![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/79/Dharmarajika_stupa%252CTaxila.jpg/640px-Dharmarajika_stupa%252CTaxila.jpg&w=640&q=50)
தட்சசீலம் (நகரம்)
From Wikipedia, the free encyclopedia
தட்சசீலம் (Taxila) (உருது: ٹيکسلا), பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் ராவல்பிண்டி மாவட்டத்தில் உள்ளது. பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத் நகரத்திலிருந்து வடமேற்கே 32 கிமீ தொலைவில் தட்சசீலம் நகரம் உள்ளது.
விரைவான உண்மைகள் தட்சசீலம் ٹيکسلا, நாடு ...
தட்சசீலம்
ٹيکسلا | |
---|---|
நகரம் | |
![]() தட்சசீல நகரத்தின் தர்மராஜிக தூபியின் காட்சி | |
ஆள்கூறுகள்: 33°44′45″N 72°47′15″E | |
நாடு | ![]() |
மாகாணம் | ![]() |
மாவட்டம் | ராவல்பிண்டி |
ஏற்றம் | 549 m (1,801 ft) |
மக்கள்தொகை (1998) | |
• மொத்தம் | 48,904[1] |
Population of Taxila Tehsil: 371,140 [1] | |
இனம் | Taxilan |
நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 47080 |
தொலைபேசி குறியீடு எண் | 596 |
மூடு
சமசுகிருத மொழியில், பண்டைய தட்சசீலம் நகரத்தை தக்சசீலா என்றும் பாலி மொழியில் தக்கசிலா[2] என்றும் அழைப்பர். பண்டைய தட்சசீலம் நகரத்தில் கிமு 3,360 ஆண்டுகளுக்கு முன்னரே மனிதக் குடியிருப்புகள் இருந்ததற்கான ஆதாரங்கள், இங்குள்ள ஹத்தியால் தொல்லியல் அகழ்வாய்வுகள் மூலம் அறியப்பட்டுள்ளது. [3] மகாபாரத இதிகாசத்தை முதன் முதலாக, தட்சசீலம் நகரத்தில் வைத்து வைசம்பாயனர், தன் சீடர்களுக்கு உரைத்ததாக கருதப்படுகிறது. [4][5] பண்டைய உலகப் பல்கலைக்கழகங்களில் ஒன்றான தட்சசீல பல்கலைக்கழகம், பண்டைய தட்சசீலம் நகரத்தில் நன்கு செயல்பட்டது.[6][7][8][9][10]