பாகன் டத்தோ மாவட்டம்
மலேசியாவின் பேராக் மாநிலத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
பாகன் டத்தோ மாவட்டம் (Bagan Datuk District) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டம் 951 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதன் மக்கள் தொகை 70,300 ஆகும்.
விரைவான உண்மைகள் பாகன் டத்தோ மாவட்டம்Daerah Bagan Datuk பேராக், நாடு ...
![]() பாகன் டத்தோ மாவட்டம் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 3°55′N 100°55′E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | பாகன் டத்தோ |
நகராட்சி | பாகன் டத்தோ நகராட்சி |
அரசு | |
• மாவட்ட அதிகாரி | அம்சா உசேன் (Hamzah Hussin)[1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 951.52 km2 (367.38 sq mi) |
மக்கள்தொகை (2016) | |
• மொத்தம் | 70,300 |
• மதிப்பீடு (2015) | 71,300 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 36100 - 36400 |
தொலைபேசி எண் | +6-05 |
மூடு
இந்த மாவட்டத்தின் வடக்கில் இருக்கும் பேராக் ஆறு, மஞ்சோங் மற்றும் மத்திய பேராக் பகுதிகளைப் பிரிக்கின்றது. தெற்கில் இருக்கும் பெர்ணம் ஆறு, சிலாங்கூர் மாநிலத்தின் சபாக் பெர்ணம் நகரத்தைப் பிரிக்கின்றது. வடகிழக்கில் முவாலிம் மற்றும் ஹீலிர் பேராக் மாவட்டங்கள் அமைந்து உள்ளன.
இந்த மாவட்டத்தின் தலைநகரம் பாகன் டத்தோ நகரம். இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள இதர இடங்கள் ஊத்தான் மெலிந்தாங்; ருங்குப். பேராக் மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் தேங்காய்கள் இங்குதான் உற்பத்தியாகின்றன.[2]