பாசு
பாக்கித்தானிலுள்ள ஒரு கிராமம் / From Wikipedia, the free encyclopedia
பாசு ( Passu ) என்பது பாக்கித்தானின் வடக்கு நிலங்கள் எனப்படும் கில்கித் பால்டிஸ்தானின் கோஜல் பள்ளத்தாக்கிற்கு மேல் கன்சா என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமாகும். கன்சா பள்ளத்தாக்கிலுள்ள காரகோரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இதன் எளிதில் அணுகக்கூடிய பரந்த நிலப்பரப்புகள் மற்றும் 7,478 மீ (24,534 அடி) உயரமான பாசு சர் மலை, பாசு பனிப்பாறை மற்றும் துபோப்டன் [டி] 6,106 மீ (20,033 அடி) ஆகியவற்றின் காட்சிகள் காரணமாக[1] இது, பாக்கித்தானிலுள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாக உள்ளது.