நோவார்ட்டீசு
From Wikipedia, the free encyclopedia
நோவார்ட்டீசு இன்டர்நேசனல் ஏஜி (Novartis International AG) சுவிட்சர்லாந்தின் பேசெல் நகரைத் தலைமையகமாகக் கொண்ட ஓர் பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனம் ஆகும். $46.806 பில்லியன் ஆண்டு வருமானமுள்ள இந்நிறுவனம் 2010ஆம் ஆண்டில் உலகின் மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் இரண்டாவது நிலையில் இருந்தது.[2]
![]() | |
வகை | பொது AG |
---|---|
நிறுவுகை | 1996 (ஒருங்கிணைப்பிற்கு பிறகு) |
தலைமையகம் | பேசெல், சுவிட்சர்லாந்து |
முதன்மை நபர்கள் | டேனியல் வாசெல்லா (தலைவர்), ஜோசப் ஜிமனெசு (முதன்மை செயல் அதிகாரி) |
தொழில்துறை | மருந்து தயாரிப்பு |
உற்பத்திகள் | மருந்துகள், வர்க்க மருந்துகள், நேரடி விற்பனை மருந்துகள், தடுப்பு மருந்துகள், அறுதியிடல் கருவிகள், தொடு வில்லைகள், கால்நடை மருத்துவம் (பட்டியல்...) |
வருமானம் | ![]() |
இயக்க வருமானம் | ![]() |
நிகர வருமானம் | ![]() |
மொத்தச் சொத்துகள் | ![]() |
மொத்த பங்குத்தொகை | ![]() |
பணியாளர் | ![]() |
துணை நிறுவனங்கள் | சிபா விசன், சாண்டோசு, அல்கான், சிரான் கார்ப்பொரேசன் |
இணையத்தளம் | www |
நோவார்ட்டீசு கிளோசபைன் (கிளோசாரில்), டைக்ளோஃபீனாக் (வோல்டரென்), கார்பமசெபைன் (டெக்ரெடோல்), வல்சார்ட்டன் (டியோவான்) மற்றும் இமாடினிப் மெசைலேட் (கிளீவெக்/க்ளிவெக்) போன்ற மருந்துகளைத் தயாரிக்கிறது. கூடுதலாக சைக்ளோசுபோரின் (நியோரல்/சான்டிமுன்), லெட்ரோசோல் (ஃபெமரா), மிதைல்பெனிடேட் (ரிடாலின்), டெர்பினபைன் (லாமிசில்), மற்றும் பிற மருந்துகளையும் தயாரிக்கிறது.
பெரியளவில் வர்க்க மருந்துகளை (generic drug) தயாரித்து வந்த சாண்டோசு என்ற நிறுவனத்தை சிபா-கெய்கி கையகப்படுத்தி ஒருங்கிணைத்து நோவார்ட்டீசு எனப் பெயரிட்டது. இந்தநிறுவனம் மழலையர் மற்றும் குழந்தைகள் உணவு பொருட்கள் தயாரித்து வந்த கெர்பர் நிறுவனத்திற்கு உரிமையானதாக இருந்தது. செப்டம்பர் 1, 2007இல் இதனை நெஸ்லே நிறுவனம் வாங்கியது.[3][4][5]நோவார்ட்டீசு ஐரோப்பிய மருந்து தயாரிப்பு தொழில் மற்றும் சங்கங்களின் கூட்டமைப்பிலும் (EFPIA)[6]பன்னாட்டு மருந்து தயாரிப்பாளர்கள் மற்றும் சங்கங்களின் கூட்டமைப்பிலும் (IFPMA)முழுமையான அங்கத்துவம் பெற்றுள்ளது.