![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5c/Trincomalee_district.svg/langta-640px-Trincomalee_district.svg.png&w=640&q=50)
திருகோணமலை மாவட்டம்
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
திருகோணமலை மாவட்டம் (Trincomalee district) இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. திருகோணமலை நகரம் இதன் தலைநகரமாகும். திருகோணமலை தேர்தல் மாவட்டம் 3 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 230 கிராமசேவகர் பிரிவுகளையும் 10 பிரதேச செயலர் பிரிவுகளையும் கொண்டுள்ளது. இலங்கையில் விகிதாசாரத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட முன் இம் மாவட்டத்தின் திருகோணமலை, மூதூர், சேருவிலை ஆகிய தேர்தல் தொகுதிகளிலிருந்து நான்கு உறுப்பினர்கள் இலங்கை நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகினர். இவற்றுள் திருகோணமலையும், சேருவிலையும் தலா ஒவ்வொரு உறுப்பினரைத் தெரிவு செய்யும் ஒற்றை உறுப்பினர் தொகுதிகளாகவும் மூதூர் இரண்டு உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் இரட்டை உறுப்பினர் தொகுதியாகவும் இருந்தது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
திருகோணமலை மாவட்டம் | |
![]() திருகோணமலை மாவட்டத்தின் அமைவிடம் | |
தகவல்கள் | |
மாகாணம் | கிழக்கு மாகாணம் |
தலைநகரம் | திருகோணமலை |
மக்கள்தொகை(2001) | 340,158* |
பரப்பளவு (நீர் %) | 2727 (7%) |
மக்களடர்த்தி | 135 /சதுர.கி.மீ. |
அரசியல் பிரிவுகள் | |
மாநகரசபைகள் | 0 |
நகரசபைகள் | 1 |
பிரதேச சபைகள் | 10 |
பாராளுமன்ற தொகுதிகள் | 3 |
நிர்வாக பிரிவுகள் | |
பிரதேச செயலாளர் பிரிவுகள் |
10 |
வார்டுகள் | 12 |
கிராம சேவையாளர் பிரிவுகள் |
திருகோணமலை மாவட்டத்தின் பரப்பளவு 2727 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இது நாட்டின் மொத்தப் பரப்பளவின் 4.16% ஆகும்.