From Wikipedia, the free encyclopedia
பழக்க அடிமைத்தனம் (addiction) என்பது ஏதாவது ஒரு பழக்கம் தொடர்பில் அளவுக்கு அதிகமான ஈடுபாடு கொண்டிருத்தலைக் குறிக்கும். பல சமயங்களில் உடலளவிலும், உள்ளத்தளவிலும் இத்தகைய பழக்கங்களில் தங்கியிருத்தலையும் இது குறிக்கும். போதைப்பொருள் பாவனை, மதுபானம்அருந்துதல், சூதாட்டம், புகைத்தல் அல்லது புகையிலை பிடித்தல் போன்றவற்றில் ஏற்படக்கூடிய பழக்கங்கள் இத்தகையவை ஆகும். சில பழக்கங்கள் தீங்கு தரும் பின் விளைவுகளைத் தரக்கூடியவையாக இருப்பினும், அவற்றினால் கிடைக்கும் திருப்தி காரணமாக, தொடர்ந்து குறிப்பிட்ட பழக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் ஒரு மூளைச் சமநிலையற்ற தன்மை பழக்க அடிமைத்தனமாகும்[1].
மருத்துவத்தில் பழக்க அடிமைத்தனம் என்பது, உடலின் சாதாரண தொழிற்பாடுகளுக்கு, போதை மருந்து போன்ற ஏதாவது ஒரு பொருளில் தங்கியிருக்கும் நிலையைக் குறிக்கிறது. இப்பொருள் திடீரென மறுக்கப்படும்போது உடலில் சில தனித்தன்மையான அறிகுறிகள் தோன்றுகின்றன. பொருட்களைத் தவறாகப் பயன்படுத்தி உட்கொள்ளுவதனால் மட்டுமன்றி மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளைத் தொடர்ந்து உட்கொள்ளுவதனாலும் இந்நிலை ஏற்படலாம். மருந்துகள் மற்றும் உட்கொள்ளும் பொருட்கள் தொடர்பில் மட்டுமன்றி அளவு மீறிய கணினிப் பழக்கம் முதலியனவும் பழக்க அடிமைத்தனத்தை உண்டாக்கக் கூடும்.
இந்த பழக்க அடிமைத்தனம் ஒருவருடைய உடல்நலம், உளநலம், சமூக வாழ்க்கை போன்றவற்றைப் பாதிப்பதுடன், ஒரு நோய் நிலையாகக் கருதப்படக் கூடியதாகும்[2]. இருப்பினும் இவ்வகையான பழக்க அடிமைத்தனத்தில் இருந்து மீண்டு, சாதாரண, வளமான வாழ்க்கையைத் தொடருவதற்கான சில வினைத்திறனான மருத்துவ முறைகளும் உள்ளன[1].
பழக்க அல்லது சார்பு அடிமைத்தன்மை குறித்த அருஞ்சொல் விளக்கத்தொகுதி |
---|
|
|
போதைப் பொருட்களை நிறுத்தல் போதைப் பொருட்களை அடிக்கடி உபயோகப் படுத்தக்கூடியவர்கள் அதனை திடீரென நிறுத்துவதனால் ஏற்படும் அறிகுறிகள் ஆகும். |
உடல்ரீதியான சார்பு சோர்வு போன்ற காரங்களினால் உடலியல் ரீதியாக மற்றவர்களை சார்ந்திருத்தல் ஆகும். |
பழக்கவழக்கங்களின் அடிமைத்தனம் என்பது மனிதர்கள் தங்களின் வாழ்க்கையில் இயல்பாகவே செய்யக்கூடிய சில செயல்களை செய்தே தீர வேண்டும் என்ற ஒரு கட்டாய சூழ்நிலைக்குத் தள்ளப்படுவதே ஆகும்.
பழக்க அடிமைத்தனத்திற்கு மரபுவழி மற்றும் சுற்றுப்புறச் சூழல் போன்றவை சூழிடர் காரணிகளாக உள்ளன[3]. இதில் 50% மரபுவழிக் காரணங்களாலும், மிகுதி 50% சூழல் காரணிகளாலும் ஏற்படுகிறது[3]
மரபுக் காரணிகளின் தாக்கம் குறைவாக இருந்தாலும், நீண்ட காலத்திற்கு போதைப் பொருட்களை அதிக அளவில் பயன்படுத்தும் ஒருவர் அந்தப் பழக்கத்துக்கு அடிமையாகி விடுவார்[3]. சூழ்நிலைகள் உடந்தையாக அமைகையில் ஒருவருக்கு பழக்க அடிமைத்தனம் ஏற்படலாம் என்பதையே இது காட்டுகிறது.
விடலைப்பருவத்தில் அடிமைப்பழக்க வழக்கத்திற்கான காரணிகள் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.[4] விடலைப் பருவங்கள் இதற்கு முக்கியமான காரணியாக இருந்தபோதும், தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளக் கூடிய போதைப் பொருட்களும் காரணியாக அமைகின்றது புள்ளி விவரங்களின்படி எவர் ஒருவர் இளமைப் பருவத்திலேயே மதுப் பழக்கவழக்கத்திற்கு அடிமை ஆகிறார்களோ அவர்கள் அதன் பின்னரும் அதிலிருந்து விடுபட வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது. 33 சதவீத மக்கள் தாங்கள் தங்களுடைய 15 முதல் 17 வயதிற்குள்ளாகவே மதுப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறுகிறார்கள்.[5]
மேலும் 18 சதவீத மக்கள் அதற்கு முன்பாகவே அதற்கு அடிமையானதாக கூறுகிறார்கள். பன்னிரண்டு வயதிலேயே மது அருந்துபவர்கள் அதன் பின்பு அதனை விடுவது சிரமம் என்று கூறபப்டுகிறது.
மரபுவழிக் காரணங்களானது , சமூக மற்றும் உளவியல் காரணிகளுடன் இணைந்து மக்கள் பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகக் காரனமாக அமைகின்றது.
நோய்த்தொற்று அறிவியலானது 40 முதல் 60 சதவீத மக்கள் தங்களுடைய மரபு வழிக்காரணங்களினாலேயே மதுப் பழக்கத்திற்கு அடிமையாகின்றனர் என கூறுகின்றது. சாதாரண புரதங்களானது அது வழங்கப்படும் சுற்றுப்புறச் சூழ்நிலைகளின் காரணமாக குறிப்பிட்ட சில மூளை நரம்புகளிலோ அல்லது அதன் அமைப்புகளின் வளர்ச்சியிலோ தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
குழந்தைகளின் நடத்தையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக பல்வேறு காரணிகள் அமைகின்றன. அவற்றில் மிக முக்கியமாக தவறாக வழிநடத்துதல் அல்லது சித்ரவதைக்கு உட்படுத்தல், குழந்தைப் பருவத்தில் அவர்கள் சந்திக்கின்ற சில விரும்பத்தகாத நிகழ்வுகள் ஆகியன முக்கிய பங்கு வகிக்கிறது. குழந்தைகளின் நரம்பியல் வளர்ச்சிக்கு தடையாக அல்லது இடையூறு செய்யக்கூடிய காரணிகள் பின்வருமாறு,
மனிதர்களில் சிலருக்கு சில சமயங்களில் , ஒரே நேரத்தில் இருவிதமான மனநோய்கள் (comorbid) பாதிக்கலாம்.
அவையாவன,[6]
இலக்கு மரபணு | இலக்கு உணர்ச்சி வெளிப்பாடு | நரம்பியல் தாக்கங்கள் | நடத்தையியல் தாக்கங்கள் |
---|---|---|---|
சி -எஃப் ஒஎஸ் (c-Fos) | ↓ |
|
– |
டைனார்ஃபின் (dynorphin) | ↓ |
|
|
என் எஃப் - கேபி (NF-κB) என்ற சிக்கலான புரதம் | ↑ |
| |
GluR2 என்ற புரதம் | ↑ |
|
|
Cdk5 எனும் நொதி | ↑ |
|
|
பழக்க அடிமைத்தன மீட்புக் குழுக்கள் என்பது அடிமைப் பழக்க வழக்கங்களிலிருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணமுடையவர்கள் தாங்களாகவே ஒரு குழுவினை ஏற்படுத்துதல் ஆகும். இதில் பல்வேறு வகையான அமைப்புகள், பல்வேறு வகையான வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதில் சட்டவிரோதமாக போதைப் பொருட்களை தடை செய்தனர். இருந்தபோதிலும் அவை தற்காலிக மாற்றுகளாகவே இருந்தன. மேலும் தனிநபர்களாக செயல்படுவதை விட ஒரு குழுவாக செயல்படும்போது அதன் வீரியம் அதிக அளவில் குறைவதாக கருதப்படுகிறது.
பன்னிரண்டு படி அடிமை மீட்பு குழுக்கள்
மருந்துகளின் மூலம் சிகிச்சை மேற்கொள்ளல்
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.