படகோனியா
From Wikipedia, the free encyclopedia
படகோனியா (Patagonia) (எசுப்பானிய ஒலிப்பு: [pa.ta.ˈɣo.ni̯a]) தென் அமெரிக்காவின் தென் கோடியில் அமைந்த வறண்ட வானிலை கொண்ட இப்பகுதியில் மக்கள் அடர்த்தி மிகக் குறைவே. படகோனியாவின் பொதுவான வானிலை வறண்ட குளிராக உள்ளது. படகோனியாவின் பாம்பாஸ் புல்வெளிகள் கால்நடைகளுக்கு நல்ல மேய்ச்சல் நிலங்களாக அமைந்துள்ளது. படகோனியாப் பிரதேசத்தின் பெரும் பகுதி அர்ஜெண்டினாவிலும், குறும் பகுதி சிலியிலும் அமைந்துள்ளது. படகோனியாவில் ஆண்டீஸ் மலைத் தொடரின் தென் பகுதியும்; படகோனியா பாலைவனமும், பாலைவனத்தில் பாம்பாஸ் எனப்படும் ஸ்டெப்பி புல்வெளிகளும் கொண்டுள்ளது. படகோனியாவின் கிழக்கில் அட்லாண்டிக் பெருங்கடலும், மேற்கில் பசிபிக் பெருங்கடலும் உள்ளது. ஆண்டீஸ் மலைத்தொடரில் உற்பத்தி ஆகும் கொலராடோ ஆறும்; பாராங்காஸ் ஆறும் வடக்கு படகோனியாவைக் கடந்து அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது.[1]