தான் இலெசிலி இலிண்டு
From Wikipedia, the free encyclopedia
தான் இலெசிலி இலிண்டு அல்லது டாண் லெஸ்லி லிண்டு (Don Leslie Lind) (பிறப்பு: மே, 18, 1930) அமெரிக்காவைச் சேர்ந்த வானியல் விஞ்ஞானி, முனைவர் ஆவார். இவர் ஓர் அமெரிக்க அறிவியலாளரும் முன்னாள் அமெரிக்கக் கடற்படை அலுவலரும் அமெரிக்கக் கடற்படை விமான வலவரும், நாசா விண்வெளி வலவரும் ஆவார். இவர் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் பணியாற்றியவர். இவர் தனது புவி இயற்பியல் ஆராய்ச்சிப் படிப்பை அலெஸ்கா பல்கலைக்கழகத்தில் (University of Alaska) படித்தார். 1964 லிருந்து நாசாவில் விண்வெளி இயற்பியலாளராகப் (Space physics) பணியாற்றினார்.[1] இவர் பூமியின் வெளிப்பரப்பிலுள்ள (magnetosphere and interplanetary space) இயற்கைக்கும் குறை சக்தி துகள்களுக்குமான (low-energy particles) ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 1986 ஆம் ஆண்டு நாசாவிலிருந்து விலகிய பின்னர் யுட்டா மாநில பல்கலைக்கழகத்தில் (Utah State University) இயற்பியல் மற்றும் விண்வெளிப் பேராசிரியராகப் பணியாற்றினார்.[2]
தான் இலெசிலி இலிண்டு | |
---|---|
நாசா வானியல் விஞ்ஞானி, விண்வெளி வலவர் | |
தேசியம் | அமெரிக்கர் |
நிலை | ஓய்வு |
பிறப்பு | மே 18, 1930 (1930-05-18) (அகவை 94) மிட்வேல், உட்டா, ஐக்கிய அமெரிக்கா |
வேறு பணிகள் | கடற்படை விமான வலவர், அறிவியலாளர் |
பயின்ற கல்வி நிலையங்கள் | உட்டா பல்கலைக்கழகம், அறிவியல் இளவல் 1953 கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்கேலி, முனைவர் (Ph.D.) 1964 அலாசுகா பல்கலைக்கழகம் |
தரம் | படைக்கட்டளையாளர், USNR |
விண்வெளி நேரம் | 7d 00h 08m |
தெரிவு | 1966 நாசா குழு 5 |
பயணங்கள் | STS-51-B |
திட்டச் சின்னம் | |
ஓய்வு | ஏப்பிரல் 1986 |