From Wikipedia, the free encyclopedia
வாருங்கள், எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
மேலும் காண்க:
--இரவி (பேச்சு) 17:53, 25 மார்ச் 2013 (UTC)
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி
வணக்கம், எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி/தொகுப்பு 1!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.
மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.
பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:
ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.
வணக்கம் கிருஷ்ணமூர்த்தி. சௌராட்டிரர்களின் கோத்திரங்களும் குடும்பப் பெயர்களும் கட்டுரையில் சில திருத்தங்களைச் செய்துள்ளேன். தாங்கள் விக்கிப்பீடியாவுக்குப் புதியவர் என்பதால் விக்கியின் நடை பற்றி மேலே கட்டத்திலுள்ள நீலவண்ண இணைப்புகளைச் சொடுக்கி அறிந்துகொள்ளுங்கள். அதில் தங்கள் உதவிக்கான குறிப்புகள் உள்ளன. அதன்படி தொடரும்படி கேட்டுக்கொள்கிறேன். தொடரட்டும் தங்கள் பங்களிப்புகள். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:06, 30 மார்ச் 2013 (UTC)
பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி
வணக்கம், எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி/தொகுப்பு 1!
தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:
ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.
மனுதரும சாத்திரம் கட்டுரையில் நீங்கள் தொகுத்துள்ளது கண்டு மகிழ்கிறேன். உங்களுக்குத் தெரிந்த சமற்கிருதம், இந்து சமயம், பண்பாடு போன்ற அனைத்து தலைப்புகளிலும் கட்டுரைகள் எழுதுமாறு வேண்டுகிறேன். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:33, 4 ஏப்ரல் 2013 (UTC)
நான் இன்று ”ஈசா வாஸ்ய உபநிடதம்” என்ற முழு கட்டுரையை “என் மணல் தொட்டியில்” எழுதி சேமித்த பின்பு அதனை மீண்டும் திருப்பி பார்க்கும் போது பாதி கட்டுரை சேமிக்கப்பட்டு மீதி கட்டுரை காணாமல் போய் விட்டது.இந்த குறையை எவ்வாறு நீக்குவது குறித்து எனக்கு ஆலோசனை சொல்ல கேட்டுக்கொள்கிறேன்.நேற்று நான் எழுதிய ”முண்டக உபநிடதம்” என்ற கட்டுரை கூட இதே போன்று ஆகி எனது நேரம்,உழைப்பு வீண் போயிற்று.இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு விடுகிறது.
கட்டுரையைத் தலைப்பை மாற்ற மேலே ”வரலாற்றைக் காட்டவும்” இணைப்புக்கு அடுத்து “நகர்த்தவும்” என்றொரு இணைப்பு உள்ளது. அதனை சொடுக்கி மாற்றலாம். இல்லையெனில் எந்த கட்டுரை, எத்தலைப்புக்கு மாற்ற வேண்டும் என்று சொன்னால் நான் மாற்றி விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 13:09, 26 ஏப்ரல் 2013 (UTC)
சௌராட்டிரர் பற்றிய கட்டுரைகளை மேம்படுத்துவதற்கு நன்றி. ஆனாலும் கட்டுரைகளுக்குத் தேவையில்லாதவற்றை சேர்க்க வேண்டாம். எடுத்துக்காட்டாக, சௌராட்டிர நபர் ஒருவரின் கட்டுரையில் ஏனைய சௌராட்டிரர்களின் பக்கங்களுக்கு இணைப்புத் தருவது வழக்கமல்ல. அந்த நபரைப் பற்றிய தகவல்களை மட்டுமே தாருங்கள்.--Kanags \உரையாடுக 23:06, 27 ஏப்ரல் 2013 (UTC)
வணக்கம். நீங்கள் உருவாக்கிய சுவாமி குருபரானந்தர் கட்டுரையில் நான் செய்திருக்கும் சிறுசிறு மாற்றங்களைச் சற்று பாருங்கள். கட்டுரைக்குள் சிறு தலைப்புகள் உருவாக்கும்விதம் அறிந்து கொள்வீர்கள். விக்கிப்பீடியா கட்டுரைகள் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்; மேலும் நடுநிலையானவை. ஆதலால் நபர்களின் பெயருக்குப் பின் ’அவர்கள்’ சேர்க்க வேண்டாம். ’பூர்ணாலயம்’ இணையபக்கம் உங்கள் கட்டுரை தரும் அனைத்து விவரங்களுக்கும் சான்றுகளைத் தரவில்லை, அதுவும் முக்கியமாக அவர் வழங்கும் செய்திக்கு ஆதாரம் இல்லை. அதற்கான சான்று இல்லையெனில் அப்பகுதி நீக்கப்படலாம். உதவி தேவைப்பட்டால் கேளுங்கள்.--Booradleyp (பேச்சு) 15:59, 7 மே 2013 (UTC)
சான்றினை சுட்டியதற்கு நன்றி. கட்டுரையில் இணைத்துள்ளேன்.--Booradleyp (பேச்சு) 04:59, 8 மே 2013 (UTC)
சிறந்த முக்கிய கட்டுரை உருவாக்குனர் | ||
தங்களுடைய ரிக்வேத கால முனிவர்கள் கட்டுரையைக் கண்டேன். இந்து சமயக் கட்டுரைகளில் மிகவும் அரிய கட்டுரையாக அதனை கருதுகிறேன். தங்களுடைய பணி சிறக்கவும், இதுபோல அரிய கட்டுரைகளை தொடர்ந்து இயற்றவும் வாழ்த்துகள். சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 02:41, 9 மே 2013 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
பதக்கம் வழங்கியமைக்கு நன்றி ஜெகதீஸ்வரன். பயனர் பேச்சு: கிருஷ்ணமூர்த்தி1952
விக்கிமீடியா நிறுவனம், அடைக்காப்பகம் என்ற இன்னொரு திட்டத்தைக் கொண்டுள்ளது. அதில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் உள்ளன. அங்கே சௌராட்டிர விக்கிப்பீடியாவும் உள்ளது. சிலர் இணைந்து கட்டுரைகள் எழுதி வந்தால், விரைவில் தமிழ் விக்கிப்பீடியாவைப் போலவே, அதுவும் முதன்மை தளத்தில் வெளிவரும். அதற்கு தொடர்ச்சியான உழைப்பு தேவை. அங்கே தமிழ், குசராத்தி, தேவநாகரி, சௌராட்டிர எழுத்துக்களைப் பயன்படுத்தி எழுத முடியும். (சௌராட்டிர எழுத்துகளும் உள்ளன.) நான்கில் எந்த எழுத்தை விரும்பினாலும் பயன்படுத்தலாம். முதலில், இடைமுகச் செய்திகளை சௌராட்டிர மொழிக்கு மொழிபெயர்க்கவும். அடிப்படையான சொற்களுக்கு முன்னுரிமை தந்து மொழிபெயர்க்கவும். பின்னர், ஒரு மாநிலம் பற்றி நான்கு வரிக் கட்டுரை எழுதிவிட்டு, அதை நகலெடுத்து பிற மாநிலக் கட்டுரைகளையும் உருவாக்கலாம். தொடக்கத்தில், நூறு கட்டுரைகள் வந்த பின், பொறுமையாக, ஒவ்வொரு கட்டுரையும் பத்தியாக எழுதலாம். எந்தெந்த பக்கங்களை மொழிபெயர்க்க வேண்டும், என்னென்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு என்னால் உதவ முடியும், அடுத்த வாரம், தேர்வு முடிந்த பின் சும்மா தான் இருப்பேன். மேலே உள்ள இணைப்பில் சென்று பாருங்கள். தங்கள் விருப்பத்தைப் பெற்ற பின் தொடர்கிறேன். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:10, 16 மே 2013 (UTC) தாங்கள் சௌராட்டிர விக்கிபீடியாவை சுட்டி காட்டியமைக்கு நன்றி தமிழ்க்குரிசில். அதில் சௌராட்டிர மொழி தொடர்பான எழுத்துகள் மற்றும் தேவையான இணைய தளங்கள் தெரிந்து கொண்டேன். இனி சௌராடடிர விக்கி பீடியாவில் எழுத முயற்சிக்கிறேன்.:)-சோ.பெ.கிருஷ்ணமூர்த்தி (பயனர் பேச்சு:krishnamoorthy1952]])
வணக்கம் கிருஷ்ணமூர்த்தி. தங்கள் கட்டுரைகளில் பிற பயனர்கள் என்ன மாதிரியான மாற்றங்களைச் செய்கிறார்கள் எனக் கவனியுங்கள். நீங்கள் வோர்டு டாகுமெண்டில் தொகுத்து பின்பு பதிகிறீர்கள் என நினைக்கிறேன். அதுவேறு விக்கிப்பக்கங்கள் வேறு. சௌராட்டிரர்களின் கோத்திரங்களும் குடும்பப் பெயர்களும் என்ற பக்கத்தில் நான் விக்கிப்பீடியாவிற்கேற்ப மாற்றினாலும் நீங்கள் திரும்பத் திரும்ப தங்களின் எண்ணப்படியே தொகுத்து வருகிறீர்கள். பலமுறை தஙகளுக்குச் சொன்ன போதும் நீங்கள் கவனிப்பதே இல்லை. அக்கட்டுரையில் மத்தியப் பகுதியில் உள்ள கோத்திரங்களை நான் செய்வது போல வரிசைமுறைக்கு ஏற்ப மாற்றவும் இல்லை. அதை விடுத்து கட்டுரையில் தேவையற்ற குறியீடுகளை இட்டு வருகிறீர்கள். இது சற்று சிரமமாக உள்ளது. மாற்றங்களைக் கவனித்து விக்கிப்பீடியாவிற்கேற்ப தொகுக்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 01:27, 14 மே 2013 (UTC)
வணக்கம் பார்வதிஸ்ரீ.எனது தவற்றை சுட்டிக் காட்டியதற்கு, இனி இது போன்ற தவறுகள் நடக்காமல் விக்கி பீடியாவிற்கு ஏற்ப தொகுக்கிறேன். தாங்கள் தொடர்ந்து எனது கட்டுரைகளில் உள்ள தவற்றை சுட்டிக் காட்டினால் என்னை நான் திருத்திக் கொள்ள வசதியாக இருக்கும்.
வணக்கம் பார்வதிஸ்ரீ, “சௌராட்டிரர்களின் கோத்திரங்களும் குடும்பப் பெய்ர்களும்” என்ற கட்டுரையில் விட்டுப்போன ”உதங்க கோத்திரம் மற்றும் அதன் குடும்பப் பெயர்கள்” இறுதியில் தற்போது சேர்த்திருக்கிறேன். தாங்கள் அதனை சரிபார்த்து தொகுக்க கேட்டுக் கொள்கிறேன். நன்றியுடன் கிருஷ்ணமூர்த்தி.--கிருஷ்ணமூர்த்தி1952 (பேச்சு)
வணக்கம் S_M_Ganesh, தாங்கள் ”சௌராட்டிரர்களின் கோத்திரங்களும் குடும்பப் பெயர்களும்” என்ற கட்டுரையை தொகுத்து மேம்படுத்தியதற்கு நன்றி பல.--கிருஷ்ணமூர்த்தி1952 (பேச்சு)
[[File:Map of Vedic India.png|thumb|350px|வலது| எடுத்துக்காட்டு]] [[File:Map of Vedic India.png|thumb|350px|இடது|விபரிப்பு]]
படம் பொதுமத்தில் அல்லது இந்த விக்கியில் தரவேற்றப்பட்டு இருக்க வேண்டும். தர வேற்ற, பார்க்க. --Natkeeran (பேச்சு) 00:12, 24 மே 2013 (UTC)
வணக்கம் நற்கீரன். படங்கள் பதிவேற்ற தங்களின் படிமப் பயிற்சி எனக்கு மிக பயனுள்ளதாக இருந்தது. உங்கள் ஆலோசனைப்படி நேற்று எனது கட்டுரையில் ஐந்து படங்கள் இணைத்து விட்டேன். எனக்கு அடிப்படை கணிப்பொறி பயிற்சி இல்லாதபடியாலும், வயதின் காரணமாகவும் எனக்கு சொல்லப்படும் யோசனைகள் உடன் செயல்படுத்த இயலவில்லை. [பயனர்:krishnamoorthy1952]
வணக்கம், எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி/தொகுப்பு 1!
நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)
குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
--இரவி (பேச்சு) 07:16, 2 சூன் 2013 (UTC)
பதக்கம் வழங்கி பாரட்டியமைக்கு நன்றி ரவி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு)
நீங்கள் கேட்டுக் கொண்ட படங்கள் இந்த இணைப்பில் உள்ளன பயனர்:Krishnamoorthy1952/படங்கள். அப் பக்கத்தின் மேற் பகுதியில் உள்ளதை படியெடுத்து நீங்கள் விரும்பிய இடத்தில் ஒட்டினால் அங்கு இப் படங்கள் சேர்க்கப்படும். --Natkeeran (பேச்சு) 00:36, 25 சூன் 2013 (UTC)
தங்களின் மேலான உதவிக்கு நன்றி நற்கீரன். --எஸ். பி. கிருஷ்ணமூர்தி (பேச்சு)
விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு என்று சற்று தனித்துவமான நடையும் முறையும் உண்டு. தமிழ் விக்கியை விட ஆங்கில விக்கியில் இது சற்று இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. குறிப்பாக முறைப்படி மேற்கோள்கள் சேர்ப்பது முக்கியம் ஆகும்.
நீங்கள் சேர்த்த நபரை அவர்கள் குறிப்பிடத்தக்கவரா என்று அறியமுடியவில்லை என்று கூறி நீக்கி உள்ளார்கள். இவர் முக்கியமான ஒரு நபரே என்று நிரூபிக்கும் வண்ணம் தரமான வலைத்தளங்கள், நூல்கள், இதழ்களில் இருந்து மேற்கோள்கள் பெற்று முறைப்படி சேர்த்தால் கட்டுரையை மீண்டும் சேர்க்க முடியும்.
தமிழ் விக்கியில் கூட உங்கள் கட்டுரைகளுக்கு மேற்கோள்கள் சேர்க்கப்பட வேண்டும், நடையும் ஒழுங்கமைப்பும் மேம்பட வேண்டு. இதற்கு நான் உதவ முடியும். ஒரு குறிப்பிட்ட கட்டுரையை நீங்கள் சுட்டினால் அதை ஒழுங்குபடுத்தித் தர முடியும். தமிழ் விக்கியில் மேற்கோள்கள் எப்படி சேர்ப்பது என்பதை நீங்கள் அறிந்து ஆங்கில விக்கியில் பயன்படுத்த முடியும்.
விக்கி நன்கு பரிச்சியம் ஆனவுடன் நீங்கள் திறனாகப் பங்களிக்க முடியும். நானும் தொடங்கும் போது உங்களைப் போன்றே தொடங்கினே.
சௌராட்டிரர்கள் தொடர்பான உங்கள் கட்டுரைகள் மிகவும் ஆர்வம் தூண்டுபவையாக அமைக்கின்றன. அவற்றை சீர்படித்தினால் சிறந்த கட்டுரைகளாக அமையும். நன்றி.
தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அபூர்வ வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:58, 2 சூலை 2013 (UTC)
வணக்கம், எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி/தொகுப்பு 1!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.
ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.
இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.
புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.
ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
--Anton (பேச்சு) 03:50, 2 செப்டம்பர் 2013 (UTC)
பதிப்புரிமை உள்ள படிமங்களை பதிவேற்ற முடியாது. பார்க்க: விக்கிப்பீடியா:படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும். --Anton (பேச்சு) 04:26, 2 செப்டம்பர் 2013 (UTC)
காண்க: பேச்சு:தமிழ்நாட்டுத் தமிழர் பட்டியல்--இரவி (பேச்சு) 18:07, 5 செப்டம்பர் 2013 (UTC)
--பயனர்:krishnamoorthy1952 (பேச்சு)
இக்கட்டுரையின் உள்ளடக்கங்களை நீங்கள் நீக்கி உள்ளீர்கள்..இது விக்கிச் செயற்பாட்டுக்கு புறம்பானது. Vandalism எனக் கருதப்படும். உங்களது ஆக்கங்கள் அனைத்தும் விக்கிக்குப் பங்களித்தப் பிறகு அதனை நீக்க விக்கி சமூகத்திற்கு மட்டுமே உரிமை உள்ளது. உங்களுக்கான உரிமையைத் துறந்துள்ளீர்கள் ! எந்த மனத்தாபத்தையும் இங்கு உரையாடித் தீர்த்துக் கொள்ளுங்கள். விக்கி சமூகம் விக்கிப் பயனர்களின் ஒருமித்த கருத்தை ஒட்டியே இயங்குகிறது. வலைப்பத்திவு என்பது தனிநபரின் உரிமையை இழக்காமல் அவரது விருப்பப்படி வடிவமைத்த பக்கங்களில் அவர்களுக்கு விருப்பமான மொழி நடையில் எழுதப்படுவது. விக்கிக்கொள்கைகள் உங்களுக்கு ஒப்புதல் இல்லையெனில் வலைப்பதிவு ஒன்றைத் துவங்கி உங்கள் கருத்துகளுடன் கூடிய கட்டுரைகளை இடலாம். வாழ்த்துகள் !--மணியன் (பேச்சு) 12:01, 6 செப்டம்பர் 2013 (UTC)
--பயனர்:krishnamoorthy1952 பயனர்பேச்சு:krishnamoorthy1952
வணக்கம்! இரண்டு நாட்களுக்கு முன்பு உங்களை வருந்த வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட நான், இப்போது மனம் வருந்துகிறேன்...ஆம்; உங்களின் இன்னொரு செயல், நிலைமையை மேலும் சிக்கல்படுத்துகிறது.
வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். சுற்றுலாவுக்கு அடுத்த நாள் பயிற்சிப் பட்டறைகள், கொண்டாட்டங்கள் கூடிய இரண்டாம் நாள் நிகழ்வு திறந்த அழைப்பாக ஏற்பாடு செய்கிறோம். இதிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறேன். இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியா, விக்கிப்பீடியர்கள் பற்றிய மேம்பட்ட புரிதலும் நட்பும் ஏற்பட வாய்ப்புண்டு என்று கருதுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:18, 18 செப்டம்பர் 2013 (UTC)
ஐயா, வணக்கம்! ஒரு கட்டுரையிலிருந்து மற்ற கட்டுரைகளின் பக்கத்திற்கு உள்ளிணைப்பு தரும்போது ஒருமுறை தந்தால் போதுமானது. உதாரணமாக ஒரு கட்டுரையில் பாண்டவர்கள் என வரும்போது முதல்முறை உள்ளிணைப்பு தந்தால் போதுமானது. அதே கட்டுரையில் ஒவ்வொரு முறையும் பாண்டவர்கள் எனும் பக்கத்திற்கு இணைப்பு தர வேண்டியதில்லை. இதன்மூலம் உங்களின் நேரத்தை பெருமளவு சேமிக்க இயலும். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:51, 17 நவம்பர் 2013 (UTC)
தேவயானி கோபர்கடே எனும் கட்டுரை ஏற்கனவே உள்ளதால், உங்களின் விரிவாக்கத்தை இக்கட்டுரையில் தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:59, 22 திசம்பர் 2013 (UTC)
வணக்கம், எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி/தொகுப்பு 1!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.
ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.
இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.
புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.
ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
--Anton·٠•●♥Talk♥●•٠· 04:47, 25 திசம்பர் 2013 (UTC)
விடாமுயற்சியாளர் பதக்கம் | ||
களைப்படையாமல், கடினமாக உழைக்கும் தங்களுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக... இப்பதக்கம் வழங்கப்படுகிறது! மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:14, 28 திசம்பர் 2013 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
ஞான யோகம், உத்தவ கீதை, பிரம்ம ஞானம் அடைய வழிகள், பிரம்ம ஞானம் ஆகிய கட்டுரைகளில் உள்ள உள்ளடக்கங்கள் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு பிரதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கட்டுரையினை வாசிப்பவருக்கு என்ன வேறுபாட்டினை ஏற்படுத்த முடியும்? உசாத்துணையும், வெளியிணைப்புக்களும் கட்டுரைக்கு பொருத்தமற்றுள்ளனவே. விவேகம், பிரம்ம ஞானம் ஆகிய கட்டுரைகளை பொதுவாக எழுதி, சமயப் பார்வையையும் எழுதுங்கள். இல்லாவிட்டால் கட்டுரைகள் கேள்விக்குட்படுத்தப்பட்டு அழிக்கப்படலாம். இவற்றைப் பாருங்கள்: விக்கிப்பீடியா:வெளி இணைப்புகள், விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல். மேலும், வலைத்தளங்களிலிருந்து பதிப்புரிமையுள்ள உள்ளடக்கங்களை பிரதி செய்யாதீர்கள். நன்றி. --Anton·٠•●♥Talk♥●•٠· 12:52, 15 சனவரி 2014 (UTC)
திரைப்படங்கள் அனைத்துக்கும் திரைப்படம் என்ற பின்னொட்டு தேவைப்படாது. அதே பெயரில் வேறு பொருளுடைய கட்டுரை தொடங்கலாம் என அறிந்தால் மட்டுமே பின்னொட்டுத் தேவை.--Kanags \உரையாடுக 10:26, 19 சனவரி 2014 (UTC)
பொருத்தமில்லாமல் தலைப்புக்களை நகர்த்த வேண்டாம். நகர்த்துவதாயின் கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கவும். மேற்கோள் வெறுமனே இணைக்க முடியாது. பார்க்க: விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் --AntonTalk 11:33, 15 பெப்ரவரி 2014 (UTC)
ஜார்வா கட்டுரையில் உள்ள உள்ளடக்கங்களை நீக்கியிருக்கிறீகள். அக் கட்டுரை ஒன்றிணைக்கப்பட வேண்டிய ஒன்று. அதனை நிர்வாகிகள் யாராவது செய்வார்கள். அதற்கு முன் உள்ளடக்கங்களை நீக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். முதலில் உருவாக்கப்பட்ட கட்டுரை சிறிய அளவில் இருந்தாலும் நீக்கப்படும் போது அதில் ஏற்கனவே பங்களித்தவர்களின் பணியின் வரலாறு காக்கப்படாமல் போய் விடும். இனி இவ்வாறு செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். --Booradleyp1 (பேச்சு) 16:35, 8 மார்ச் 2014 (UTC)
--இனி அவ்வாறே செய்கிறேன், நன்றி.கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 00:35, 9 மார்ச் 2014 (UTC)
வணக்கம்! தங்களின் கட்டுரைகளோடு, மற்றவர்களின் கட்டுரைகளிலும் உரிய திருத்தங்களை அண்மைக்காலமாக நீங்கள் செய்துவருவது குறித்து மிக்க மகிழ்ச்சி! தொடரட்டும் உங்களின் பணி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:20, 13 மார்ச் 2014 (UTC)
ஜோஷி மடம் கட்டுரையில் நான் செய்துள்ள மாற்றங்களைக் கவனிக்கவும். குறிப்பாக வெளி இணைப்புகள் எழுதப்படும் முறை பற்றிக் கவனியுங்கள். பாடல் பெற்ற தலங்கள் என்னும் போது, பொதுவாக சைவசமயக் குரவர்களால் பாடப்பெற்ற தலங்களையே குறிக்கும். ஜோஷி மடம் கட்டுரையில் அதுபற்றி எத்தகவலும் இல்லை. இந்து சமயம், கோயில்கள் போன்ற தாய்ப்பகுப்புகளைக் கட்டுரைகளில் சேர்க்காதீர்கள். அவற்றின் உப பகுப்புகளையே சேர்க்க வேண்டும்.--Kanags \உரையாடுக 22:37, 22 மார்ச் 2014 (UTC)
--நன்றி கனக்ஸ். இனி தங்களின் ஆலோசனையின்படி நடந்து கொள்கிறேன்.--கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 4.12, 22 மார்ச் 2014 (UTC)
சௌராட்டிர மேல்நிலைப் பள்ளி, மதுரை இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள படிமங்களின் பதிப்புரிமை என்ன? இவை நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது போல் உள்ளது. முறையான பதிப்புரிமை இல்லாவிட்டால் இவை நீக்கப்படும். --AntonTalk 08:05, 9 ஏப்ரல் 2014 (UTC)
--கட்டுரையில் உள்ள படிமங்கள், இப்பள்ளியின் நூற்றாண்டு மலரிலிருந்து எடுக்கப்பட்டவைகளே. மேலும் பள்ளியின் நிர்வாகம் நூற்றாண்டு மலரின் பதிப்புரிமை பதிவு செய்யப்படாததால் படிமங்கள் என்னால் கையாளப்பட்டுள்ளது. நான் செய்தது தவறு என நினைத்தால் படிமங்களை கட்டுரையிலிருந்து நீக்கி விடுங்கள். மறுப்பு இல்லை. --கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 18.05, 09 ஏப்ரல் 2014 (UTC)
--வணக்கம் அண்டன். இக்கட்டுரையில் உள்ள பல படிமங்களை நீக்கியதன் மூலம் உங்கள் மனம் நிறைவடைந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. --கிருஷ்ணமூர்த்தி (பேச்சு)16.04, 10 ஏப்ரல் 2014 (UTC)
--வணக்கம் அண்டன். இதில் பதிப்புரிமை மீறல் எதுவும் இல்லை. மேற்படி பள்ளியின் நூற்றாண்டு மலர் பதிப்புரிமையோ அல்லது காப்புரிமையோ பதிவு செய்யப்படாத ஒன்று என்று நான் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தும், நீங்களே பதிப்புரிமை உள்ள ஆக்கம் என்று நினைத்து படிமங்களை நீக்கியுள்ளீர்கள். ஏற்கனவே நீங்கள் மூன்று முறை பதிப்புரிமை உள்ள ஆக்கங்கள் கட்டுரையில் இணைக்க வேண்டாம் என்று கூறிய பின்பு எந்த பதிப்புரிமை உள்ள் படிமங்களையும் கட்டுரையில் இணைப்பதில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். இக்கட்டுரையில் உள்ள படிமங்கள் பதிப்புரிமை & காப்புரிமை பெற்றவை அல்ல. நான் ஏற்கனவே இவைகள் பதிப்புரிமை அற்ற படிமங்கள் என்று எடுத்துரைத்தும், படிமங்களை கட்டுரையிலிருந்து நீக்கியுள்ளீர்கள். எனவே நீங்களே எதனையும் தன்னிச்சையாக முடிவு எடுக்காதீர்கள்.
மேலும் நீங்கள் சொல்வதற்கு முன்பாகவே நான் சில வாரங்களாக துப்புரவு பணி தொடங்கிய பின்பு தான், இப்படிமங்கள் ஒராண்டு கழித்து இக்கட்டுரையிலிருந்து நேற்று நீக்கப்ப்பட்டுள்ளது. உங்கள் செயல் எனது துப்புரவு பணிககு கிடைத்த ஒரு நல்ல பரிசாக கருதுகிறேன். வாழ்க வளமுடன். ---கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 21.04, 10 ஏப்ரல் 2014 (UTC)
--Natkeeran (பேச்சு) 16:07, 10 ஏப்ரல் 2014 (UTC)
வணக்கங்க, பேச்சுப் பக்க உரையாடல்கள் ஒரு வரலாற்று ஆவணமாக கருதப்படும் என்பதால் அவற்றை நீக்குவது வழமை இல்லை. உங்கள் பயனர் பக்க உள்ளடக்கத்தை நீக்கும் உரிமை மட்டுமே உங்களுக்கு உண்டு. நன்றி.--இரவி (பேச்சு) 09:46, 14 ஏப்ரல் 2014 (UTC)
வணக்கம்! இக்கட்டுரையின் வெளியிணைப்புகள் பகுதியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களைக் கவனியுங்கள். இதுபோன்று அமைத்தால், சிறப்பாக இருக்கும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:31, 28 ஏப்ரல் 2014 (UTC)
தங்கள் ஆலோசனைக்கு நன்றி மா. செல்வசிவகுருநான்.-- பயனர்:Krishnamoorthy1952 (பேச்சு) 17:21, 28 ஏப்ரல் 2014 (UTC)
பேச்சு:ராஜாத்தி அம்மாள் பார்க்கவும்.--Booradleyp1 (பேச்சு) 13:22, 6 மே 2014 (UTC)
பயனர்:Dhakshnamohan என்பது பயனர் பக்கம்தானே?! விசமத் தொகுப்பாக இல்லாதபட்சத்தில் எதற்காக அப்பக்கத்தை நீக்கவேண்டும்? சரியாக கவனியாது நீக்கல் வார்ப்புரு இட்டுவிட்டீர்கள் என நினைக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:40, 8 மே 2014 (UTC)
வணக்கம்! இந்தியத் தேர்தல் குறித்த உங்களின் இற்றைகள் நன்று! கீழ்க்காணும் கட்டுரைகளில் அட்டவணைகள் அனைத்தும் தயார்நிலையில் உள்ளன. முடிவுகள் வெளியாகும்போதும், அதற்குப் பிறகும்... உங்களுக்கு ஆர்வமும், நேரமும் இருப்பின்... இற்றை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்! நன்றி!
--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:40, 15 மே 2014 (UTC)
வணக்கம்! விசிறி சாமியார் (நூல்) என்னும் பக்கத்தில் தாங்கள் சுட்டியிருந்த மேற்கோள்கள் அக்கட்டுரைக்கானவை அல்ல; எனவே அவை நீக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றுள் ஒன்று பாலகுமாரன் விசிறிசாமியாரைப் பற்றி எழுதிய கட்டுரை என்பதால் அது வெளியிணைப்பாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. வழங்கியிருந்த வெளியிணைப்புகள் இரண்டும் அந்நூலுக்கான விமர்சனமோ நூலுக்குத் தொடர்புடையனவோ அல்ல; அவை விசிறி சாமியாரைப் பற்றியவை. எனவே அவை நீக்கப்பட்டுப்பட்டு இருக்கின்றன. தாங்கள் விரும்பினால் யோகி ராம்சுரத் குமார் என்னும் பக்கத்தை உருவாக்கி அதில் அந்த இணைப்புகளை வழங்கினால் பொருத்தமாக இருக்கும். மேலும் பொருத்தமற்ற மேற்கோள்களையும் வெளியிணைப்புகளையும் வழங்க வேண்டா எனக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி! --பொன்னிலவன் (பேச்சு) 14:28, 15 மே 2014 (UTC)
பேச்சு:இந்தியப் பொதுத் தேர்தல், 2014 இங்குள்ள பெயர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:08, 16 மே 2014 (UTC)
வணக்கம் எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி! தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பல கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை சேர்க்கப்படவில்லை. இவ்வாறு உள்ள கட்டுரைகளை தரக்கட்டுப்பாட்டின் காரணமாக தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து நீக்கப்படலாம். உங்களால் முடிந்தவரை இவற்றை சேர்க்க முயற்சிக்கவும். இதைப் பற்றிய தகவல்களைப் பெற சான்று சேர்க்கும் திட்டத்தை பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள்!
--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:28, 17 மே 2014 (UTC)
வணக்கம் கிருஷ்ணமூர்த்தி! உங்களுக்கு இங்கு செய்தி உள்ளது. பார்க்கவும்.--நந்தகுமார் (பேச்சு) 18:33, 18 மே 2014 (UTC)
வணக்கம்! முடிந்தால் en:Prime Minister's Office (India) எனும் கட்டுரையினை தமிழில் தாருங்கள், நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:31, 29 மே 2014 (UTC)
ஆயிற்று இந்தியப் பிரதமரின் அலுவலகம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:12, 30 மே 2014 (UTC)
எளிய மகாபாரதம் கட்டுரையை நீக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பேச்சுப் பக்கத்தில் உங்கள் கருத்துக்களைத் தாருங்கள்.--Kanags \உரையாடுக 13:20, 4 சூன் 2014 (UTC)
--இந்த கட்டுரையை விக்கியாக்க நடையில் மாற்றி எழுத பத்து நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டுகிறேன். அது வரை இக் கட்டுரையை நீக்க வேண்டாம் என வேண்டிக் கொள்கிறேன்.--கிருஷ்ணமூர்த்தி 1952 (பேச்சு) 16:00, 4 சூன் 2014 (UTC
16.06.2014 அன்று நீங்கள் எழுதியுள்ள லவன் என்ற கட்டுரை ஏற்கனவே உள்ளது. பார்க்க இலவன் (Lava (Ramayana)) முடிந்தால் நீக்கி விடவும். உங்கள் மேலான கருத்தை வரவேற்கிறேன்.--Muthuppandy pandian (பேச்சு) 07:29, 17 சூன் 2014 (UTC)
அஷ்ட வக்கிரன் கட்டுரை மகாபாரத கதை மாந்தர்கள் பகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது; கட்டுரையினுள் வரும் ஜனகர் என்ற பெயர் இராமாயணக் கதை மாந்தர் கட்டுரையுடன் உள்ளிணைப்பு செய்யப்பட்டுள்ளது. இரு இதிகாசங்களின் கதாபாத்திரங்களுக்கிடையே இணைப்புள்ளதா, இரண்டும் ஒரே காலத்தியவையா என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது. தெளிவிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 16:01, 13 சூன் 2014 (UTC)
--ஜனகர், அகத்தியர், விசுவாமித்திரர் போன்ற பெயர்கள் புராணங்களிலும், இதிகாசங்களிலும் பல இடத்தில் வருகிறது. இப்பெயர்கள் மாபெரும் ஞானிகளை குறிக்கப் பயன்படுத்தியுள்ளனர். புராண இதிகாசங்களில் வரும் கதைகளுக்கு காலம் கணிக்க இயலாது. நன்றி.--கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 21.41:01, 13 சூன் 2014 (UTC)
பேச்சு:பதினெண் புராணங்கள் (நூல்) பார்க்கவும்.--Booradleyp1 (பேச்சு) 15:37, 15 சூன் 2014 (UTC)
சூலை 2014 இல் நான் செய்திருந்த தொகுப்புகளை எதற்காக நீக்கினீர்கள்? --Kanags \உரையாடுக 10:17, 22 சூன் 2014 (UTC)
• 15:32, 23 June 2014 (diff | hist) . . (+38) . . சத்தியவான் சாவித்திரி கதை (current) கட்டுரை எழுதியிருந்தேன். ஆனால் அக்கட்டுரை தொடர்பான விவரம் New pages-புதியன பகுதியில் காணப்படவில்லை. இதற்கான காரணம் அறியலாமா?. --கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) -- 22:17, 23 சூன் 2014 (UTC)
பக்கங்களை நகர்த்த முன் உரையாடவும். --AntonTalk 16:59, 7 சூலை 2014 (UTC)
--உங்கள் கருத்தை ஏற்கிறேன். --எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 15:20, 8 சூலை 2014 (UTC)
பார்க்கவும்:பேச்சு:மூத்தகுடி மக்கள். --Booradleyp1 (பேச்சு) 05:08, 8 சூலை 2014 (UTC)
வணக்கம். மடங்கள் என்ற இணைப்பில் தற்போது இடப்பட்டுள்ள ஆதீனங்கள் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவை அல்ல. ஆகவே, அதனை அன்புகூர்ந்து நீக்குவது பற்றி யோசிக்கவேண்டுகிறேன்.--பா.ஜம்புலிங்கம் 15:46, 7 ஆகத்து 2014 (UTC)
--நீக்கி விட்டேன். நன்றி. எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 1:20, 8 ஆகத்து 2014 (UTC)
வணக்கம். விவரம் அறிந்தேன். நன்றி. சங்கர மடம் பற்றிய குறிப்பு நீக்கப்பட்டுள்ளது. சங்கரமடம் கும்பகோணம் மடத்துத் தெருவில் அரசு கல்லூரிக்குச் செல்லும் வழியில் உள்ளது. அதனைச் சேர்ப்பது குறித்து கருதிப்பார்க்கும்படி வேண்டுகிறேன். இன்னும் சில மடங்கள் உள்ளன. நேரில் பார்த்து உறுதி செய்தபின் அவை பற்றி எழுதுவேன். தங்களின் அன்பிற்கு நன்றி. --பா.ஜம்புலிங்கம் 08:06, 8 ஆகத்து 2014 (UTC)
வணக்கங்க. உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/கிருஷ்ணமூர்த்தி பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். நன்றி.--இரவி (பேச்சு) 13:30, 9 ஆகத்து 2014 (UTC)
பேச்சு:விருப்ப ஓய்வூதியம் பார்க்கவும்.--Booradleyp1 (பேச்சு) 04:55, 10 ஆகத்து 2014 (UTC)
சிறந்த உழைப்பாளர் பதக்கம் | |
நாள்தோறும் தங்களின் பங்களிப்பு இருக்கிறது! இந்து மதம், பொது வாழ்க்கையில் உள்ளோர் குறித்த கட்டுரைகள் என கலைக்களஞ்சியத்திற்கு தேவையான பணியினை செய்துவருகிறீர்கள்; நன்றி! மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:49, 8 அக்டோபர் 2014 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
பதிப்புரிமையுள்ள உள்ளடக்கங்களைச் சேர்க்க வேண்டாம். பதிப்புரிமை மீறல் பற்றி தங்களுக்கு பலமுறை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்ந்தால் தாங்கள் தடை செய்யப்படலாம். மேலும், மேற்கோள் சுட்டும்போது பொதுவாக இணையத்தளத்திற்கு இணைக்காதது உள்ளடக்கத்திற்கு இணைக்கவும். நம்பகத்தன்மையற்ற இணைப்புக்களை இணைக்கவும் வேண்டாம். நன்றி. --AntonTalk 04:39, 13 அக்டோபர் 2014 (UTC)
நீங்கள் கட்டுரைகளில் பல பதிப்புரிமை மீறல் உள்ள உள்ளடங்கங்களைச் சேர்த்துள்ளீர்கள் அல்லது சிறு மாற்றத்துடன் நகல் எடுத்துள்ளீர்கள். எ.கா: அரக்கு மாளிகை. இவை விக்கிப்பீடியா கொள்கைக்குப் புறப்பானவை. காண்க: விக்கிப்பீடியா:பதிப்புரிமை, விக்கிப்பீடியா:பொழிப்புரை (paraphrasing). எனவே, ஏற்கெனவே நீங்கள் சேர்த்த பதிப்புரிமை மீறல் உள்ள உள்ளடங்கங்களை நீக்கி உதவி செய்யுங்கள் அல்லது அவ்வுள்ளடக்கங்கள்/கட்டுரைகள் நீக்கப்படலாம். நன்றி. --AntonTalk 09:52, 29 அக்டோபர் 2014 (UTC)
தமிழ் விக்கிப்பீடியாவின் முதற்பக்க சிறப்புப்படம்/சிறப்பு படத்தில் ஆண்டு 1944 என்று குறிப்பதற்கு பதிலாக 1994 என உள்ளது.
1994 இல் ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சின் தலைநகர் பாரிசை நேச நாட்டுப் படைகள் தாக்கிக் கைப்பற்றின. இது பாரிசின் விடுவிப்பு எனப்படுகிறது. பாரிசுக்குள் நுழையும் விடுதலை பிரெஞ்சுப் படைகளை பாரிசு மக்கள் ஆரவாரித்து வரவேற்பதைக் காணலாம். -பயனர்:Krishnamoorthy1952 (பேச்சு) 03:19, 29 நவம்பர் 2014 (UTC)
அருட்செல்வப்பேரரசன் கட்டுரையில் இடப்பட்டிருந்த வார்ப்புருக்கள் இரண்டும் கட்டுரையில் குறிப்பிடத்தக்க மாற்றம் செய்யப்படாமல் நீக்கப்பட்டுள்ளது. கட்டுரை குறிப்பிடத்தக்கது என நிறுவாமலும், போதிய உள்ளடக்கம் இல்லாமலும் இருந்தால் அக்கட்டுரை நீக்கப்படும். --AntonTalk 17:06, 9 திசம்பர் 2014 (UTC)
பேச்சு:டேவிட் கொரேஷ் பார்க்கவும்.--Booradleyp1 (பேச்சு) 14:29, 14 திசம்பர் 2014 (UTC)
மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயில் இந்த பக்கத்திற்கு சரியான மேற்கோள் கொடுத்து உதவுங்கள்.--Muthuppandy pandian (பேச்சு) 13:33, 27 சூன் 2015 (UTC)
இந்திய மன்னராட்சி அரசுகள் என்ற தலைப்பில் வேறொரு கட்டுரை இருப்பதால் நீங்கள் எழுதிய கட்டுரையை இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல் என்ற தலைப்புக்கு நகர்த்தியுள்ளேன்.--Kanags \உரையாடுக 20:57, 20 திசம்பர் 2014 (UTC)
வணக்கம் எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி/தொகுப்பு 1!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.
வணக்கம், எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி/தொகுப்பு 1! உங்கள் உரையாடல் பக்கம் நீண்ண்ண்டு கொண்டே போகிறது :) பொதுவாக, 50 உரையாடல் இழைகளைத் தாண்டும் போதோ பக்கத்தில் அளவு ஒரு இலட்சம் பைட்டுகளைத் தாண்டும் போதோ பரணேற்றினால் காணவும் கருத்திடவும் இலகுவாக இருக்கும். பார்க்க: உதவி:பேச்சுப் பக்கத் தொகுப்பு. பரணேற்றிய பிறகு இந்த வேண்டுகோளை நீக்கி விடலாம். நன்றி.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.