![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/73/Snow_covered_mountains_outside_of_Salang_tunnel_in_Afghanistan.jpg/640px-Snow_covered_mountains_outside_of_Salang_tunnel_in_Afghanistan.jpg&w=640&q=50)
பர்வான் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
பர்வான் (Parwān (பாரசீகம்/பஷ்தூ: پروان), also spelled Parvān) என்பது ஆப்கானிஸ்தானின் முப்பத்தி நான்கு மாகாணங்களில் ஒன்றாகும். இதன் மக்கள் தொகை 631,600 ஆகும். இது பல இன பழங்குடி மக்களைக் கொண்ட. கிராமப்புற சமூகமாக உள்ளது. இந்த மாகாணமானது பத்து மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மாகாணத்தின் தலைநகராக சாரிகார் நகரம் உள்ளது.
பர்வான்
Parwan پروان | |
---|---|
![]() குளிர்காலத்தில் சலாங் கணவாய் | |
![]() ஆப்கானித்தான் வரைபடத்தில் பர்வான் உயர்நிலம் | |
ஆள்கூறுகள் (Capital): 35.0°N 69.0°E / 35.0; 69.0 | |
நாடு | ![]() |
தலைநகரம் | சாரிகார் |
அரசு | |
• ஆளுநர் | முகம்மது ஆசிம் அசீம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 5,974 km2 (2,307 sq mi) |
மக்கள்தொகை (2015)[1] | |
• மொத்தம் | 6,64,502 |
• அடர்த்தி | 110/km2 (290/sq mi) |
நேர வலயம் | UTC+4:30 |
ஐஎசுஓ 3166 குறியீடு | AF-PAR |
முதன்மை மொழிகள் | தாரி மற்றும் பஷ்தூ[2] |
இந்த மாகாணமானது கபுல் மாகாணத்தின் வடக்கிலும், பாக்லான் மாகாணத்தின் தெற்கிலும் அமைந்திருக்கும் இது, இந்து குஷ் மலைகளில் இருந்த ஒரு பழமையான நகரத்தின் பெயரில் அமைந்துள்ளது.[3]
பர்வான் மாகாணமானது ஆப்கானிஸ்தானில் பாதுகாகப்பான மாகாணங்களில் ஒன்றாகும். எனினும், எப்போதாவது போராளிகளின் தாக்குதல்கள் குறித்து பதியப்படுகின்றன, ஆனால் அவை வழக்கமாக சிறியதாக உள்ளன.[4] ஆப்கானிஸ்தானில் உள்ள மிகப் பெரிய அமெரிக்க-இராணுவ தளங்களில் ஒன்றான பாக்ராம் விமான தளமானது, பர்வனில் அமைந்துள்ளது.