திரோசென்
நவீன கிராமம் மற்றும் பண்டைய கிரேக்க நகரம் / From Wikipedia, the free encyclopedia
திரோசென் (Troezen, பண்டைய கிரேக்கம் : Τροιζήν, நவீன கிரேக்கம் : Τροιζήνα ) என்பது கிரேக்கத்தின் வடகிழக்கு பெலோப்பொனேசியாவில், ஆர்கோலிட் தீபகற்பத்தில் உள்ள ஒரு சிறிய நகரம் மற்றும் ஒரு முன்னாள் நகராட்சி ஆகும். 2011 உள்ளாட்சி சீர்திருத்தத்தத்திற்கு பிறகு இது திரொய்சினியா-மெத்தானா நகராட்சியுடன் இணைக்கப்பட்டது. தற்போது இது நகராட்சியின் ஒரு அலகு ஆகும். இது தீவுகளின் பிராந்திய அலகின் ஒரு பகுதியாகும்.[2]
திரோசென் Τροιζήνα | |
---|---|
ஒர்தோலிதி மலை | |
அமைவிடம் | |
பிராந்திய அலகுக்குள் அமைவிடம் | |
அரசாண்மை | |
நாடு: | கிரேக்கம் |
நிர்வாக வலயம்: | அட்டிக்கா |
மண்டல அலகு: | தீவுகள் |
நகராட்சி: | திரொய்சினியா-மெத்தானா |
மாவட்டங்கள்: | 8 |
மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் (as of 2011)[1] | |
சிற்றூர் | |
- மக்கள்தொகை: | 673 |
நிர்வாக அலகு | |
- மக்கள்தொகை: | 5,486 |
- பரப்பளவு: | 190.697 km2 (74 sq mi) |
- அடர்த்தி: | 29 /km2 (75 /sq mi) |
Other | |
நேர வலயம்: | EET/EEST (UTC+2/3) |
உயரம் (மத்தியில்): | 23 m (75 ft) |
அஞ்சல் குறியீடு: | 180 20 |
தொலைபேசி: | 22980 |
வலைத்தளம் | |
www.dimos-trizinas.gr |
திரொசென் நகரமானது பிரேயசின் தென்மேற்கில், சரோனிக் வளைகுடாவில் மற்றும் மெத்தனாவுக்கு தெற்கே சில மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது. இந்த முன்னாள் நகராட்சியின் தலைமையகம் (மக்கள் தொகை. 6,507) கலாட்டாசில் இருந்தது. 2011 க்கு முன்பு, திரொய்சினா முன்னாள் மாகாணமான பிரேயஸ் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது (பண்டைய காலத்தில் இது ஆர்கோலிசின் ஒரு பகுதியாக இருந்தது). நகராட்சி 190.697 கிமீ² நிலப்பரப்பைக் கொண்டிருந்தது.[3] இந்த நகராட்சிக்கு உட்பட்ட பெரிய ஊர்கள் மற்றும் கிராமங்கள் (2011 இல் மக்கள் தொகை. 2,195), கல்லோனி (மக்கள் தொகை. 669), திரொய்சினா (மக்கள் தொகை. 673), தக்டிகோபோலி (250), காரட்சாஸ் (287), திரையோபி (239), அஜியோஸ் ஜார்ஜியோஸ் (228), அஜியா எலினி (159) ஆகியவை ஆகும். இவை அல்லாது பல சிறிய குடியிருப்புகளும் உள்ளன.