From Wikipedia, the free encyclopedia
தெற்கத்திய பொதுச் சந்தை (எசுப்பானியம்: Mercado Común del Sur, போர்த்துக்கேய மொழி: Mercado Comum do Sul, வார்ப்புரு:Lang-gn, ஆங்கில மொழி: Southern Common Market) அர்கெந்தீனா, பிரேசில், பரகுவை, உருகுவை, மற்றும் வெனிசுவேலா நாடுகளுக்கிடையேயான ஓர் பொருளியல் மற்றும் அரசியல் உடன்பாடாகும். திசம்பர் 7, 2012 முதல் இதில் உறுப்பினராக சேர விரும்பிய பொலிவியாவின் கோரிக்கை உறுப்பினர் நாடுகளின் சட்டமன்றங்களால் ஏற்றுக் கொள்ளப்படவேண்டும்.[6][7] இந்த அமைப்பு பொதுவாக எசுப்பானியச் சுருக்கமாக மெர்கோசுர் (Mercosur) என்றும் போர்த்துக்கேயச் சுருக்கமாக மெர்கோசுல் (Mercosul) என்றும் ஊடகங்களில் குறிப்பிடப்படுகின்றது.
| |
---|---|
குறிக்கோள்:
| |
தலைமையகம் | மொண்டேவீடியோ |
பெரிய நகரங்கள் | |
அலுவல் மொழிகள் | |
இனக் குழுகள் (2011b[1]) |
|
வகை | அரசிடை அமைப்பு |
அங்கத்துவம் | 5 உறுப்பினர்கள் 2 நோக்காளர்கள் |
தலைவர்கள் | |
• தலைவர் பொறுப்பில் | நிக்கோலசு மதுரோ வெனிசுவேலா[2] |
நிறுவுதல் | |
• அசுன்சியோன் உடன்படிக்கை | 26 மார்ச்சு 1991 |
• ஓரோ பிரெட்டோ நெறிமுறை | 16 திசம்பர் 1994 |
பரப்பு | |
• மொத்தம் | 12,781,179 km2 (4,934,841 sq mi) (2வதுb) |
• நீர் (%) | 1.0 |
மக்கள் தொகை | |
• 2011 மதிப்பிடு | 275,499,000[3] (4வதுb) |
• அடர்த்தி | 21.8/km2 (56.5/sq mi) (195வதுb) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2011 மதிப்பீடு |
• மொத்தம் | US$ 3.471 டிரில்லியன்[3] (5வதுb) |
• தலைவிகிதம் | US$ 12,599 (72வதுb) |
மமேசு (2011) | 0.731[4] உயர் · 76வதுb |
நாணயம் | 5 நாணயங்கள்
|
|
இந்த உடன்பாட்டின் நோக்கம் உறுப்பு நாடுகளிடையே கட்டற்ற வணிகத்தை வளர்ப்பதும் பொருட்கள், நபர்கள், நாணயப் பரிமாற்றங்கள் இலகுவாக நடைபெற துணை புரிவதுமாகும். இந்த அமைப்பின் அலுவல் மொழிகளாக எசுப்பானியம், போர்த்துக்கேயம் மற்றும் குவாரனி விளங்குகின்றன.[8] இந்த உடன்படிக்கை பல முறை மேம்படுத்தப்பட்டும் திருத்தப்பட்டும் மாற்றப்பட்டும் வந்துள்ளது. தற்போது முழுமையான சுங்க ஒன்றியமாகவும் வணிக குழுமமாகவும் விளங்குகிறது. மெர்கோசுரும் அண்டிய நாடுகள் சமூகமும் தென்னமெரிக்க நாடுகள் ஒன்றியத்துடன் தொடர்பு கொள்ளும் தென்னமெரிக்க பொருளியல் ஒன்றிணைப்பிற்கான செயல்முறையின் அங்கங்களாகும்.
பொலிவியா, சிலி, கொலொம்பியா, எக்குவடோர், கயானா, பெரு, மற்றும் சுரிநாம் தற்போது இணை உறுப்பினர்களாக உள்ளனர்.[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.