மேஜர் தேசமான்ய டங்கன் உவைட் (Duncan White, 1 மார்ச் 1918 – 3 சூலை 1998) இலங்கை விளையாட்டு வீரரும்,[2] படை வீரரும் ஆவார். இவர் இலண்டன், 1948 ஒலிம்பிக் போட்டிகளில் 400 மீ தடை ஓட்டப்போட்டியில் இலங்கை சார்பாகக் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் பெற்று சாதனை படைத்தவர். தடகளப் போட்டிகளில் ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற முதலாவது தெற்காசியவர் இவரே ஆவார். இவருக்குப் பின்னர் இலங்கையைச் சேர்ந்த சுசந்திகா ஜயசிங்க, 2000 ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் பெற்றார்.[3][4]

விரைவான உண்மைகள் தனிநபர் தகவல், முழு பெயர் ...
தேசமான்ய
டங்கன் உவைட்
Duncan White

MBE, ED
தனிநபர் தகவல்
முழு பெயர்டங்கன் எம். உவைட்[1]
பிறப்பு(1918-03-01)மார்ச்சு 1, 1918 [1]
லத்பந்துர, களுத்துறை, இலங்கை[1]
இறப்பு3 சூலை 1998(1998-07-03) (அகவை 80)[1]
நனீட்டட், வாரிக்சயர், பெரிய பிரித்தானியா[1]
22 சூன் 2015
இராணுவப் பணி
சார்புஇலங்கை இலங்கை
சேவை/கிளைஇலங்கைப் பாதுகாப்புப் படை,
இலங்கைத் தரைப்படை
படைப்பிரிவுஇலங்கைக் காலாட்படை
இற்றைப்படுத்தியது.
மூடு

வாழ்க்கைக் குறிப்பு

டங்கன் உவைட் பிரித்தானிய இலங்கையில் களுத்துறையில் பிரித்தானிய வம்சாவளிக் குடும்பம் ஒன்றில் ஜோன் பெர்னார்ட் உவைட், செசீலியா ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். கண்டி, திரித்துவக் கல்லூரியில் கல்வி பயின்றார்.[3] 1952 இல் அஞ்சலா சீபல் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஆறு பிள்ளைகள்.[4] 1998 இல் இங்கிலாந்தில் காலமானார்.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.