![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1f/Tekirda%25C4%259F_in_Turkey.svg/langta-640px-Tekirda%25C4%259F_in_Turkey.svg.png&w=640&q=50)
தெகிர்தா மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
தெகிர்தா மாகாணம் (Tekirdağ Province, துருக்கியம்: Tekirdağ ili ) என்பது துருக்கியின் ஒரு மாகாணமாகும் . இது நாட்டின் கிழக்கு திரேசு பகுதியில் அமைந்துள்ளது. இது ஐரோப்பிய துருக்கி என்றும் அழைக்கப்படுகிறது. ஐரோப்பிய கண்டத்தில் உள்ளள மூன்று துருக்கிய மாகாணங்களில் இதுவும் ஒன்றாகும். தெகிர்ததா மாகாணத்தின் எல்லைகளாக கிழக்கே இஸ்தான்புல் மாகாணம், வடக்கே கோர்க்லாரெலி மாகாணம், மேற்கே எடிர்னே மாகாணம் மேற்கே காலிபோலி தீபகற்பத்தின் கனக்கலே மாகாணம் போன்றவை அமைந்துள்ளன.
விரைவான உண்மைகள் தெகிர்தா மாகாணம் Tekirdağ ili, நாடு ...
தெகிர்தா மாகாணம்
Tekirdağ ili | |
---|---|
![]() துருக்கியில் தெகிர்தா மாகாணத்தின் அமைவிடம் | |
நாடு | துருக்கி |
பிராந்தியம் | மேற்கு மர்மரா |
துணைப்பிராந்தியம் | தெக்கிர்தக் |
அரசு | |
• தேர்தல் மாவட்டம் | தெகிர்தா |
பரப்பளவு | |
• மொத்தம் | 6,339 km2 (2,448 sq mi) |
மக்கள்தொகை (2019)[1] | |
• மொத்தம் | 10,55,412 |
• அடர்த்தி | 170/km2 (430/sq mi) |
இடக் குறியீடு | 0282 |
வாகனப் பதிவு | 59 |
மூடு
மகாணத்தின் தலைநகராக டெகிர்தாஸ் நகரம் உள்ளது. இந்த நகரானது இஸ்தான்புல்லைத் தவிர்த்து ஐரோப்பிய துருக்கியின் மிகப்பெரிய நகரம் ஆகும்.