![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1c/Kellie%2527s_Castle_Batu_Gajah.jpg/640px-Kellie%2527s_Castle_Batu_Gajah.jpg&w=640&q=50)
பத்து காஜா
From Wikipedia, the free encyclopedia
பத்து காஜா (Batu Gajah), என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில் உள்ள ஒரு நகரமாகும். இந்த நகரம் ஈப்போ மாநகரம், தஞ்சோங் துவாலாங், துரோனோ, கிளேடாங், பூசிங், சிம்பாங் பூலாய் போன்ற இடங்களுக்கு மிக அருகாமையில் உள்ளது.
விரைவான உண்மைகள் பத்து காஜாBatu Gajah பேராக், நாடு ...
மேலிருந்து, இடமிருந்து வலமாக: கெல்லி கோட்டை, பத்து காஜா மருத்துவமனை, பத்து காஜா நீதிமன்றம், தஞ்சோங் துவாலாங் ஈயமண் வாரி | |
![]() | |
ஆள்கூறுகள்: | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
உருவாக்கம் | பத்து காஜா: 1870 |
அரசு | |
• நாடாளுமன்ற உறுப்பினர் | ஜனநாயக செயல் கட்சி சிவகுமார் வரதராஜன் |
பரப்பளவு | |
• மொத்தம் | 424 km2 (164 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 1,15,735 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
இணையதளம் | http://www.mdbg.gov.my/web/guest/home |
மூடு
பத்து காஜா நகரம் ஈப்போ மாநகரத்தில் இருந்து 24 கி.மீ. தொலைவில் இருக்கிறது. பேராக் சுல்தான் அசுலான் சா இங்குதான் பிறந்தார். இங்குதான் தன் தொடக்கக் கல்வியையும் பயின்றார். இந்த நகரம் 1870ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட நகரம் ஆகும். 1874-ஆம் ஆண்டில், பேராக் மாநிலத்தின் பிரித்தானிய முதல்வர் ஜேம்ஸ் பர்ச் இந்த நகரத்திற்கு வந்த போது, அங்கு ஈயச் சுரங்கங்கள் இருந்தன என்று குறிப்பிட்டுள்ளார்.