![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/76/Batang_Padang_highlighted_in_Perak%252C_Malaysia.svg/langta-640px-Batang_Padang_highlighted_in_Perak%252C_Malaysia.svg.png&w=640&q=50)
பத்தாங் பாடாங் மாவட்டம்
மலேசியாவின் பேராக் மாநிலத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
பத்தாங் பாடாங் (மலாய்: Batang Padang) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில் உள்ள 12 மாவட்டங்களில் ஒரு மாவட்டம் ஆகும். தாப்பா மாவட்ட மன்றம் (Tapah District Council) எனும் நகராட்சி மன்றத்தினால் நிர்வாகம் செய்யப்படுகிறது. தாப்பாவில் தலைமையகத்தைக் கொண்டுள்ளது. பத்தாங் பாடாங் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் பீடோர்; தாப்பா; சுங்கை.
![]() பத்தாங் பாடாங் மாவட்டம் அமைவிடம் பேராக் | |
![]() | |
ஆள்கூறுகள்: 4°05′N 101°20′E | |
நாடு | ![]() |
தொகுதி | தாப்பா |
நகராட்சி | தாப்பா மாவட்ட மன்றம் |
அரசு | |
• மாவட்ட அதிகாரி | சாரூல் அபென்டி பின் பகாருடின் (Shahrul Affendi bin Baharudin) |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,794.18 km2 (692.74 sq mi) |
மக்கள்தொகை (2016) | |
• மொத்தம் | 1,23,600 |
• மதிப்பீடு (2015) | 88,800 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 35000-35600 |
தொலைபேசி எண் | +6-05 |
வாகனப் பதிவெண் | A |
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/cb/Map_of_Batang_Padang_District%2C_Perak.svg/320px-Map_of_Batang_Padang_District%2C_Perak.svg.png)
2016 ஜனவரி 11-ஆம் தேதி, பத்தாங் பாடாங் மாவட்டத்தில் இருந்து முவாலிம் மாவட்டம் எனும் புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. அந்த வகையில் முன்பு இருந்த தஞ்சோங் மாலிம் துணை மாவட்டம்; புதிய முழு மாவட்டமாக மாற்றம் கண்டது.[1]
2007 ஆகஸ்ட் மாதம், பத்தாங் பாடாங் மாவட்டத்தில் பெரிய நீர்நிலைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பேராக் மாநில அரசாங்கம் அறிவித்தது. அண்டை மாநிலமான சிலாங்கூர் மாநிலத்தின் நீர்ப் பற்றாக்குறை பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் வகையில் நீர் விற்பனைக்குத் திட்டம் வகுக்கப் பட்டது.[2]