![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fa/USS_Missouri_%2528BB-63%2529_flyover%252C_Tokyo_Bay%252C_2_September_1945_%2528520775%2529.jpg/640px-USS_Missouri_%2528BB-63%2529_flyover%252C_Tokyo_Bay%252C_2_September_1945_%2528520775%2529.jpg&w=640&q=50)
டோக்கியோ வளைகுடா
யப்பானிலுள்ள ஒரு குடா / From Wikipedia, the free encyclopedia
டோக்கியோ வளைகுடா (Tokyo Bay, 東京湾, Tōkyō-wan) என்பது ஜப்பானின் தெற்கு காண்டோ பிடதேசத்தில் உள்ள ஒரு வளைகுடா. இது முன்னர் ஏடோ வளைகுடா (Edo Bay, 江戸湾, Edo-wan) என்று அழைக்கப்பட்டது. இதன் மொத்த பரப்பளவு 1320 கிமீ². இது 249 கிமீ² நிலப்பரப்பையும் கொண்டுள்ளது.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5a/Tokyobay_landsat.jpg/320px-Tokyobay_landsat.jpg)
இதன் ஒரேயொரு இயற்கைத் தீவு சாரு தீவு (猿島, Saru-shima) ஆகும். இதைவிட பல செயற்கை தீவுகளும் இங்குள்ளன.
டோக்கியோவின் துறைமுகங்கள், சீபா, கவசாக்கி, யோக்கொஹாமா துறைமுகம், யோக்கோசூக்கா ஆகியன இவ்வளைகுடாவிலேயே அமைந்துள்ளன. ஜப்பானில் நிலை கொண்டுள்ள அமெரிக்கக் கடற்படைத் தளம் யோக்கோசூக்காவில் உள்ளது.
![செப்டம்பர் 2, 1945: அமெரிக்க போர் விமானங்கள் மிசூரி கப்பலின் மேலும் டோக்கியோ வளைகுடாவின் வான்பரப்பின் மீதும் பறக்கின்றன.](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fa/USS_Missouri_%28BB-63%29_flyover%2C_Tokyo_Bay%2C_2_September_1945_%28520775%29.jpg/640px-USS_Missouri_%28BB-63%29_flyover%2C_Tokyo_Bay%2C_2_September_1945_%28520775%29.jpg)
இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானின் கடைசி அதிகாரபூர்வமான சரணடைதல் டோக்கியோ வளைகுடாவில் "மிசூரி" என்ற அமெரிக்கக் கப்பலில் செப்டம்பர் 2, 1945 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. இதனையடுத்து பசிபிக் போரும், அதனுடன் சேர்ந்து இரண்டாம் உலகப் போரும் முடிவுக்கு வந்தன.