பஞ்சாப் பாரம்பரிய உணவு From Wikipedia, the free encyclopedia
பஞ்சிரி ( Panjiri ) என்பது பாக்கித்தான், இந்தியா ஆகிய நாடுகளில் உள்ள பஞ்சாப் மாநிலங்களின் பாரம்பரிய பருவகால உணவு வகையாகும்.[1] இந்த உணவு ஊட்டச்சத்து மிக்கது. இது சுத்தமான கோதுமைமாவு, சர்க்கரை, நெய், ஆகியவற்றோடு மிகுதியான உலர்பழங்கள், மூலிகைப் பொருட்கள் ஆகியவற்றைச் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இது பெரும்பாலும் குளிர்காலத்தில் குளிரில் இருந்து காக்கும்விதத்தில் தயாரித்து உண்ணப்படுகிறது. பஞ்சிரி இது குறிப்பாக பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படுகிறது. இதை உண்பதால் தாய்மார்களுக்கு பால் நன்கு சுரக்கும் என கருதப்பட்டு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பண்டைய காலத்தில் இருந்து இந்து மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பின்வந்த பல நூற்றாண்டு காலங்களில் கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு பொருளுள்ள சடங்காக சீக்கியர்களால் வழங்கப்பட்டு வருகிறது.
பரிமாறப்படும் வெப்பநிலை | பாலைவனம் |
---|---|
தொடங்கிய இடம் | பாக்கித்தானின் பஞ்சாப் |
முக்கிய சேர்பொருட்கள் | சுத்தமான கோதுமை மாவு , சர்க்கரை, நெய், உலர் பழங்கள், மூலிகை பசை |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.