தும்பிப்பன்றி
From Wikipedia, the free encyclopedia
Deuterostomia
தும்பிப் பன்றி புதைப்படிவ காலம்:55–0 Ma Early இயோசீன்–Holocene | |
---|---|
மலாய் தும்பிப்பன்றி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | ஒற்றைப்படைக் குளம்பி |
குடும்பம்: | தும்பிப்பன்றி |
பேரினம்: | டபிருஸ்
Morten Thrane Brünnich, 1772 |
Species | |
Tapirus bairdii |
தும்பிக்கை பன்றி அல்லது தும்பிப்பன்றி (tapir) தாவர உண்ணியான இப்பாலூட்டிகள் பன்றியைப் போன்று குட்டையாகவும், நீண்டும் காணப்படும். இதன் மூக்குப் பகுதி நீண்டும், எதையும் எளிதில் பற்றிக்கொள்ளும் ஆற்றல் வாய்ந்த தும்பிக்கைப் போன்று காணப்படும்.[1]
தும்பிப்பன்றிகள் தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா மற்றும் தென் கிழக்கு ஆசியாவின் அடர்ந்த காடுகளில் காடுகளில் காணப்படுகிறது. தும்பிக்கைப் பன்றி இனங்களில் பிரேசில் தும்பிப்பன்றி, மலாய் தும்பிப்பன்றி, மெக்சிகோ தும்பிப்பன்றி, அமேசான் தும்பிப்பன்றி, கபோமணி தும்பிப்பன்றி[1] மலைத்தும்பிப்பன்றி என ஐந்து வகைகள் உண்டு.
தும்பிப்பன்றிகள் அருகிய அல்லது அழியும் வாய்ப்பில் உள்ள விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
தும்பிப்பன்றிகள் குதிரை, குரங்கு, வரிக்குதிரை, மூக்குக் கொம்பன் போன்ற விலங்குகுகளுடன் சேர்ந்து உணவு தேடும்.