நாகாலாந்து
இந்திய மாநிலம் / From Wikipedia, the free encyclopedia
நாகாலாந்து (Nagaland) இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலம் ஆகும். இந்திய மாநிலங்களான அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர் மற்றும் அயல் நாடான மியன்மார் என்பன இதனோடு எல்லைகளைக் கொண்டுள்ளன. இதன் மாநிலத் தலைநகரம் கோகிமா ஆகும். நாகாலாந்து பதினோறு நிர்வாக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம் மாநிலத்தில் 16 முக்கிய இனக்குழுக்கள் வாழுகின்றன. இன அடிப்படையில் இவர்கள் இந்தோ-மொங்கொலொயிட் இனப்பிரிவைச் சேர்ந்த நாகா இனக் குழுக்கள் ஆவார். நாகாலாந்து திசம்பர் 1, 1961இல் ல் ஒரு மாநிலமாக ஆக்கப்பட்டது.
விரைவான உண்மைகள் நாகாலாந்து, நாடு ...
நாகாலாந்து | |
---|---|
Nagaland | |
சின்னம் | |
அடைபெயர்(கள்): கிழக்கின் சுவிட்சர்லாந்து, திருவிழாக்களின் பூமி, உலகின் பால்கன் தலைநகரம் | |
குறிக்கோளுரை: Unity (ஆங்கிலம்: ஒற்றுமை) | |
அமைவிடம்: நாகாலாந்து (சிவப்பு) in இந்தியா (அடர் சாம்பல்) | |
ஆள்கூறுகள் (கோகிமா): 25.67°N 94.12°E / 25.67; 94.12 | |
நாடு | இந்தியா |
பகுதி | வடகிழக்கு இந்தியா |
மாநில அந்தசுது | 1 திசம்பர் 1963† |
தலைநகரம் | கோகிமா |
மிகப்பெரிய நகரம் | திமாப்பூர் |
மாவட்டங்கள் | 16 |
அரசு | |
• நிர்வாகம் | நாகாலாந்து அரசு |
• ஆளுநர் | ஜகதீஷ் முகீ (கூடுதல் பொறுப்பு) |
• முதலமைச்சர் | நைபியு ரியோ (தே.ஜ.மு.க.)[1] |
• சட்டப் பேரவை | நாகாலாந்து சட்டமன்றம் ஓரவை (60 உறுப்பினர்கள்) |
• நாடாளுமன்ற தொகுதிகள் |
|
• உயர் நீதிமன்றம் | குவஹாத்தி உயர் நீதிமன்றம்-கோகிமா கிளை |
பரப்பளவு | |
• மொத்தம் | 16,579 km2 (6,401 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 25வது |
தாழ் புள்ளி | 3,826 m (12,552 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 19,80,602 |
• தரவரிசை | 25வது |
• அடர்த்தி | 119/km2 (310/sq mi) |
நேர வலயம் | ஒசநே+05:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 797 001–798 627[2] |
தொலைபேசி குறியீடு | +91 |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-NL |
வாகனப் பதிவு | NL |
ம.மே.சு. | 0.676 (மத்திமம்) |
ம.மே.சு. தரவரிசை | 20வது (2017) |
படிப்பறிவு | 80.11% (15th) |
அலுவல்மொழி | ஆங்கிலம்[3] |
இணையதளம் | www |
^† இது நாகாலாந்து மாநில சட்டம், 1962 மூலம் அசாம் மாநிலத்தில் இருந்து உருவாக்கப்பட்டது. |
மூடு
பட்டியல் பழங்குடி மக்கள் பெரும்பான்மையினத்தவராக உள்ள இம்மாநிலத்தில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) -0.58% ஆக குறைந்துள்ளது.[4] இம்மாநிலத்தின் ஆட்சி மொழி ஆங்கிலம் ஆகும்.