துன் சம்பந்தன் ஒற்றைத் தண்டவாள நிலையம்
From Wikipedia, the free encyclopedia
துன் சம்பந்தன் ஒற்றைத் தண்டவாள நிலையம் என்பது தரைக்கு மேலே செல்லும் கோலாலம்பூர் ஒற்றைத் தண்டவாளத் தொடர்வண்டிகளின் நிறுத்து நிலையங்களில் ஒன்றாகும்.[1] இந்த நிலையம் மலேசியாவின் தலைநகரமான, கோலாலம்பூர் மாநகரத்தில் இருக்கிறது. 2003ஆம் ஆண்டு ஆகஸ்டு 31ஆம் தேதி, மலேசியாவின் 46வது சுதந்திர தினத்தன்று திறக்கப்பட்டது.
விரைவான உண்மைகள் MR2 துன் சம்பந்தன் ஒற்றைத் தண்டவாள நிலையம்Tun Sambanthan Monorail stationستيسين بندر تاسيق سلتن敦辛班丹单轨火车站, பொது தகவல்கள் ...
MR2 துன் சம்பந்தன் ஒற்றைத் தண்டவாள நிலையம் Tun Sambanthan Monorail station ستيسين بندر تاسيق سلتن 敦辛班丹单轨火车站 | |
---|---|
துன் சம்பந்தன் ஒற்றைத் தண்டவாள நிலைய வெளிப்புறத் தோற்றம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | துன் சம்பந்தன் சாலை-4 தென் பக்கம் - கோலாலம்பூர் ஜாலான் தெபிங் சந்திப்பு, பிரிக்பீல்ட்ஸ், கோலாலம்பூர், மலேசியா. |
ஆள்கூறுகள் | 3°7′53″N 101°41′26″E |
உரிமம் | கோலாலம்பூர் உள்கட்டமைப்பு குழுமம் KL Infrastructure Group Limited (KL Infra) |
தடங்கள் | கோலாலம்பூர் ஒற்றைத் தண்டவாளம் (2003 வரையில்) |
நடைமேடை | 2 பக்க நடைபாதைகள் |
இருப்புப் பாதைகள் | 2 |
கட்டமைப்பு | |
தரிப்பிடம் | இல்லை |
துவிச்சக்கர வண்டி வசதிகள் | இல்லை |
மற்ற தகவல்கள் | |
நிலையக் குறியீடு | MR2 |
வரலாறு | |
திறக்கப்பட்டது | ஆகஸ்டு 31, 2003 |
மறுநிர்மாணம் | 29 நவம்பர் 2007 |
பயணிகள் | |
21765233 | |
சேவைகள் | |
ரேப்பிட் கே.எல் எல்.ஆர்.டி RapidKL LRT | |
மூடு
ஒற்றைத் தண்டவாள தொடர்வண்டிகள் தரைக்கு மேல் 40 அடி உயரத்தில் பயணிக்கின்றன. இந்த ஒற்றைத் தண்டவாள நிலையம், பிரிக்பீல்ட்ஸ் பகுதிக்கு மிக அருகாமையில், அமரர் துன் வீ.தி. சம்பந்தன் அவர்களின் நினைவாக திறக்கப்பட்டது.