நண்டு தின்னி (Crab-plover) அல்லது நண்டு உழவு (துரோமாசு ஆர்டியோலா) என்பது ஓர் நீர்ப் பறவை ஆகும். ஆனால் இதன் சொந்த குடும்பமான துரோமாடிடேவிலிருந்து போதுமான தனித்துவமானது பண்புகளுடையன. சரத்ரிபார்ம்களுடனான இதன் உறவு தெளிவாக இல்லை. சிலர் இதனை தடிமனான முழங்கால்களுடைய அல்லது ப்ராடின்கோல்களுடன் நெருங்கிய தொடர்புடையதாகக் கருதுகின்றனர். மற்றவர்கள் இதை ஆக் மற்றும் கடல் புறாக்களுடன் நெருக்கமானதாக கருதுகின்றனர். இது துரோமாசு பேரினத்தின் ஒரே சிற்றினமாகும். மேலும் முட்டைகளை அடைகாக்க உதவுவதற்காக தரையில் உள்ள வெப்பத்தை பயன்படுத்துவதில் நீர்ப்பறவைகளிலிருந்து தனித்துவமானது.

விரைவான உண்மைகள் நண்டு தின்னி Crab-plover, காப்பு நிலை ...
நண்டு தின்னி
Crab-plover
Thumb
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
டுரோமாடிடே

கிரே, 1840
பேரினம்:
துரோமாசு

பாய்குல், 1805
இனம்:
து. ஆர்டியோலா
இருசொற் பெயரீடு
துரோமாசு ஆர்டியோலா
பாய்குல், 1805
Thumb
நண்டு தின்னி பரம்பல்
மூடு

பெயர்

Thumb
பகுதி வலையுடன் காணப்படும் கால்

[2] ஆங்கிலப்பெயர்  :Crab-Plover

விலங்கியல் பெயர்  : துரோமாசு ஆர்டியோலா Dromas ardeola

உடலமைப்பு

இப்பறவை உப்புக்கொத்தியை ஒத்திருக்கிறது. ஆனால் மிக நீண்ட சாம்பல் நிற கால்கள் மற்றும் ஆலா போன்ற வலுவான கனமான கருப்பு அலகு உள்ளது. இதன் கறுப்பு-வெள்ளை இறகுகள் மற்றும் நீண்ட கழுத்து நிமிர்ந்த தோரணையுடன் கூடிய கனமான அலகு இதை தனித்துவமாகவும் தெளிவாகவும் காட்டுகிறது. இதன் அலகு நண்டுகளைத் தின்ன ஏற்ற ஆற்றல் கொண்டதாக உள்ளது. இது பகுதி வலையுடைய கால்விரல்களைக் கொண்டுள்ளது. இதன் உடல் நீளம் 41 செ.மீ. ஆகும். பருத்த தலையுடன் உடலும் கழுத்தும் வாலும் வெள்ளை நிறத்துடன் காணப்படும். கருப்பான உடலைக் கொண்ட இதன் அலகு தடித்ததாகக் கருத்துக் குறுகியதாக இருக்கும். பருத்த வெள்ளையும் கருப்புமாக இப்பறவை இருக்கும். பறக்கும்போது வெள்ளையான உடலும் கருப்பு நிறமான முதுகும் இறக்கைகளும் நன்கு மாறுபட்டு காட்சிதரும்.

ஆண் பறவைகளையும் பெண் பறவைகளையும் எளிதில் வேறுபடுத்தி பார்க்க முடியாது, ஆனால் ஆண் பறவைகளுக்கு கனமான மற்றும் நீண்ட அலகு உள்ளது. இப்பறவைகள் கூட்டம் பறக்கும்போது கோடுகள் அல்லது "V" வடிவங்களில் பறக்கின்றன.

காணப்படும் பகுதிகள்

தமிழகத்திற்கு குறைந்த எண்ணிக்கையில் வலசை வரும் இதனைக் கடற்கரைப் படுகைகள், உப்பங்கழிகள், பவழத் திட்டுகள் ஆகியவற்றைச் சார்ந்து திரியக் காணலாம். சிறுகூட்டமாகவும் 50 வரையான குழுவாகவும் காணப்படும்.

உணவு

Thumb
நண்டினை உண்ணும் நண்டு தின்னி

காலை மாலை அந்திகளில் தாவித்தாவி விரைந்து ஓடிக் கடற்கரையில் வாழும் நண்டுகளை இரையாகத் தேடித் தின்னும். அச்சம் கொள்ளும் இயல்புடையது என்பதால் எளிதில் நெருங்கிக் காண முடியாது. இதன் பழக்க வழக்கங்கள் அடுத்த கண் கிலேடியின் பழக்க வழக்கங்களை ஒத்தது. பறக்கும்போது தாமரைக் கோழி பறப்பதை நினைவூட்டும் வகையில் பறக்கும். வலசை வரும் போது இங்கு குரல் கொடுப்பதில்லை.

இனப்பெருக்கம்

இனப்பெருக்கம் பெர்சியன் வளைகுடாவில் பவளப் பாறைகளைக் ஆழமாகக் குடைந்து அளவில் பெரியதாக ஒரே ஒரு முட்டையிடும் விசித்திரப் பழக்கம் உடையது.[3]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.