![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f3/Nimroz.jpg/640px-Nimroz.jpg&w=640&q=50)
நிம்ரூஸ் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
நிம்ரூஸ் (Nimruz (பலூச்சி/பாரசீக மொழி: ولایت نیمروز; பஷ்தூ: نيمروز ولايت) என்பது ஆப்கானிஸ்தானின் முப்பத்தி நான்கு மாகாணங்களில் ஒன்றாகும். இது நாட்டின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது ஈரானின் சீசுத்தானும் பலுச்சிசுத்தானும் மாகாணத்தின் கிழக்கிலும், பாக்கித்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் வடக்கிலும் அமைந்துள்ளது. இந்த மாகாணமானது, ஐந்து மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மாகாணத்தில் 649 கிராமங்களை உள்ளன. மாகாணத்தின் மக்கள் தொகை சுமார் 156,600 ஆகும். ஜரான்ஜ் நகரம் மாகாணத் தலைநகரமாக செயல்படுகிறது. இந்த நகரத்தில் ஜரான்ஜ் வானூர்தி நிலையத்தில் உள்நாட்டு வானூர்தி சேவைகள் செயல்படுகின்றன.
நிம்ரூஸ்
Nimruz نيمروز | |
---|---|
![]() நிம்ருஸ் மாகாணத்தில் சக்சூர் | |
![]() ஆப்கானிஸ்தானில் நிம்ரூஸ் மாகாண உயர்நிலத்தைக் காட்டும் வரைபடம் | |
ஆள்கூறுகள் (Capital): 31.0°N 62.5°E / 31.0; 62.5 | |
நாடு | ![]() |
தலைநகரம் | ஜரான்ஜ் |
அரசு | |
• ஆளுநர் | முகம்மது சாமில்லாஹ் |
பரப்பளவு | |
• மொத்தம் | 41,356 km2 (15,968 sq mi) |
மக்கள்தொகை (2012)[1] | |
• மொத்தம் | 1,56,600 |
• அடர்த்தி | 3.8/km2 (9.8/sq mi) |
நேர வலயம் | UTC+4:30 |
ஐஎசுஓ 3166 குறியீடு | AF-NIM |
முதன்மை மொழிகள் | பலூச்சி தாரி பஷ்தூ |
நிம்ரூஸ் என்ற சொல்லானது பாரசீக மற்றும் பலோச்சி மொழிகளில் "நண்பகல்" அல்லது "அரை நாள்" என்று பொருள்படும். நிம்ருஸ் மாகாணமானது 41,000 கிமீ² பரப்பளவு கொண்டுள்ளது. இது நாட்டின் பரப்பளவிலும், மக்கள் தொகை மிகுந்த மாகாணமாகும். மாகாணத்தின் கணிசமான பகுதியானது தசிட் மார்கோ பாலைவனப் பகுதி ஆகும்.