பிலிப்பீன்சில் அமைந்துள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia
தவோ நகரம் (Davao City) என்பது பிலிப்பீன்சின் மின்டனாவில், அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். 2010 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு அமைய இதன் மக்கள் தொகை 1,449,296 ஆகும்.[1] ஆகையால் இது பிலிப்பீன்சின் நான்காவது மிகப்பெரிய சனத்தொகை கூடிய நகரமாகும், அத்துடன் மின்டனாவின் மிகப்பெரிய சனத்தொகையைக் கொண்ட நகரமாகும். இதன் பரப்பளவு 2,444 சதுர கிலோமீற்றர் ஆகும்.[2][3] பிலிப்பீன்சின் பரப்பளவில் மிகப்பெரிய நகரம் இதுவாகும்.
டவாவோ நகரம் நில வழியாக மணிலாவிற்கு தென்கிழக்கில் சுமார் 588 மைல் (946 கி.மீ) தொலைவிலும் கடல் வழியாக 971 கிலோமீற்றர் தூரத்திலும் அமைந்துள்ளது. இந்த நகரம் டவாவோ வளைகுடாவின் வடமேற்கு கரையில் தென்கிழக்கு மிண்டானாவோவில் சமல் தீவுக்கு எதிரே அமைந்துள்ளது. டவாவோ நகரம் சுமார் 2,443.61 சதுர கிலோமீற்றர் (943.48 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டது. மேற்கே மலைப்பாங்கான பிரதேசமும் (மரிலோக் மாவட்டம்), நகரின் தென்மேற்கு முனையில் பிலிப்பைன்ஸின் மிக உயரமான மலையான மவுண்ட் அப்போவும் அமைந்துள்ளது. சனாதிபதி மானுவேல் எல். கியூசன் மலைத்தொடரை சுற்றியுள்ள தாவரங்களையும், விலங்கினங்களையும் பாதுகாப்பதற்காக மவுண்ட் அப்போ தேசிய பூங்காவை (மலையும் அதன் சுற்றுப்புறமும்) திறந்து வைத்தார்.[4] டவாவோ நதி நகரத்தின் முதன்மை கழிவு நீர் கால்வாய் ஆகும். இந்த நகரம் ஆசிய- பசுபிக் எரிமலை வளையத்தில் அமைந்துள்ளது. சில பூகம்பங்களால் ஏற்பட்டுள்ளன அவற்றில் பெரும்பாலானவை சிறியவை. நகரத்திலிருந்து தென்மேற்கே 40 கிலோமீட்டர் (25 மைல்) தொலைவில் அமைந்துள்ள மவுண்ட, அப்போ மலையானது செயற்பாடற்ற எரிமலை ஆகும்.
தட்பவெப்ப நிலைத் தகவல், Davao City, Philippines | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 30.9 (87.6) |
31.2 (88.2) |
32.3 (90.1) |
33.0 (91.4) |
33.0 (91.4) |
31.6 (88.9) |
31.4 (88.5) |
31.6 (88.9) |
31.8 (89.2) |
32.1 (89.8) |
32.1 (89.8) |
31.4 (88.5) |
31.9 (89.4) |
தினசரி சராசரி °C (°F) | 26.4 (79.5) |
26.6 (79.9) |
27.3 (81.1) |
28.0 (82.4) |
28.0 (82.4) |
27.2 (81) |
27.0 (80.6) |
27.1 (80.8) |
27.3 (81.1) |
27.4 (81.3) |
27.4 (81.3) |
26.9 (80.4) |
27.2 (81) |
தாழ் சராசரி °C (°F) | 21.9 (71.4) |
22.0 (71.6) |
22.3 (72.1) |
23.0 (73.4) |
23.0 (73.4) |
22.9 (73.2) |
22.7 (72.9) |
22.7 (72.9) |
22.8 (73) |
22.8 (73) |
22.7 (72.9) |
22.4 (72.3) |
22.6 (72.7) |
பொழிவு mm (inches) | 114.7 (4.516) |
99.0 (3.898) |
77.9 (3.067) |
144.9 (5.705) |
206.7 (8.138) |
190.1 (7.484) |
175.9 (6.925) |
173.2 (6.819) |
180.1 (7.091) |
174.8 (6.882) |
145.7 (5.736) |
109.7 (4.319) |
1,792.7 (70.579) |
சராசரி பொழிவு நாட்கள் | 17 | 14 | 12 | 11 | 15 | 19 | 18 | 17 | 17 | 19 | 20 | 20 | 199 |
ஆதாரம்: PAGASA[5] |
டாவாவோ நகரம் கோப்பனின் காலநிலை வகைப்பாட்டின் படி வெப்பமண்டல மழைக்காடு காலநிலையை கொண்டுள்ளது. மாதத்தின் சராசரி வெப்பநிலை எப்போதும் 26 °C (78.8 °F) இற்கு அதிகமாகவும், மாதத்தின் சராசரி மழைவீழ்ச்சி 77 மில்லிமீற்றருக்கு (3.03 அங்குலம்) அதிகமாகவும் காணப்படும்.
இந்த நகரத்தில் விவசாயம் பொருளாதாரத்தில் முக்கிய இடத்தை பெறுகின்றது. அன்னாசி, காப்பி மற்றும் தேங்காய் தோட்டங்களை உள்ளடக்கிய மிகப்பெரிய பொருளாதார துறையாக விவசாயம் உள்ளது. மாம்பழம், வாழைப்பழங்கள், தேங்காய் பொருட்கள், அன்னாசிப்பழம், பப்பாளி, மங்குசுத்தான் மற்றும் கொக்கோ ஆகிய பழங்களை ஏற்றுமதி செய்யும் தீவின் முன்னணி நகரம் ஆகும். இங்கு உருவாக்கப்பட்ட மலகோஸ் அக்ரிவென்ச்சர்ஸ் கார்ப்பரேஷனின் மலகோஸ் சாக்லேட் உலகின் முன்னணி கைவினைஞர் சாக்லேட் ஆகும். உள்ளூர் நிறுவனங்களான லோரென்சோ குழுமம், அன்ஃப்லோ குழுமம், ஏஎம்எஸ் குழு, சாரங்கனி வேளாண் கார்ப்பரேஷன் மற்றும் விஸ்கயா பிளான்டேஷன்ஸ் இன்க் ஆகியவை செயற்படுகின்றன. இங்கு பன்னாட்டு நிறுவனங்களான டோல், சுமிஃப்ரு / சுமிட்டோமோ, டெல் மாண்டே ஆகியவற்றின் பிராந்திய தலைமையகம் அமைந்துள்ளன.[6]
டாவாவோ வளைகுடா பல மீனவர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறது. பெரும்பாலான மீன் பிடிப்புகள் டோரில் உள்ள மீன்பிடித் துறைமுகத்தில் நடைப்பெற்று பின்னர் அவை நகரத்திற்குள் உள்ள பல சந்தைகளில் விற்கப்படுகின்றன.[7] இந்த நகரம் மிண்டானாவோவின் முக்கிய வர்த்தக மற்றும் தொழில் மையமாகவும் செயற்படுகின்றது. டாவாவோ நகரத்தை தளமாகக் கொண்ட ஒரு பன்னாட்டு எண்ணெய் நிறுவனமான பினீக்ஸ் பெற்றோலியம் இயங்குகின்றது. மேலும் இந்நகரம் ஏராளமான உற்பத்தி நிலையங்களை கொண்டுள்ளது.
மவுண்ட அப்போ மலையிலும், மலையைச் சூழவுள்ள பகுதிகளிலும் ஏராளமான பறவையினங்கள் வாழ்கின்றன. அவற்றில் 111 இனங்கள் இப்பகுதிக்கு உரித்தானவை ஆகும். உலகின் மிகப்பெரிய கழுகு இனங்களில் ஒன்றான பிலிப்பைன்ஸ் கழுகுகள் இங்கு வசிக்கின்றன. பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய பறவையான இந்த கழுகு இனம் அருகி வரும் அபாயத்திற்கு உட்பட்டுள்ளன. பிலிப்பைன்ஸ் கழுகுகள் அறக்கட்டளை நகரத்திற்கு அருகில் அமைந்துள்ளது.[8] இங்கு காணப்படும் இப்பகுதிக்கு உரித்தான "பிலிப்பீன்சு மலர்களின் இராணி" என்று அழைக்கப்படும் ஆர்க்கிட் இனமானது நாட்டின் தேசிய பூக்களில் ஒன்றாகும். இப்பகுதியில் முள்நாறிகளும், மங்குசுத்தான் என்பனவும் ஏராளமாக வளர்கின்றன. [சான்று தேவை]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.