பறவைக் குடும்பம் From Wikipedia, the free encyclopedia
கண்கிலேடி (stone-curlews) (Burhinus oedicnemus0) , திக்கோபு அல்லது தடித்த கணுக்காலி நத்தைக் குத்தி என்பது புர்கினிடே குடும்பத்தில் உள்ள 10 இனங்களைக் கொண்டுள்ளது. இது உலகின் வெப்பமண்டல, மித வெப்பமண்டலங்களில் பரவியுள்ளது. ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் ஆத்திரேலியாவிலும் இரண்டு அல்லது மூன்று இனங்கள் காணப்படுகின்றன. இவை நீர்ப்பறவைகளாக வகைபடுத்தப்பட்டாலும், பெரும்பாலும் இவை வறள்பகுதிகளிலும் மித வறள்பகுதிகளிலும் காணப்படுகின்றன.
கண்கிலேடி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | இயங்குதிணை(விலங்கு) |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | சரத்ரிபார்மெசு |
குடும்பம்: | புர்கினிடே |
பேரினம்: | புர்கினசு |
இனம்: | பு. ஓயெடிக்நெமசு |
இருசொற் பெயரீடு | |
புர்கினசு ஓயெடிக்நெமசு (Linnaeus, 1758) | |
பு. ஓயெடிக்நெமசு பரவல் Breeding range Year-round range Wintering range |
இவை இடைநிலை முதல் பெரிய அளவு வரையுள்ள வலிய கருப்பு அல்லது மஞ்சட் கருப்பு அலகுகளோடு பெரிய மஞ்சள் கண்களைக் கொண்டு ஊர்வன தோற்றத்துடன் இனத்தெளிவில்லாத சிறகமைவுடன் அமைகின்றன. இவை தடித்த கணுக்காலி, கண்கிலேடி ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகின்றன. கணுக்கால் என்பது இதன்நீண்ட அல்லது பசுங்கால்களின் மூட்டுகளைக் குறிக்கிறது.
மலைப்பகுதிகளைச் சார்ந்த வறள்காடுகள், முட்புதர்களோடு கூடிய தரிசுநிலங்கள், ஊர்ப்புறத்தில் அமைந்த மா முதலான மரங்கள் நிறைந்த காடுகள், நீர்வற்றிய ஆற்றுப் பரப்பு ஆகியவற்றிடையே இணையாகவும் சிறு குழுவாகவும் திரியும்.
காலை மாலை நேரங்களில், புழு பூச்சிகள், எலி முதலிய சிற்றுயிர்களை இரையாகத் தேடும். பகலில் மரநிழல், புதர்கள் ஆகியவற்றிடையே ஓய்வுகொள்ளும். வேட்டைக்காரர்கள் தேடித் திரியும் போது மிக அருகில் வரும் வரை சத்தமின்றிப் பதுங்கியபடி படுத்துக் கிடந்து பின் எழுந்து பறக்கும். பிக். பிக். பிக் எனக் குரல் கொடுப்பதை அந்தி நெருங்கும் போதும் அதிகாலையிலும் கேட்கலாம்.
பிப்ரவரி முதல் ஆகத்து வரை கல்லாந்தரையில் புதர் ஓரமாகவும் புல்மேடுகளிலும் தரையில் சிறு குழியில் 2 முட்டைகள் இடும். [2]
படம் | பெயர் | இருசொற் பெயரீடு |
---|---|---|
ஐரோப்பாசியக் கண்கிலேடி | Burhinus oedicnemus | |
இந்தியக் கண்கிலேடி | Burhinus indicus | |
செனிகல் தடி கணுக்காலி | Burhinus senegalensis | |
நீர்த் தடி கணுக்காலி | Burhinus vermiculatus | |
புகர்த் தடி கணுக்காலி | Burhinus capensis | |
இருபட்டைத் தடி கணுக்காலி | Burhinus bistriatus | |
பெரூவியத் தடி கணுக்காலி | Burhinus superciliaris | |
புதர்க் கண்கிலேடி | Burhinus grallarius (formerly B. magnirostris, the bush thick-knee). | |
பெருங்கண்கிலேடி | Esacus recurvirostris | |
கடற்கரை கண்கிலேடி | Esacus magnirostris |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.