![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/24/T.V._Chandran.jpg/640px-T.V._Chandran.jpg&w=640&q=50)
டி. வி. சந்திரன்
இந்திய திரைப்பட இயக்குநர் / From Wikipedia, the free encyclopedia
டி.வி.சந்திரன்(T. V. Chandran) (பிறப்பு: நவம்பர் 23, 1950) திரைப்ப்பட இயக்குநரும், திரைக்கதை ஆசிரியரும் மற்றும் நடிகருமான இவர் முக்கியமாக மலையாளத் திரைப்படங்களில் பணிபுரிகிறார். தலச்சேரியில் ஒரு மலையாளக் குடும்பத்தில் பிறந்த சந்திரன், திரையுலகில் நுழைவதற்கு முன்பு இந்திய ரிசர்வ் வங்கி ஊழியராக பணியாற்றினார். பி. ஏ. பேக்கரின் உதவி இயக்குநராக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார்.
டி. வி. சந்திரன் | |
---|---|
![]() | |
பிறப்பு | 23 நவம்பர் 1950 (1950-11-23) (அகவை 73) தலச்சேரி, மலபார் மாவட்டம், சென்னை மாநிலம், இந்தியா (தற்போதைய கேரளம், இந்தியா) |
பணி | திரைப்ப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், நடிகர். |
செயற்பாட்டுக் காலம் | 1975 முதல் தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | ரேவதி |
பிள்ளைகள் | யாதவன் சந்திரன் |
வலைத்தளம் | |
tvchandran.com |
பேக்கரின் மிகவும் பாராட்டப்பட்ட அரசியல் நாடகமான கபானி நதி சுவண்ணப்போல் (1975) படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிருஷ்ணன் குட்டி (1981) என்ற வெளியிடப்படாத திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து ஹேமாவின் காதலர்கள் (1985) என்ற தமிழ் திரைப்படத்தில் பணியாற்றினார். லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் கோல்டன் சிறுத்தை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட அலிசிண்டே அன்வேசனம் (1989) என்ற படத்திற்குப் பிறகு சந்திரன் முக்கியத்துவம் பெற்றார். இதைத் தொடர்ந்து இவரது மிகவும் பிரபலமான படம் பொந்தன் மடா (1993) என்பது வரை தொடர்ந்து பணியாற்றி வருகிறார். வரலாறு, அரசியல் மற்றும் பெண்ணியத்தின் குறிப்புகளைக் கொண்ட கலைப்படங்களுக்காக சந்திரன் மிகவும் பிரபலமானவர். கதவாசேசன் (2004), விலபங்கல்கப்புரம் (2008) மற்றும் பூமியுடே அவகாசிகல் (2012) ஆகிய படங்களில் 2002 குஜராத் கலவரங்களை அடிப்படையாகக் கொண்ட தனது முத்தொகுப்புக்காகவும் அறியப்படுகிறார். மங்கம்மா (1997), டேனி (2001) மற்றும் பாதம் ஒன்னு: ஒரு விலாபம் (2003) ஆகியவை இவரது மிகவும் புகழ்பெற்ற படங்களில் அடங்கும்.
சந்திரன் இந்தியத் திரைப்படத்துறையின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார். மேலும் இவரது சிக்கலான-கட்டமைக்கப்பட்ட கலைப்படங்களுடன் இணை சினிமாவில் புரட்சியை ஏற்படுத்திய பெருமைக்குரியவர். சந்திரன் ஆறு தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் பத்து கேரள மாநில திரைப்பட விருதுகள் உட்பட பல திரைப்பட விருதுகளை வென்றுள்ளார் . இவை தவிர, பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.