From Wikipedia, the free encyclopedia
வாருங்கள், மணி.கணேசன், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
மேலும் காண்க:
-- நற்கீரன் (பேச்சு) 15:01, 18 நவம்பர் 2015 (UTC)
வணக்கம், மணி.கணேசன்!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.
தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.
புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.
ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
--நந்தகுமார் (பேச்சு) 15:44, 18 நவம்பர் 2015 (UTC)
மூன்று வரிகளுக்கு குறைவானக் கட்டுரைகள் நம் விக்கிபீடியா விதிகளின்படி உடனடியாக நீக்கப்பட்டுவிடும். நீண்ட கட்டுரைகளை எழுத வேண்டுகிறேன். நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 06:25, 24 ஏப்ரல் 2017 (UTC)
வணக்கம், உங்கள் பங்களிப்புகளுக்கு நன்றி. ஆயினும், நாம் புத்தாக்க ஆய்வை ஏற்பதில்லை. நம்பகமான, வெளியிடப்பட்ட மூலங்கள் இல்லாத தரவுகள், குற்றச்சாட்டுகள், எண்ணங்கள், தனிப்பட்ட வினையறிவு போன்றவை புத்தாக்க ஆய்வில் அடங்கும். உங்கள் தொகுப்புகளுக்கு நம்பகமான சான்றுகளைச் சேருங்கள். நன்றி. AntanO 02:20, 26 ஏப்ரல் 2017 (UTC)
Welcome to Wikipedia. A page you recently created may not conform to some of Wikipedia's guidelines for new pages, so it will be removed shortly (if it hasn't been already). Please use the sandbox for any tests, and consider using the Article Wizard. For more information about creating articles, you may want to read Your first article. You may also want to read our introduction page to learn more about contributing. Thank you. ~AntanO4task (பேச்சு) 02:37, 26 ஏப்ரல் 2017 (UTC)
தமிழிலோ அல்லது எந்த மொழியில் எழுதும் போதும் இரு சொற்களிடையே ஒரு இடைவெளி இருக்க வேண்டும் என்பது இலக்கண விதி. உங்கள் கட்டுரைகளில் இந்த விதி பல இடங்களில் மீறப்பட்டுள்ளது. உ+ம்: நீங்கள் எழுதியது: //எழுத்து இதழை1959 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சி.சு.செல்லப்பா தோற்றுவித்தார்.புதுக் கவிதை வளர்ச்சிக்கு எழுத்து இதழ் துணைபுரிந்தது.இவ்விதழில் ந.பிச்சமூர்த்தி,க.நா.சுப்ரமணியன்,தி.சோ.வேணுகோபாலன்,டி.கே.துரைஸ்வாமி,பசுவய்யா,எஸ்.வைத்தீஸ்வரன், தருமுசிவராமு,சி.மணி போன்றோர் புதுக்கவிதைகள் எழுதிப் பங்களித்தனர்.1962ஆம் ஆண்டு 24கவிஞர்களின் 63கவிதைகளைத் தொகுத்து,புதுக்குரல்கள் என்னும் தொகுப்பை சி.சு.செல்லப்பா வெளியிட்டார்.119 வது இதழோடு எழுத்து நின்றுபோனது.எழுத்து இயக்கக் காலமாக 1950-70 காலக்கட்டம் வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.// இங்கு இவ்விதி குறைந்தது 27 தடவைகள் மீறப்பட்டுள்ளது. நன்றி.--Kanags \உரையாடுக 08:23, 26 ஏப்ரல் 2017 (UTC)
--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:12, 30 ஏப்ரல் 2017 (UTC)
வணக்கம், புதுக் கட்டுரைகள் எழுதுவதற்குப் பாராட்டுக்கள். பொதுவாக மேற்கோள்களும், பகுப்பும் விக்கிக்க ட்டுரைக்கு முக்கியமானதாகும். மேற்கோள் மூலமே நீங்கள் எழுதிய தகவலின் உண்மைத் தன்மையைச் சரிபார்க்கமுடியும். பகுப்பு மூலமே பிற இக்கட்டுரையைக் கண்டு, படிக்க முடியும். உதாரணம் புல்லங்காடனார் - இரண்டு சதுர அடைப்புக்குறியுடன் தொடங்கி பகுப்பு:சங்கப் புலவர்கள் என்று எழுதி மீண்டும் இரண்டு சதுர அடைப்புக்குறியுடன் மூடிவிடுங்கள் இதுவே பகுப்பு இடுவதற்கான வழி. பகுப்பு:தாய்ப் பகுப்பு இதில் உள்ள அனைத்துப் பகுப்புகளையும் ஒருமுறைப் பார்த்தால் உங்களுக்கு சரியான பகுப்பைத் தேர்வு செய்ய உதவும். விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் மேற்கோள் இடுதல் தொடர்பாக இது உங்களுக்கு உதவும்.--நீச்சல்காரன் (பேச்சு) 06:19, 1 மே 2017 (UTC)
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்! தொடர்பங்களிப்பாளர் போட்டிக்காக நீங்கள் விரிவாக்கிக்கொண்டிருக்கும் கட்டுரையான திரைப்படம் எனும் கட்டுரையை அருள்கூர்ந்து 29,000 பைட்டுக்கும் மேலாக விரிவாக்குங்கள்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:44, 5 மே 2017 (UTC)
கட்டுரை ஒன்றின் அளவை அறிந்து கொள்ள கட்டுரையின் வரலாற்றுப் பக்கத்தை திறந்தால் பைட்டு அளவுகள் எவ்வாறு ஒவ்வொரு தொகுப்பிலும் மாற்றம் அடைகின்றன என்பதைக் காட்டும். உதாரணமாக: இங்கு பாருங்கள். இக்கட்டுரையின் இப்போதுள்ள பைட்டு அளவு 38,532 பைட்டுகள் ஆகும். உங்கள் சந்தேகங்களை விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள்.--Kanags \உரையாடுக 08:11, 9 மே 2017 (UTC)
நீங்கள் போட்டிக்காக விரிவாக்குகின்ற மொழிபெயர்ப்பு எனும் கட்டுரையைத் தற்போது சமர்ப்பிக்கலாம்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:53, 9 மே 2017 (UTC)
மன்னிக்கவும்.நடந்த தவறுக்கு வருந்துகிறேன்.இனி இது நிகழாவண்ணம் பார்த்துக்கொள்கிறேன்.பயனர்:மணி.கணேசன்
வணக்கம் மணி.கணேசன்! நீங்கள் போட்டிக்காக ஒரு கட்டுரையை விரிவாக்கம் செய்யும்போது, தயவுசெய்து முக்கிய தகவல்களுக்கான மேற்கோள்களை கட்டுரையின் நடுநடுவே கொடுங்கள். நீங்கள் தகவல்களைப் பெறும் இடத்தை உசாத்துணையாகக் கொடுக்கிறீர்கள் என்று தெரிகிறது. அது ஒரு பொதுவான தகவல் சேர்ப்பாகவே இருக்கும். அதே நேரம் நீங்கள் பெறும் குறிப்பிடும்படியான, முக்கியமான ஒரு தகவல் எந்த நூலில், எந்தப் பக்கத்தில் இருக்கிறது அல்லது எந்த இணையத்தளத்தில் பெற்றுக்கொண்டீர்கள், அதன் இணைப்பு என்பவற்றை மேற்கோளாகக் கட்டுரையின் நடுநடுவே கொடுத்தல் சிறப்பு. ஆங்கிலக் கட்டுரையிலிருந்து மொழிபெயர்க்கிறீர்கள் எனில், அங்கேயே மேற்கோள்கள் கிடைக்கும். அவற்றையே இணைக்கலாம். உதவி தேவையெனில் இங்கே பாருங்கள். அல்லது கேளுங்கள். நன்றி.--கலை (பேச்சு) 09:02, 14 மே 2017 (UTC)
முழுக்க முழுக்க ஆங்கில உள்ளடக்கத்தையும், வெறுமனே தலைப்பைத் தமிழிலும் கொண்டிருக்கும் நவீன கவிதை, ஆடன் கவிதைகள் போன்ர கட்டுரைகளை உருவாக்காதீர்கள். அருள்கூர்ந்து அவற்றை மொழிபெயருங்கள். அத்துடன் உங்கள் பங்களிப்புக்கு வாழ்த்துக்கள். வந்த ஒரு சில மாதங்களில் விக்கிப்பீடியாவை புரிந்துகொள்ளும் வேகத்துக்கு பாராட்டுகள். இவ்வாலோசனையை மனதில் நிறுத்தி அடுத்த பங்களிப்பை மேற்கொள்வீர்கள் என நம்புகின்றேன். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:57, 11 மே 2017 (UTC)
நாளிதழ் கட்டுரையை இன்னும் கொஞ்சம் விக்கிப்படுத்தினால் போட்டிக்காக ஏற்றுக்கொள்ளலாம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 06:01, 13 மே 2017 (UTC)
தாங்கள் விரும்பியவாறு அதிகப்படுத்தியிருக்கிறேன்.மேலும் தேவை ஏற்படின் தெரியப்படுத்தவும்.நன்றி.பயனர்:மணி.கணேசன்
மணி.கணேசன் அவர்களே, தாங்கள் போட்டிக்காக கட்டுரைகளை விரிவாக்குவதையிட்டு மிக்க மகிழ்ச்சி! ஆயினும் அருள்கூர்ந்து பதிப்புரிமையுள்ள உள்ளடக்கங்களை விக்கிப்பீடியாவிற்குள் சேர்க்காதீர்கள். மேலதிக விபரத்திற்கு இங்கு பருங்கள். ஆங்கில விக்கியிலிருந்தே மொழிபெயர்த்து விரிவாக்கலாம். உதவி தேவையானால் கேளுங்கள். போட்டியில் முனைபோடு பங்குபற்றி வெற்றி பெற வாழ்த்துகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:17, 14 மே 2017 (UTC)
மேற்கோள்களை முறையாகவும் சரியாகவும் எவ்வாறு இணைப்பது என்று சற்று விளக்கிக் கூற வேண்டுகிறேன்.விக்கியில் வழிகாட்டப்பட்டிருக்கும் தகவல்கள் முழுமையான புரிதல்களைத் தருவதாக இல்லை. நன்றி!பயனர்:மணி.கணேசன்
வணக்கம், தானியங்கியால் மொழிபெயர்க்கப்படும் கட்டுரைகள் உடனடியாகவே நீக்கப்படும். தானியங்கி கொண்டு பகுதி பகுதியாக மொழிபெயர்க்க விரும்பினால், முதலில் உங்கள் மணல் தொட்டியில் கட்டுரையைத் தொகுத்து, பின்னர் பொதுவெளிக்கு மாற்றலாம்.--Kanags \உரையாடுக 04:12, 19 மே 2017 (UTC)
போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:11, 21 மே 2017 (UTC)
மணி.கணேசன்! முதலில், போட்டிக்காகக் கட்டுரைகளை விரிவாக்கி வருவதற்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். நீங்கள் கட்டுரை விரிவாக்கம் செய்யும்போது சில விடயங்களைக் கவனிக்க வேண்டுகிறேன்.
நன்றி.--கலை (பேச்சு) 11:08, 25 மே 2017 (UTC)
மணி.கணேசன்! தயவுசெய்து நீங்கள் விரிவாக்கும் கட்டுரைகளுக்கு மேற்கோள்களையும் கொடுத்தீர்கள் என்றால், அவை சிறப்பான கட்டுரைகளாக அமையும். முயற்சி செய்யுங்கள். ஏதாவது உதவி தேவையென்றால் கேளுங்கள். நன்றி.--கலை (பேச்சு) 21:03, 31 மே 2017 (UTC)
போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
சிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:
--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:59, 31 மே 2017 (UTC)
வணக்கம் மணி.கணேசன்! நீங்கள் ஏற்கனவே முற்பதிவு செய்திருந்த கட்டுரைகளின் பட்டியலிலிருந்து, முதல் மூன்று கட்டுரைகளும் (பெண்ணியம், தொன்மவியல், ஜோசப் ஸ்டாலின்) உங்கள் பெயரில் முற்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொன்றும் விரிவாக்கி முடிக்கையில், உங்கள் பட்டியலிலுள்ள ஏனைய கட்டுரைகள்
ஒவ்வொன்றாக முற்பதிவில் இணைத்துக்கொள்ளப்படும். அதன் பின்னர், நீங்கள் விரும்பினால் ஒவ்வொரு கட்டுரையும் விரிவாக்கி முடிந்ததும், புதிய கட்டுரைகளை முற்பதிவு செய்யலாம். நன்றி.--கலை (பேச்சு) 17:41, 1 சூன் 2017 (UTC)
தங்களின் வழிகாட்டலுக்கு மிக்க நன்றி!அதுபோல்,போட்டிக் கட்டுரைகளுக்கு வழங்கப்படும் புள்ளிகளில் அனைத்திற்கும் சமப்புள்ளிகள் என்பதில் சிக்கல்கள் எழுகின்றன.20000 பைட்டுகள் கொண்ட கட்டுரையில் வெறும் 6000 பைட்டுகள் மட்டும் பதிவேற்றம் செய்வதற்கும் 6000 பைட்டுகள் கொண்ட கட்டுரையில் மேற்கொண்டு 20000 பைட்டுகள் சேர்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதாகப் படுகிறது.அதிக பைட்டுகள் சேர்ப்பவருக்கு அதிகப் புள்ளிகள் வழங்குவதுதான் நியாயமான அளவுகோலாக இருக்கமுடியும்.இது என்னுடைய சொந்த கருத்து.அண்மைப் போட்டி விதிகளில் இதற்கு இடமில்லையெனில் பரவாயில்லை. எதிர்வரும் காலத்தில் இதுகுறித்தும் நிர்வாகிகள் சிந்திப்பது நலம்.நன்றி!மணி.கணேசன்
மணி.கணேசன்! //அண்மைப் போட்டி விதிகளில் இதற்கு இடமில்லையெனில் பரவாயில்லை.// ஆம். தற்போதைய போட்டி விதிகளில் இல்லை.--கலை (பேச்சு) 19:21, 2 சூன் 2017 (UTC)
ஶ்ரீஹீரன் அவர்களுக்கு, என்னுடைய பெண்ணியம் கட்டுரையினைத் தாங்கள் நீக்கியதற்கான காரணத்தை அறிய விரும்புகிறேன்.எதிர்வரும் காலங்களில் அது உதவிகரமாக அமையும்.நன்றி!மணி.கணேசன்
சிறந்த உழைப்பாளர் பதக்கம் | |
விக்கி 15இல் அயராது பல கட்டுரைகளை எழுதிக்கொண்டிருப்பதற்கு. --குறும்பன் (பேச்சு) 20:28, 3 சூன் 2017 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |
விக்கித்தரவு பயிற்சியில் நீங்கள் கலந்து கொள்வது தொடர்பான விவரங்களுக்கு trulytito @ gmail dot com அணுகுங்கள். உதவி தேவையெனில் என் எண்ணை அழையுங்கள். விவரங்களை மடலில் அனுப்புகிறேன். --இரவி (பேச்சு) 10:52, 5 சூன் 2017 (UTC)
நான் தகவலுழவன் என்ற பெயரில் தமிழ் விக்கிமீடியத்திட்டங்களில் பங்களிப்பது தங்களுக்குத் தெரிந்திருக்கும் என்றே எண்ணுகிறேன். வரும் 10,11 பெங்களூரூ கூடலில் நீங்கள் வருவது குறித்து மகிழ்ச்சி. எனது அலைப்பேசி எண் 90ஒன்பது ஐந்து 343342. உங்களுக்கு உகந்த நேரத்தில் பேசுங்கள். முடிந்தால் ஒன்றாக நமது பயணத்தைத் தொடர்வோம். நான் சேலம் மாவட்டத்தில் வசிக்கிறேன். உங்கள் பயனர் பக்கத்தில் உங்கள் நிழற்படத்தைப் பார்த்தேன். பார்ப்பதற்கு,நீங்களும் கொங்கு மண்டலமென்றே தோன்றுகிறது. உங்களைக் குறித்து அறிய ஆவல். வணக்கம்.--த♥உழவன் (உரை) 07:58, 7 சூன் 2017 (UTC)
வணக்கம் மணி.கணேசன்! நீரிழிவு நோய் கட்டுரை மிகவும் முக்கியமான ஒன்று. அதனால் அந்தக் கட்டுரை நல்ல தரத்துடன் இருப்பது மிகவும் அவசியம். அந்தக் கட்டுரையில் விக்கியாக்கம், மற்றும் மேற்கோளற்ற தகவல்கள் என்பன காரணமாக அது தொடர்பில் செந்தி அவர்களின் கருத்தைக் கேட்டிருந்தேன். இங்கே இது தொடர்பில் சில ஆலோசனைகள் உள்ளது. தயவுசெய்து அவற்றை வாசித்து, கட்டுரையில், வேண்டிய மாற்றங்களைச் செய்யுங்கள். நன்றி. @Sivakosaran and Shriheeran:--கலை (பேச்சு) 21:54, 13 சூன் 2017 (UTC)
மதிப்புமிகு கலை அவர்களுக்கு, தாங்கள் குறிப்பிட்ட வழுவை நீக்கியுள்ளேன்.மேலும், நீரிழிவு கட்டுரையையும் மேம்படுத்தி விட்டேன். தங்களின் நெறிப்படுத்தும் முயற்சிகளை வரவேற்கிறேன்.நன்றி.--மணி.கணேசன்
தங்களின் வேண்டுகோளை ஏற்று முழுக் கட்டுரையையும் திருத்தம் செய்து விட்டேன். எதிர்வரும் காலங்களில் இதே நடைமுறைப் பின்பற்றுகின்றேன். நன்றி. --மணி.கணேசன் (பேச்சு)
வணக்கம் மணி.கணேசன்! விரிவாக்கும் கட்டுரைகளில் வலைப்பதிவுகளை மேற்கோளாகக் கொடுக்க வேண்டாம் என்று கேட்கப்பட்டும், மீண்டும் மீண்டும் நீங்கள் அவற்றையே கொடுக்கிறீர்கள். பதிப்புரிமை மீறல், நம்பகமற்ற மேற்கோள்கள்/ தகவல்கள் என்ற பிரச்சனைகள் உங்கள் கட்டுரைகளில் காணப்படுகின்றன. தயவுசெய்து அந்தக் குறைகளை நீக்க முயற்சியுங்கள். நன்றி.--கலை (பேச்சு) 13:25, 9 சூலை 2017 (UTC)
வணக்கம்! பயிற்சி குறித்த குறிப்பிடத்தக்க தகவல்களை விக்கிப்பீடியா:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017/சூன் 21 - 23 எனும் பக்கத்தில் இடலாம். உதாரணமாக -
வலியுறுத்தவில்லை; விரும்பினால் பதிவு செய்யலாம். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 23:41, 20 சூன் 2017 (UTC)
--கலை (பேச்சு) 23:16, 21 சூன் 2017 (UTC)
கலை அவர்களுக்கு, எழுத்து முறை கட்டுரையில் தாங்கள் குறிப்பிட்டதுபோல் 6000 பைட்டுக்கள் சேர்க்கப்பட்டுச் சமர்ப்பித்துவிட்டேன். நன்றி.
மணி.கணேசன்! நீங்கள் விரிவாக்கிய கரோலஸ் லின்னேயஸ் கட்டுரையில், புதிதாக இணைக்கப்பட்ட அனேகமான தகவல்கள், இருசொற் பெயரீடு கட்டுரைக்கு உரியவையாகத் தோன்றுகிறதே. --கலை (பேச்சு) 10:10, 26 சூன் 2017 (UTC) மணி.கணேசன்! இன்னமும் இடைவெளி வழுக்கள் வருவதுபோல் தெரிகிறது. தேவையான இடங்களில் இடைவெளி இல்லாமலும், தேவையற்ற இடங்களில் மேலதிக இடைவெளிகளுடனும் வருகிறது. தயவுசெய்து கவனியுங்கள். நீங்கள் விரிவாக்கிய கட்டுரைகளில் செய்யப்படும் மாற்றங்களைப் பார்த்தால் தெரியும்.--கலை (பேச்சு) 20:45, 26 சூன் 2017 (UTC)
வணக்கம். இந்தக் கட்டுரை கலைக்களஞ்சியக் கட்டுரை போன்று இல்லை. தேவைப்படின் இத்தகவல்களை செய்தித்தாள் எனும் கட்டுரையில் சேர்க்கலாம். கட்டுரை ஆசிரியரை நீங்கள் தொடர்புகொள்ள முடிந்தால், அவருக்கு இவ்விதம் பரிந்துரை செய்யுங்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 23:42, 21 சூன் 2017 (UTC)
தங்களின் கருத்தினை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:59, 24 சூன் 2017 (UTC)
இக்கட்டுரை, கலைக்களஞ்சியக் கட்டுரையாக இல்லாத காரணத்தால் நீக்கியுள்ளேன். விக்கி விதிமுறைகளின்படி இதனைச் செய்துள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:15, 24 சூன் 2017 (UTC)
வணக்கம், உங்கள் அண்மைய தொகுப்பில் பேணுகை வார்ப்புருக்களை நீக்கியுள்ளீர்கள். ஒரு பேணுகை வார்ப்புருவை நீக்கும்போது, அதில் குறிப்பிட்ட சிக்கல் தீர்ந்துவிட்டதா எனக் கவனிக்கவும். அல்லது தொகுப்புச் சுருக்கத்தில் செல்லுபடியாகும் காரணத்தைக் குறிப்பிடுங்கள். நீங்கள் தவறுதலாக இதனைச் செய்திருந்தால் வருந்தவேண்டாம். உங்கள் தொகுப்பை நான் மீளமைத்துள்ளேன். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. AntanO 07:58, 28 சூன் 2017 (UTC)
@கலை அவர்களுக்கு, அரசியல் கட்சி கட்டுரையைத் தேவையான அளவிற்கு விரிவுப்படுத்தியுள்ளேன். அதுபோல், அன்றோன் எடுத்துக் காட்டிய சிலுவைப் போர்கள் கட்டுரையிலும் உரிய மாற்றங்களை மேற்கொண்டு விட்டேன். வேறு ஏதேனும் திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் என்னால் மேற்கொள்ள வேண்டியிருப்பின் தெரிவிக்கவும். முடிந்த வரை வழுக்கள் ஏற்படாவண்ணம் எழுத முயற்சிக்கிறேன். ஏனெனில், ஒரு நல்ல விக்கியராய் உருவாவதற்கு தங்களைப் போன்றோரின் வழிகாட்டுதல் என்னைப் போன்றோருக்கு இன்றியமையாததாக உள்ளது. நன்றி. பயனர்:மணி. கணேசன்
தோழியர் கலை அவர்களுக்கு, மேற்கோள் சுருக்கமுறை குறித்து தெளிவாக கூறுமாறு வேண்டுகிறேன். அமெரிக்க உள்நாட்டுப் போர் கட்டுரையை மீள்வாசிப்பிற்கு உட்படுத்தி விக்கியாக்கம் விரைவில் செய்துமுடிக்கின்றேன். நன்றி. பயனர்:மணி. கணேசன்
மணி. கணேசன்! தயவுசெய்து நீங்கள் விரிவாக்கம் செய்திருக்கும் வளர்சிதைமாற்றம் கட்டுரையில், உங்களால் கொடுக்கப்பட்டிருக்கும் இணையத்தள மேற்கோள்களை அழுத்திப் பாருங்கள். அங்கே நீங்கள் கொடுத்த தகவல்களுக்கான மேற்கோளைக் கண்டுகொள்ள முடிகிறதா என்று பாருங்கள். தயவுசெய்து, இவ்வாறு பொருத்தமற்ற மேற்கோள்களை இணைக்காதீர்கள். அவற்றை நீக்கிவிட்டுப், பொருத்தமான மேற்கோள்களைக் கொடுங்கள். நூலின் குறிப்பிட்ட இரு பக்கத்தை மேற்கோளாகக் கொடுக்கையில், ஒரே மேற்கோள் பலதடவைகள் வராமல், ஏற்கனவே கூறியதுபோல், சுருக்கத்தைக் கொடுங்கள். நரம்புக் கட்டுரையில் எவ்வாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதைப் பாருங்கள். நீங்கள் இணைக்கும் தகவல்கள் பிழையற்றதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். எ.கா. அக்காலகட்டத்தில், வீரர்களின் உடலில் பல்வேறு வளர்சிதை மாற்றங்கள் ஏற்படுகின்றன. வளர்சிதைமாற்றம் என்பதே உயிர்வாழ்வதற்காக உயிரினங்களில் நடைபெறும் ஒரு தொகுதி வேதி வினைகளாகவும், அவை எல்லா உயிரினங்களிலும் நிகழ்வதாகவும் இருக்க, வீரர்களின் உடலில் பல்வேறு வளர்சிதை மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பது சரியாகப்படவில்லை. இவ்வாறு குழப்பமான தகவல்கள் உள்ளன. . எப்படித் திருத்துவது என்று தெரியவில்லை. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் உணவு வகைகள் என்று ஒரு பகுதியை எழுதியிருக்கிறீர்கள். அங்குள்ள தகவல்களும் குழப்பமாகவே உள்ளது. --கலை (பேச்சு) 22:43, 4 சூலை 2017 (UTC)
விடாமுயற்சியாளர் பதக்கம் | |
தொடர்பங்களிப்பாளர் போட்டியில் 47 கட்டுரைகளுக்கு மேல் விரிவாக்கி தொடர்ந்து எழுதிவருவதால் விடாமுயற்சியாளர் பதக்கத்தை தங்களுக்கு வழங்கி மகிழ்கிறேன் --ப. இரமேஷ் 14:31, 7 சூலை 2017 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |
சிறப்புப் பதக்கம் | |
நடந்து முடிந்துள்ள ஆசிரியர்களுக்கான பயிற்சிகளில் அயராது கலந்து கொண்டு தாங்கள் விக்கிப்பீடியா பற்றி அறிந்ததையும் தங்களுக்கு உள்ள ஆர்வத்தையும் மற்ற ஆசிரியர்களுக்கு எடுத்துச் சொன்னமையையும் பாராட்டி இந்தச் சிறப்புப் பதக்கத்தை வழங்குகிறேன். தொடர்ந்து ஆர்வமுடன் பங்களியுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 06:00, 8 சூலை 2017 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |
மணி.கணேசன்! புதிய கட்டுரைகளை முற்பதிவு செய்ய முன்னர், தயவுசெய்து ஏற்கனவே உங்களால் சமர்ப்பிக்கப்பட்டு, இன்னமும் ஏற்றுக்கொள்ளப்படாத கட்டுரைகளை தரமுயர்த்திவிடுவீர்களா? நீங்கள் விரிவாக்கிய கட்டுரைகளில் உள்ள தகவல்களைச் சரிபார்ப்பதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்ள வேண்டியிருப்பதால், அந்த நேரத்தை ஒதுக்கி உடனடியாகச் செய்ய முடியாமல் உள்ளது. புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன். நன்றி. --கலை (பேச்சு) 21:44, 12 சூலை 2017 (UTC)
@கலை தோழியர் அவர்களுக்கு, கூடிய விரைவில் அக்கட்டுரையை மேம்படுத்துகிறேன். நன்றி.மணி.கணேசன்
@கலை தோழியர் அவர்களுக்கு, வளர்சிதை மாற்றம் மற்றும் நீரிழிவு நோய் கட்டுரைகளில் தேவையான மாற்றங்கள் செய்தும் மொழிபெயர்த்தும் அண்மையில் இற்றைச் செய்துள்ளேன். கவனிக்கவும். எண், எண் கோட்பாடு, அரசியல் கட்சி முதலான கட்டுரைகள் வெகுநாட்களாக மதிப்பீடு செய்யப்படாமலும் அவற்றில் காணப்படும் பிழைகள் சுட்டப்படாமலும் உள்ளது வருத்தமளிக்கிறது. சிலரின் கட்டுரைகள் உடனுக்குடன் மதிப்பீடு செய்யப்படுவது மேலும் ஏமாற்றமளிப்பதாக உள்ளது. தாமாகத் தேடுவதைக் காட்டிலும் மொழிபெயர்த்தல் எளிது என்பதை இப்போது உணர்கின்றேன். நன்றி. --மணி.கணேசன்
மணி.கணேசன், உங்கள் கட்டுரைகள் உடனே மதிப்பீடு செய்யப்படுவதில்லை என்ற ஆதங்கத்தை வெளியிட்டுள்ளீர்கள், நியாயமான வருத்தந்தான். எனினும் சில நடைமுறைச் சிக்கல்களும் உள்ளதையும் நீங்கள் கணக்கில் கொள்ளவேண்டுகிறேன்.
நீங்கள் மேம்படுத்திய எண், எண் கோட்பாடு ஆகிய இரு கட்டுரைகளும் கணிதம் சார்ந்தவை என்பதால் அவற்றைப் பார்க்குமாறு கலை என்னிடம் கேட்டிருந்தார். எனக்கு நேரமில்லாமையால் உடனே பார்க்க இயலாததற்கு மன்னிக்கவும். இன்று முடித்து விடுவேன்.
\\தாமாகத் தேடுவதைக் காட்டிலும் மொழிபெயர்த்தல் எளிது என்பதை இப்போது உணர்கின்றேன்.\\ உண்மைதான். ஆங்கில விக்கியில் உள்ள கட்டுரைகள் ஏற்கனவே விக்கி விதிமுறைப்படி (பெரும்பாலும்) இருப்பதால் அங்கு மொழிபெயர்ப்பு மட்டுமே தேவைப்படுவதால் கட்டுரையாக்கத்து எத்துணை எளிதோ அவ்வளவு சரிபார்த்தலும் எளிதாகிறது. ஆங்கில விக்கியில் இல்லாத ஒரு கட்டுரை உருவாக்கும்போது அதற்கான பொருத்தமான ஆதாரங்களைத் தேடித் தருவது எத்தனை சிரமமோ அதேபோல் தான் அவற்றைத் தேடி சரிபார்த்தலுக்கும் நேரம் எடுக்கிறது. எடுத்துக்காட்டாக எண்கோட்பாடு கட்டுரையில் நீங்கள் மேற்கோளாகச் சுட்டியிருந்த ஒன்பதாம் வகுப்பு பாடப்புத்தகத்தின் பருவம் எது என்பது தெரியாததால், ரெனே டெக்கார்ட் பக்கத்தை எடுக்க எனக்கு சற்று அதிகமான நேரம் தேவைப்பட்டது.
உங்களைக் குறை எதுவும் கூறுவதாகக் கருதிவிட வேண்டாமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் சற்றே மனவருத்தம் அடைந்ததால்தான் இந்தத் தன்னிலை விளக்கம். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 07:32, 24 சூலை 2017 (UTC)
@Booradleyp1 தங்களின் வழிகாட்டல்படி கோரிய மாற்றம் செய்யப்பட்ட்டு விட்டது. நன்றி.--{{மணி.கணேசன் (பேச்சு) 14:01, 24 சூலை 2017 (UTC)}}
சிலுவைப்போர்கள் கட்டுரையில் சிலுவைப்போர் தோல்விக்கான காரணங்கள் என்னும் துணைத்தலைப்பின் கீழ் எழுதப்பட்டிருக்கும் தகவல்களுக்கு மேற்கோளை இணைத்துவிடுங்கள். --கலை (பேச்சு) 11:36, 26 சூலை 2017 (UTC)
அண்மையில் ஆசிரியப் பயனர் ஒருவரின் கட்டுரையில் நீங்கள் பின்வருமாறு திருத்தம் செய்துள்ளீர்கள்: . இந்தத் திருத்தம் முற்றிலும் தவறானது. கடுரை ஏற்கனவே வேறு ஒருவரால் சரியாகத் திருத்தப்பட்டிருந்தது. ஆனால் நீங்கள் அதனை ஏனோ தவறாகத் திருத்தியுள்ளீர்கள். கவனித்துத் திருத்துங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 22:42, 16 சூலை 2017 (UTC)
வணக்கம்,
ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.
நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:12, 14 நவம்பர் 2017 (UTC)
வணக்கம்!
ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும். சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
குறிப்பு: முடிந்தால் {{WAM talk 2017}} என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள்.
உங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 19:09, 25 நவம்பர் 2017 (UTC)
அன்புள்ள மணி கணேசன்,
உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.
2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.
இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.
அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:
தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.
நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:
இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.
வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.
2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.
அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.
இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.
ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.
இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது வரை கிடைத்துள்ள தரவின் அடிப்படையில் இத்தலைப்புகளின் கீழ் எழுதப்படும் கட்டுரைகள் வழமையான கட்டுரைகளைக் காட்டிலும் சராசரியாக நான்கு மடங்கு வாசகர்களைப் பெற்றுத் தருவதை அறிய முடிகிறது. உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.
வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே.
இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.
வணக்கம். கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற விக்கிப்பீடியா ஆசிய மாதத்தில் பங்குபெற்றமைக்கு நன்றி. இந்த ஆண்டும், விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 நவம்பர் 1 முதல் நடந்து வருகின்றது. உங்களுடைய பங்களிப்பை நல்கிட வேண்டும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:59, 2 நவம்பர் 2018 (UTC)
வணக்கம்.
இந்த ஆண்டு விக்கிப்பீடியா ஆசிய மாதம் நவம்பர் 1 முதல் நடைபெற்று வருகின்றது. கடந்த ஆண்டுகளைப் போல இந்த ஆண்டும் உங்கள் பங்களிப்பினை தொடர்ந்து நல்க வேண்டுகிறேன். வேங்கைத் திட்டம் 2.0 போட்டிகளில் ஆசிய மாதம் குறித்து எழுதி வந்தால் அவற்றையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 23:15, 3 நவம்பர் 2019 (UTC)
Greetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:37, 30 சூன் 2021 (UTC)
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.