![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e2/Tureck%25C3%25A1_me%25C5%25A1ita_v_Ko%25C4%258Dkoru.jpg/640px-Tureck%25C3%25A1_me%25C5%25A1ita_v_Ko%25C4%258Dkoru.jpg&w=640&q=50)
நாரின் பிராந்தியம்
From Wikipedia, the free encyclopedia
நரியன் பிராந்தியம் (Naryn Region, கிருகிசு மொழி : Narin oblusu, نارىن وبلاستى) என்பது கிர்கிஸ்தானின் பெரிய பிராந்தியம் ( ஒப்ளாஸ்ட் ) ஆகும். இது நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக வடக்கில் சுய் பிராந்தியம், வடகிழக்கில் இசிக் - குல் பிராந்தியம், தென்கிழக்கில் சீனாவின் சிங்சியாங் உய்குர் தன்னாட்சிப் பிரதேசம், தென்மேற்கில் ஓஷ் பிராந்தியம், மேற்கில் ஜலால்-அபாத் பிராந்தியம் போன்றவை உள்ளன. இதன் தலைநகரம் நரியன் ஆகும். இப்பிராந்தியம் 1939 நவம்பர் 21 அன்று டியென்-ஷான் பிராந்தியமாக நிறுவப்பட்டது. 1962 திசம்பர் 20 இல் இப்பிராந்தியம் கலைக்கப்பட்டது, ஆனால் 1970 திசம்பர் 11 அன்று மீண்டும் நிறுவப்பட்டது. 1988 அக்டோபர் 5 அன்று இது இசிக்-குல் பிராந்தியத்துடன் ஒன்றிணைக்கப்பட்டது. இறுதியாக, 1990 திசம்பர் 14 அன்று இதன் தற்போதைய பெயரான நரியன் பிராந்தியம் என்றபெயரில் மீளுருவாக்கம் செய்யப்பட்டது. [2]
நரியன் பிராந்தியம்
Нарын облусу Нарынская область | |
---|---|
மாகாணம் | |
![]() நரியனில் ஒரு பள்ளிவாசல் | |
![]() கிர்கிஸ்தானின் வரைபடத்தில் நரியன் பிராந்தியத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 41°30′N 75°30′E | |
நாடு | ![]() |
தலைநகரம் | நரியன் |
அரசு | |
• குபர்னேட்டர் | ஓமுர்பெக் சுவனலீவ் |
பரப்பளவு | |
• மொத்தம் | 45,200 km2 (17,500 sq mi) |
மக்கள்தொகை (2020-01-01)[1] | |
• மொத்தம் | 2,89,621 |
• அடர்த்தி | 6.4/km2 (17/sq mi) |
நேர வலயம் | ஒசநே+6 (East) |
• கோடை (பசேநே) | ஒசநே+6 (not observed) |
ஐஎசுஓ 3166 குறியீடு | KG-N |
மாவட்டங்கள் | 5 |
நகரங்கள் | 1 |
நகரியங்கள் | 2 |
சிற்றூர்கள் | 134 |
பிரதான நெடுஞ்சாலை சீன எல்லையிலிருந்து டொருகார்ட் கணவாயில் வடக்கே இசிக்-குல் ஏரியின் பாலிக்கி வரை செல்கிறது.
நரின் பிராந்தியத்தின் மக்கள் தொகையில் 99% கிர்கிஸ் மக்களாவர். பிராந்தியத்தின் பொருளாதாரத்தில் விலங்கு வளர்ப்பு (செம்மறி, குதிரைகள், யாக் ) முக்கிய பங்கு வகிக்கிறன்றன. கம்பளி, இறைச்சி போன்றவை முக்கிய உற்பத்திப் பொருட்களாக உள்ளன. சோவியத் காலத்தில் உருவாக்கப்பட்ட பல்வேறு கனிமச் சுரங்கங்கள் பெரும்பாலும் வருவாயற்றவை என கைவிடப்பட்டன. இன்று இந்த பிராந்தியம் நாட்டின் ஏழ்மையான பிராந்தியமாக கருதப்படுகிறது. இந்த மாகாணமானது அழகான மலைகள், ஆல்பைன் மேய்ச்சல் நிலங்கள் மற்றும் சோன்-குல் ஏரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது கோடை மாதங்களில் செம்மறி ஆடுகள், குதிரைகளின் பெரிய மந்தைகளையும் அவற்றை மேய்ப்பவர்களையும் ஈர்க்கிறது.