நிக்கல் இருசயனைடு (Nickel dicyanide) என்பது Ni(CN)2 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சாம்பல் பச்சை நிறத்தில் காணப்படும் இச்சேர்மம் பெரும்பாலான கரைப்பான்களில் கரையாது.[2]
இனங்காட்டிகள் | |
---|---|
557-19-7 13477-95-7 | |
ChemSpider | 10711 |
EC number | 209-160-8 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 11184 71317429 |
| |
UNII | YX45CR8P6A |
UN number | 1653 |
பண்புகள் | |
Ni(CN)2 | |
வாய்ப்பாட்டு எடை | 110.729 |
தோற்றம் | மஞ்சள் பழுப்பு திண்மம் (நீரிலி)<br /நீல சாம்பல் திண்மம் (நான்குநீரேற்று)[1] |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H317, H334, H350, H372, H410 | |
P201, P202, P260, P261, P264, P270, P272, P273, P280, P281, P285, P302+352, P304+341, P308+313 | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | இரும்பு(II) சயனைடு கோபால்ட்(II) சயனைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
நீரிய நிக்கல்(II) அயனிகள் கரைசலில் இரண்டு சமமான சோடியம் அல்லது பொட்டாசியம் சயனைடை சேர்ப்பதன் மூலம் நிக்கல்(II) சயனைடு நான்குநீரேற்று சேர்மம் வீழ்படிவாகக் கிடைக்கிறது.[3] இந்நீரேற்றை 140 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்குவதால் நீரற்ற நிக்கல் இருசயனைடு உருவாகிறது.[2]
வேதிப்பண்புகள்
நிக்கல்(II) சயனைடு பொட்டாசியம் சயனைடு கரைசலில் கரைந்து பொட்டாசியம் டெட்ராசயனோநிக்கலேட்டைக் கொண்ட மஞ்சள் நிற கரைசலை உருவாக்குகிறது:[2][3]
- Ni(CN)2 + 2 KCN → K2[Ni(CN)4]
நிக்கல்(II) சயனைடு இருமெத்தில்கிளையாக்சைமுடன் (dmgH2) வினைபுரிந்து ஐதரசன் சயனைடை உருவாக்கும்.:[4]
- Ni(CN)2 + 2 dmgH2 → Ni(dmgH)2 + 2 HCN
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.