரெங்காஸ் நகரத்திற்கும்; மற்றும் கோலாகங்சார் மாவட்டத்தின் சுற்றுப்புறங்களுக்கும் சேவை செய்கிறது.[1][2]
விரைவான உண்மைகள் பாடாங் ரெங்காஸ் தொடருந்து நிலையம்Padang Rengas Railway Station, பொது தகவல்கள் ...
பாடாங் ரெங்காஸ் தொடருந்து நிலையம் | |||||||||||||||||||||
பொது தகவல்கள் | |||||||||||||||||||||
அமைவிடம் | பாடாங் ரெங்காஸ், பேராக் | ||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 4.766667°N 100.85°E / 4.766667; 100.85 | ||||||||||||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து நிறுவனம் | ||||||||||||||||||||
நடைமேடை | 2 தீவு மேடைகள் | ||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 4 | ||||||||||||||||||||
கட்டமைப்பு | |||||||||||||||||||||
தரிப்பிடம் | உண்டு | ||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | |||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||
மறுநிர்மாணம் | 2013 | ||||||||||||||||||||
மின்சாரமயம் | 2015 | ||||||||||||||||||||
சேவைகள் | |||||||||||||||||||||
| |||||||||||||||||||||
|
மூடு
ஈப்போ - பாடாங் பெசார் மின்மயமாக்கல்; மற்றும் இரட்டை தண்டவாளத் திட்டத்தின் (Ipoh-Padang Besar Electrification and Double-Tracking Project) ஒரு பகுதியாக 2015-ஆம் ஆண்டில், தற்போதைய பாடாங் ரெங்காஸ் நிலையம் பாடாங் ரெங்காஸ் நகரத்தில் கட்டப்பட்டது.[3]