From Wikipedia, the free encyclopedia
பகாவ் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Bahau Railway Station மலாய்: Stesen Keretapi Bahau); சீனம்: 金马士站) என்பது தீபகற்ப மலேசியா, நெகிரி செம்பிலான், செம்போல் மாவட்டம், பகாவ் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் பகாவ் மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.[1]
கேடிஎம் இண்டர்சிட்டி | |||||||||||||||||||||
பகாவ் தொடருந்து நிலையம் | |||||||||||||||||||||
பொது தகவல்கள் | |||||||||||||||||||||
அமைவிடம் | பகாவ், நெகிரி செம்பிலான் | ||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 2°48′37″N 102°24′20″E | ||||||||||||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து நிறுவனம் | ||||||||||||||||||||
தடங்கள் | தீபகற்ப மலேசியா கிழக்கு கரை வழித்தடம் | ||||||||||||||||||||
நடைமேடை | 1 பக்க நடைமேடை | ||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 3 | ||||||||||||||||||||
இணைப்புக்கள் | உள்ளூர் போக்குவரத்து | ||||||||||||||||||||
கட்டமைப்பு | |||||||||||||||||||||
தரிப்பிடம் | இலவசம் | ||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | ||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||
திறக்கப்பட்டது | 1910 | ||||||||||||||||||||
சேவைகள் | |||||||||||||||||||||
| |||||||||||||||||||||
|
மலேசியக் கிழக்கு கடற்கரை தொடருந்து சேவையின் தீபகற்ப மலேசிய கிழக்கு கரை வழித்தடத்தில் (KTM East Coast Railway Line) இந்த நிலையம் அமைகிறது. மலேசியாவின் முக்கியமான தொடருந்து நிலையங்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்த நிலையம் கேடிஎம் இண்டர்சிட்டி (KTM Intercity) தொடருந்து சேவை; கேடிஎம் இடிஎஸ் (KTM ETS) தொடருந்து சேவை; ஆகிய இரண்டு சேவைகளையும் வழங்கி வந்தது. ஆனால் 2017-ஆம் ஆண்டுக்குப் பின்னர் கேடிஎம் இடிஎஸ் தொடருந்து சேவை நிறுத்தப்பட்டு விட்டது. கேடிஎம் இண்டர்சிட்டி சேவை மட்டுமே தொடர்கிறது.[2]
தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கரை பகுதியின் கிளாந்தான் மாநிலத்தின் தும்பாட் தொடருந்து நிலையம் தொடங்கி நெகிரி செம்பிலான் கிம்மாஸ் தொடருந்து நிலையம் (Tumpat–Gemas) வரையிலான நிலையங்களில் இருந்து வரும் தொடருந்துகள் இந்த பகாவ் நிலையத்தைக் கடந்து செல்கின்றன.
பகாவ் (Bahau); நகரம் நெகிரி செம்பிலான் மாநிலத்தின், செம்போல் மாவட்டத்தில் (Jempol District) அமைந்துள்ளது. பகாவ் நகரம், நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகரமான சிரம்பான் நகரில் இருந்து சுமார் 53 கி.மீ. தொலைவிலும்; மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 88 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
முன்பு காலத்தில் தீபகற்ப மலேசியாவின் உட்புறத்தில், மலாக்கா நகரத்தையும் பகாங் மாநிலத்தையும் இணைக்கும் ஒரு நீர் நிலப் பாதை இருந்தது. அந்தப் பாதையில் தான் இந்தப் பகாவ் நகரம் அமைந்து இருந்தது.
தீபகற்ப மலேசியாவின் மேற்கு கடற்கரையில் இருக்கும் மூவார் நிலப் பகுதிகளைக் கிழக்கு கடற்கரையில் உள்ள பகாங், பெக்கான் நிலப் பகுதிகளுடன் அந்தப் பாதை இணைத்தது.
1900-ஆம் ஆண்டுகளில், பகாவ், கோலா பிலா பகுதிகளில் ஈயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சீனக் குடியேற்றவாசிகளின் வருகையும் பெருகியது. பகாவ் நகரம் நகரம் செழிக்கத் தொடங்கியது.
சீனக் குடியேற்றவாசிகள் பகாவ் நகரத்திற்கு அருகில் மாசான் எனும் நகரத்தை நிறுவினார்கள். ரப்பர் தொழில், எண்ணெய்ப் பனை தொழில் மற்றும் காட்டு மர வணிகம் போன்றவற்றில் ஈடுபட்டனர். அதன் பின்னர் பகாவ் நகரத்தின் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார்கள். பகாவ் நகரமும் வளர்ச்சி அடைந்தது.
பகாவ் நகரத்தின் மக்கள் தொகையில் அதிகமானவர்கள் சீனர்கள். இவர்கள் பகாவ் நகரத்தில் வாழ்கின்றனர். மலாய்க்காரர்கள் பெரும்பாலும் புறநகரில் உள்ள பெல்டா பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இந்தியர்கள், நகர்ப் புறங்களிலும் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ரப்பர், எண்ணைய்ப் பனை தோட்டங்களிலும் வாழ்கின்றனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.