டெக்கான் சார்ஜர்ஸ்
From Wikipedia, the free encyclopedia
டெக்கான் சார்ஜர்ஸ் (Deccan Chargers சுருக்கமாக DC) என்பது ஐதராபாத் நகரத்தை மையமாகக் கொண்ட ஒரு செயலிழந்த ஐபிஎல் அணியாகும். [1] இந்த அணி 2008 ஆம் ஆண்டு ஐபிஎல்லின் எட்டு தொடக்க அணிகளில் ஒன்றாகவும், 2009 ஆம் ஆண்டின் வெற்றியாளராகவும் இருந்தது. இது தி டெக்கன் குரோனிக்கள் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமானது. முதல் பருவத்தில் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்த பிறகு, 2009 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற இரண்டாவது பருவத்தில் முன்னாள் ஆத்திரேலிய இலக்குக் கவனிப்பாளரும் மட்டையாளருமான ஆடம் கில்கிறிஸ்ட் தலைமையில் வெற்றி பெற்றது. ஐபிஎல்லின் முதல் மூன்று பருவங்களுக்கு கில்கிறிஸ்ட் தலைவராக இருந்தார், ரோஹித் சர்மா துணைத்தலைவராக இருந்தார். நான்காவது பருவத்தில் இருந்து, குமார் சங்கக்கார அணியை வழிநடத்தினார் மற்றும் கேமரூன் ஒயிட் துணைத் தலைவராக விளையாடினார். இந்த அணிக்கு முன்னாள் ஆத்திரேலிய வீரர் டேரன் லீமன் பயிற்சியாளராக இருந்தார். [2]
![]() | |
தனிப்பட்ட தகவல்கள் | |
---|---|
தலைவர் | ![]() |
பயிற்றுநர் | ![]() |
உரிமையாளர் | டெக்கன் குரோனிக்கள் |
அணித் தகவல் | |
நகரம் | ஹைதராபாத் |
நிறங்கள் | ![]() |
உருவாக்கம் | 2008 |
உள்ளக அரங்கம் |
|
வரலாறு | |
ஐ.பி.எல் வெற்றிகள் | 1 (2009) |
சாம்பியன்சு இலீகு வெற்றிகள் | 0,2009 ல் தகுதி |
அதிகாரபூர்வ இணையதளம்: | http://www.deccanchargers.com/ |
![]() |