![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/92/Mercapto_Group_General_Formulae.png/640px-Mercapto_Group_General_Formulae.png&w=640&q=50)
தயோல்
From Wikipedia, the free encyclopedia
கரிம வேதியியலில் thiol தயோல் (/ˈθaɪɔːl//ˈθaɪɔːl/, /ˈθaɪɒl//ˈθaɪɒl/)[1] ஒரு கரிமகந்தகச் சேர்மம். இதில் கார்பன்- பிணைப்புகளால் பிணைக்கப்பட்ட கந்தகஐதரைல் தொகுதியில் (ஆர்–எஸ். எச்) (இங்கு, ஆர் அல்கைல் தொகுதி அல்லது பிற கரிம பதிலிகளைக் குறிக்கிறது). தயோலில் உள்ள கந்தகம் மதுசாரம் (ஆல்ககால்) ஒத்துள்ளது.(ஆல்ககாலில் உள்ள ஐதராக்சில் தொகுதியில் உள்ள ஆக்சிஜன் இருக்கும் இடத்தில் கந்தகம் உள்ளது. கிரேக்க மொழியில்"தயோன்" + "ஆல்ககால்," இவற்றின் முதல் வார்த்தை இருந்து தயோல் என்ற வார்த்தை பெறப்பட்டுள்ளது. கிரேக்கம் θεῖον (theion) = "கந்தகம்".[2] –எஸ். எச் உள்ள வினைபடு தொகுதியாக தயோல் தொகுதி அல்லது கந்தகஐதராக்சில் தொகுதி குறிக்கப்படுகிறது.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/92/Mercapto_Group_General_Formulae.png/640px-Mercapto_Group_General_Formulae.png)
பல தயோல்கள் அடர்த்தியான வாசனை உடையவை. பூண்டு அல்லது அழுகிய முட்டைகளின் வாசனையைக் கொண்டுள்ளன. தயோல்கள், இயற்கை எரிவாயுவைக் (இது தூய வடிவில் மணமற்றதாக உள்ளது) கண்டறிய பயன்படுகிறது. தயோல்கள் சில நேரங்களில் மெர்காப்டன்கள் என குறிப்பிடப்படுகிறது .[3][4] மெர்காப்டன் என்ற வார்த்தை 1832 /mərˈகேæptæn//mərˈkæptæn/[5] இல் வில்லியம் கிறிஸ்டோபர் செய்சி என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.தயோலேட் தொகுதிகள் , மெர்குரி சேர்மங்களுடன் வலுவான பிணைப்பினால் பிணைக்கப்பட்டுள்ளது. லத்தீன் மொழியில் mercurium captāns (மெர்குரியைக் கைப்பற்றுதல்)[6] என்ற வார்த்தையில் இருந்து மெர்காப்படன் என்ற வார்த்தை பெறப்பட்டுள்ளது.[7]