![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1c/Tawau_Sabah_Malaysia.jpg/640px-Tawau_Sabah_Malaysia.jpg&w=640&q=50)
தாவாவ்
From Wikipedia, the free encyclopedia
தாவாவ் (மலாய்: Tawau; ஆங்கிலம்: Tawau; சீனம்: 斗湖; ஜாவி: تاواو) என்பது மலேசியா, சபா மாநிலத்தின் மூன்றாவது பெரிய நகரம். இதன் பழைய பெயர் தவாவ் (Tawao). இந்த நகரம் கோத்தா கினபாலு, சண்டக்கான் நகரங்களுக்கு அடுத்த நிலையில் மூன்றாவது பெரிய நகரமாகச் சிறப்பு பெருகிறது.
விரைவான உண்மைகள் தாவாவ் நகரம், நாடு ...
தாவாவ் நகரம் | |
---|---|
Tawau Town | |
சபா | |
தாவாவ் நகரம் | |
![]() சபா மாநிலத்தில் அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
அமைவு | 1878 |
நகராண்மைக் கழகம் | 1961 |
அரசு | |
• நகராண்மைக் கழகத் தலைவர் | அம்ருல்லா கமால் (Amrullah Kamal) |
பரப்பளவு | |
• மொத்தம் | 6,125 km2 (2,365 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 3,81,736 (மக்கள் கணக்கெடுப்பு 2,010) |
• அடர்த்தி | 160/km2 (62/sq mi) |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
இணையதளம் | தாவாவ் நகராண்மைக் கழகம் |
மூடு
தாவாவ் மாவட்டத்திற்கும், தாவாவ் நகராண்மைக் கழகத்திற்கும் தாவாவ் என்றுதான் பெயர். ஆகவே, மாவட்டம், நகராண்மைக் கழகம், நகரம் ஆகிய மூன்று நிலப் பகுதிகளைக் குறிப்பதற்கு தாவாவ் எனும் பெயரே பயன்படுத்தப்படுகிறது.
இந்த நகரம் தாவாவ் மாவட்டத்திற்கும், தாவாவ் நகராண்மைக் கழகத்திற்கும் நிர்வாக மையமாகவும் விளங்குகிறது.