தைப்பிங் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
தைப்பிங் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Taiping Railway Station மலாய்: Stesen Keretapi Taiping); சீனம்: 太平火车站) என்பது தீபகற்ப மலேசியா, பேராக், லாருட், மாத்தாங், செலாமா மாவட்டம், தைப்பிங் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் தைப்பிங் நகரத்திற்கும்; மற்றும் லாருட், மாத்தாங், செலாமா மாவட்டத்தின் சுற்றுப் புறங்களுக்கும் சேவை செய்கிறது.[1]
தைப்பிங் தொடருந்து நிலையம் | |||||||||||||||||||||||||||||||
பொது தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||
அமைவிடம் | தைப்பிங், பேராக் | ||||||||||||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 4.851667°N 100.731111°E / 4.851667; 100.731111 | ||||||||||||||||||||||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து நிறுவனம் | ||||||||||||||||||||||||||||||
நடைமேடை | 2 நடை மேடைகள் | ||||||||||||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||||||||||||||||||||||
கட்டமைப்பு | |||||||||||||||||||||||||||||||
தரிப்பிடம் | உண்டு | ||||||||||||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | |||||||||||||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||||||||||||
மறுநிர்மாணம் | 2013 | ||||||||||||||||||||||||||||||
மின்சாரமயம் | 2015 | ||||||||||||||||||||||||||||||
சேவைகள் | |||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||
|
மலேசியாவின் முதல் தொடருந்து நிலையமான தைப்பிங் நிலையம், 1885-ஆம் ஆண்டில், மலேசியாவின் முதல் தொடருந்து வழித்தடமான தைப்பிங்-போர்ட் வெல்ட் வழித்தடத்தில் (Taiping-Port Weld Railway Line) திறக்கப்பட்டது. ஈப்போ - பாடாங் பெசார் மின்மயமாக்கல்; மற்றும் இரட்டை தண்டவாளத் திட்டத்தின் (Ipoh-Padang Besar Electrification and Double-Tracking Project) ஒரு பகுதியாக 2013-ஆம் ஆண்டில், தற்போதைய நவீன நிலையம் தைப்பிங்கில் கட்டப்பட்ட மூன்றாவது தொடருந்து நிலையம் ஆகும்.[2]