![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f4/David_mitchell.jpg/640px-David_mitchell.jpg&w=640&q=50)
டேவிட் மிச்செல்
From Wikipedia, the free encyclopedia
டேவிட் ஜேம்ஸ் ஸ்ருவர்ட் மிச்செல் (பிறப்பு: 14 ஜூலை 1974)[2][3], ஓர் ஆங்கில நடிகர், நகைச்சுவையாளர், எழுத்தாளர் மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஆவார். இவர் ரொபேட் வெப் உடன் இணைந்த மிச்செலும் வெப்பும் என்ற நகைச்சுவை இணையின் இருவரில் ஒருவராவார். இவர் 2009இல் பிரித்தானிய அகாதமியின் தொலைக்காட்சி விருதுகளில் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதைப் பெற்றார். சனல் 4 தொலைக்காட்சியில் 'பீப் ஷோ' என்ற நிகழ்ச்சியில் மார்க் கொரிகன் என்ற பாத்திரத்தில் நடித்தமைக்காக இவ்விருது கிடைக்கப்பெற்றது. இந்த இணை 'புருய்சர்', 'த மிச்செல் அன்ட் வெப் சிற்றுவேசன்', 'தற் மிச்செல் அன்ட் வெப் சவுண்ட்' மற்றும் 'தற் மிச்செல் அன்ட் வெப் லுக்' போன்ற பல நகைச்சுவை நிகழ்ச்சிகளை எழுதி நடித்துள்ளனர். ஆப்பிள் நிறுவனத்தின் 'கெற் எ மக்' என்ற விளம்பரத்தின் ஐக்கிய இராச்சியப் பதிப்பில் மிச்செலும் வெப்பும் நடித்துள்ளனர். இவர்களது முதலாவது திரைப்படமான 'மஜிசியன்ஸ்' 2007 இல் வெளிவந்தது.
டேவிட் மிச்செல் | |
---|---|
![]() | |
பிறப்பு | டேவிட் ஜேம்ஸ் ஸ்ருவர்ட் மிச்செல் 14 சூலை 1974 (1974-07-14) (அகவை 49) சலிஸ்பரி, வில்ட்சயர், இங்கிலாந்து |
இருப்பிடம் | Belsize Park, லண்டன், இங்கிலாந்து |
கல்வி | அபிங்டன் பாடசாலை |
படித்த கல்வி நிறுவனங்கள் | பீட்டர்ஹவுஸ், கேம்பிரிட்ஜ் |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1995–தற்போது |
வாழ்க்கைத் துணை | விக்டோரியா கொரென் மிச்செல் (தி. 2012) |
பிள்ளைகள் | 1 |